ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் !

Go down

குரு பக்தி -  திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் ! Empty குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் !

Post by krishnaamma Thu Jul 18, 2019 11:03 am

குரு பக்தி !

திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் !

குரு பக்தி -  திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் ! EHeY8mnqTLiJnkFYtX8l+ananthazhwan-thirumalai_15368

 
திருப்பதி திருமலை - நேரம் அதிகாலை , நான்கு மணி

திருமலை வாசனுக்கு அன்றைய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது 

சிலையாக இருந்த திருமால் பேச துவங்கினார்

அர்ச்சகரிடம் , கேசவா அனந்த நம்பி எங்கே ?! (எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் கேட்டார் திருமால் ) 

கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜ உடையாரின் உத்தரவின் படி தங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வதற்கு பூக்கள் பறிக்க நந்தவனம் சென்றுள்ளார் 
ஸ்வாமி

திருமால் :- கேசவா , நீர் நந்தவனம் சென்று நம்பியை நான் அழைத்தேன் என்று உடன் அழைத்து வாரும் 

கேசவன் :- ஆகட்டும் ஸ்வாமி 

( நந்தவனம் சென்ற கேசவன் , நம்பி உன்னை ஸ்வாமி அழைத்து வர சொன்னார் என்று சொன்னார் )

நம்பி  :- கேசவரே , சற்று பொறுங்கள் , இன்று ஸ்வாமிக்கு சூட வேண்டிய மலர்களை பறித்து முடித்ததும் கிளம்பலாம்.

கேசவன் :- ஆகட்டும் நம்பி , அரைமணி நேரம் கழித்து இருவரும் திருமாலுக்கு முன் நின்றனர் 

திருமால் :- நம்பி , நான் உன்னை அழைத்ததும் வராமல் ஏன் அரை மணி நேரம் தாமதமாக வந்துள்ளாய் ?! 
கேசவன் ,  நான் அழைத்ததை உன்னிடம்  சொல்ல வில்லையா ?! 

நம்பி :- ஸ்வாமி , ஆனால் என் குரு ஸ்ரீ இராமானுஜ உடையார் எனக்கு இட்ட கட்டளை என்னவெனில் நீ தினமும் உங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வது தான். 

அதை சிறிதும் பிசகாமல் முடித்த பின்பு தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன் ஸ்வாமி என்று கூறி கொண்டே திருமாலுக்கு மாலை தொடுத்து சூடினார்

திருமால்  :- சிரித்து கொண்டே , அதற்காக நான் அழைத்தால் கூட நீ தாமதமாக தான் வருவாயோ ?! 

உன் குருவுக்கும் ஏன் இந்த ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் யாமே கடவுள் அதை அறிவாய் அல்லவா , நீ இப்பொழுது.

நம்பி :- சிரித்து கொண்டே , ஸ்வாமி நீங்கள் ஈரேழு பதினான்கு லோகத்தையும் காத்து அருள்வதால் உம்மை கடவுள் என்கிறோம். 

அது உமது பணி மற்றும் கடமை. அதைப் போலவே எமது குருவின் கட்டளைக்கு இணங்க , உமக்கு மலர் கைங்கர்யம் செய்வது எனது பணி , எனது கடமை
 
ஒரு கடவுளுக்கு தம் கடமை எவ்வளவு முக்கியமோ , அதே போல் , அதே அளவு ஒரு சீடனுக்கும் தன் குருவின் கட்டளை மிகவும் முக்கியம்  அல்லவா. உமக்கு பூஜைக்கு நேரம் ஆகி விட்டது , நான் வருகிறேன் என்று நடையை காட்டினார் நம்பி.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரு பக்தி -  திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் ! Empty Re: குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் !

Post by krishnