ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது

Post by ayyasamy ram Fri Jul 26, 2019 6:14 am

புதுடெல்லி,

திருமணமான முஸ்லிம் ஆண், தன் மனைவியை 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, ‘‘இந்த நடைமுறை சட்ட விரோதம்’’ என 2017–ம் ஆண்டு, ஆகஸ்டு 17–ந் தேதி தீர்ப்பு அளித்தது. அத்துடன், ‘முத்தலாக்’ நடைமுறைக்கு தடை விதித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான மசோதா, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் கொண்டு வந்து, அதே ஆண்டு டிசம்பர் 28–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 27–ந் தேதி மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அப்போதும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. தொடர்ந்து மக்களவையின் ஆயுளும் கடந்த மே மாதம் முடிந்தது. இதனால் இந்த மசோதா காலாவதியானது.

இந்தநிலையில், ‘முத்தலாக்’ தடை மசோதா 3–வது முறையாக மக்களவையில், கடந்த ஜூன் மாதம் 21–ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சம், தடையை மீறி ‘முத்தலாக்’ நடைமுறையை பின்பற்றும் ஆணுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதுதான்.

நேற்று இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘‘முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னரும், பெண்கள் அதே நடைமுறையை பின்பற்றி விவாகரத்து செய்யப்படுகிறபோது, ஆண், பெண் சமத்துவத்துக்கும், நீதிக்கும் இந்த மசோதா கண்டிப்பாக தேவை’’ என குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி, ‘‘பாகிஸ்தான், மலேசியா உள்பட 20 முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கிறபோது, மதச்சார்பற்ற நமது நாட்டில் நாம் ஏன் முத்தலாக்கை தடை செய்யக்கூடாது?’’ என கேள்வி எழுப்பினார்.

ஆனால் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி எம்.பி. என்.கே.பிரேமசந்திரா, முஸ்லிம் சமூகத்தினரை குறிவைத்து உள்நோக்கத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் செயல் திட்டத்தின்கீழ் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக சாடினார். '

இந்து, கிறிஸ்தவ மதங்களில் விவாகரத்துக்கு தண்டனை இல்லை என்கிறபோது,
இந்த மசோதா முஸ்லிம் பெண்களைப் பாதுகாப்பதற்கு அல்ல; முஸ்லிம்
கணவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்குத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது
என்றும் குறை கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவித் பேசும்போது, முஸ்லிம் ஆண்களை சிறைக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by ayyasamy ram Fri Jul 26, 2019 6:16 am



முகமது ஜாவித்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லேகி பேசினார். அவர் இந்த சட்டம், பாரதீய ஜனதா கட்சியின் செயல் திட்டம் அல்ல; நாட்டின் செயல்திட்டம். பிரதமர் நரேந்திரமோடி ஒரு இந்துவாக இருந்து கொண்டு, முஸ்லிம்களைப்பற்றி சிந்திப்பதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த சட்டத்தால் இஸ்லாமிய மதம் ஆபத்தில் இருக்கிறது என்று சில உறுப்பினர்கள் கூறுவது முற்றிலும் தவறானது என கூறினார்.

தொடர்ந்து மீனாட்சி லேகி பேசும்போது, ‘‘நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினர் பெண்கள்தான், அவர்களுக்கு பாலின நீதியை நாம் கொடுப்போம்’’ என்று கூறினார்.

பாரதீய ஜனதாவின் கூட்டணிக்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இந்த மசோதாவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டது. அதன் உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன்சிங் பேசுகையில், ‘‘எங்கள் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. இது சமூகத்தின் மனங்களில் நம்பிக்கையின்மையை உருவாக்கும். முஸ்லிம் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதுதான் அரசு செய்ய வேண்டிய பணி’’ என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியபோது, ‘‘1996–ல் இருந்து எங்கள் கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. இடையில் சில ஆண்டுகள் இல்லாமல் போனாலும், இப்போது கூட்டணியில் இருக்கிறது. சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அரசை ஆதரிக்க மாட்டோம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இந்த மசோதாவை நாங்கள் புறக்கணிக்கிறோம்’’ என கூறி தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் பேசும்போது, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவரை பார்த்து சில கருத்துகளை கூறினார். அப்போது சபையை வழிநடத்திய பாரதீய ஜனதா உறுப்பினர் ரமாதேவி, அவரை சபாநாயகர் இருக்கையை நோக்கி பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது அசம்கான், அவரைப் பற்றி சர்ச்சைக்கு இடம் அளிக்கிற வகையில் விமர்சித்தார். இது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத்தும், அர்ஜூன் ராம் மேக்வாலும், அசம்கானை மன்னிப்பு கேட்குமாறு கூறுங்கள் என்று ரமாதேவியிடம் கூறினர். அதை ரமா தேவி கூறியபோது அசம்கான், ‘‘நான் உங்களை அவமரியாதையாக கூறவில்லை. நீங்கள் என் அன்பு சகோதரி மாதிரி’’ என்றார். அவரது கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கானுக்கு ஆதரவாக எழுந்தார்.

அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா வந்து தனது இருக்கையில் அமர்ந்து இரு தரப்பையும் கவனித்தபோது, தனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி வெளிநடப்பு செய்தார்.

என்னை அவமதிக்கிறபோது நான் பேச முடியாது என்று சொல்லி அசம்கானும் வெளியேற, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் என இரு கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாவை ஆதரித்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி
முக்தர் அப்பாஸ் நக்வி பேசினார். அவர், ‘‘இந்த மசோதா, அரசியல் சாசனத்தின் அர்ப்பணிப்பு; முஸ்லிம் பெண்களுக்கு உரிமை அளிக்கும் நோக்கத்தை கொண்டது.
எந்த அழுத்தத்துக்கும் இடம் தராமல் அனைவரும் மசோதாவை ஆதரிக்க வேண்டும்.

இந்த நாடு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த நாடு ‌ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலோ, பிற மத சட்டங்களின் அடிப்படையிலோ இயங்கவில்லை. எந்த மதத்தாலும் இந்த நாடு வழிநடத்தப்படவில்லை’’ என உறுதிபட கூறினார்.

‘‘கணவன் சிறைக்கு போய் விட்டால், மனைவியையும், குடும்பத்தையும் யார் கவனிப்பார்கள் என்று இங்கே கேள்வி கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், சிறைக்கு போகிற வகையில், நீங்கள் ஏன் அந்த செயலை செய்ய வேண்டும்?’’ எனவும் வினவினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அதன் உறுப்பினர் மிதுன் ரெட்டி பேசும்போது, ‘‘தற்போதைய வடிவில் இந்த
மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஆண்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது மிகவும் ஆட்சேபகரமானது’’ என கூறினார்.

அதே கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய்
எதிரொலித்தார். அத்துடன் மசோதாவை கூட்டு தேர்வுக்குழு பரிசீலனைக்கு
அனுப்ப வேண்டும் என கோரினார்.

மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சோனியா காந்தி தலைமையில் வெளிநடப்பு செய்ய, தி.மு.க. உறுப்பினர்களும் அவர்களை பின்தொடர்ந்தனர்.

‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை என்ற பிரிவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இறுதியில் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 302 பேரும், எதிராக 78 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையினர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேறியது. அதுவும் 2017, 2018, 2019 என 3 ஆண்டுகளில் தலா ஒரு முறை நிறைவேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இந்த மசோதா, மாநிலங்களவைக்கு செல்லும். அங்கு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கூட்டத்தொடரிலேயே மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by ayyasamy ram Fri Jul 26, 2019 6:32 am




புதுடில்லி:
''தேர்தல் அறிக்கையில் கூறிய மகளிர் மசோதா, இன்னும்
பட்டியலிடப்படவில்லை. கும்பல் கொலை மற்றும் ஆணவக்
கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவதே இப்போதைய
தேவை,'' என, துாத்துக்குடி தொகுதி, தி.மு.க., - எம்.பி.,
கனிமொழி, லோக்சபாவில் பேசினார்.

லோக்சபாவில் முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதம்
நடந்தது. அப்போது, கனிமொழி பேசியதாவது:

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.
தினமும் ஒரு ஆணவக் கொலை நடந்து கொண்டு இருக்கிறது.
அதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், கும்பல் கொலையை தடுக்கவும் சட்டம் இயற்ற
வேண்டும். இவைதான், இந்த நேரத்தில் நமக்கு தேவையான
சட்டங்கள்.

பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த, மகளிர்
இடஒதுக்கீடு மசோதா என்ன ஆனது? இரண்டாவது முறையாக
ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், மகளிர் மசோதா தாக்கல்
செய்வது இன்னும் பட்டியலிடப்படவில்லை.

இதுபோன்ற, அவசியமான மசோதாக்கள் இருக்கும்போது,
'முத்தலாக்' மசோதா மீது, அரசு ஏன் இவ்வளவு அக்கறை
காட்டுகிறது.இவ்வாறு, கனிமொழி பேசினார்.
-
---------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by T.N.Balasubramanian Fri Jul 26, 2019 9:14 am

முஸ்லீம் பெண்கள் அவதி பட்டால் பரவாயில்லையா?
சரி சரி பெண்களும் 2 /3 கணவர்களை வைத்துக்கொள்ளலாம்.
ஆண்களும் 2 /3 மனைவிகளை வைத்துக்கொள்ளலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by T.N.Balasubramanian Fri Jul 26, 2019 9:14 am

முஸ்லீம் பெண்கள் அவதி பட்டால் பரவாயில்லையா?
சரி சரி பெண்களும் 2 /3 கணவர்களை வைத்துக்கொள்ளலாம்.
ஆண்களும் 2 /3 மனைவிகளை வைத்துக்கொள்ளலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 9:53 am

முஸ்லிம் பெண்கள் படும் அவதி இவருக்கு தெரியவில்லை போல் தோன்றுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by Guest Fri Jul 26, 2019 12:39 pm

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி 1571444738
வாழ்த்துகள்.அனைவருக்குமான பொது சட்டம் வரவேண்டும். மதம் வீட்டிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் மட்டுமே இருப்பது பல பிரசனைகளுக்கு தீர்வாகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 1:28 pm

நல்லதொரு காரியம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by T.N.Balasubramanian Fri Jul 26, 2019 6:07 pm

படிப்பதற்கு இலகுவாக இருக்கும் பொருட்டு,"எதிர் கட்சிகளின் எதிர்ப்புக்கு.............." + "மகளிர் மசோதா" ஒன்றாக இணைக்கப்பட்டது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by Guest Fri Jul 26, 2019 7:57 pm

ஒண்ணுக்கே வழியில்லை, 2/3 மனைவிகளா?
avatar
Guest
Guest


Back to top Go down

மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி Empty Re: மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
» கனிமொழி ஜாமின் மனு: சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி
» பிஎம் கேர்ஸ் நிதி எங்கே? ராகுல் கேள்வி
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum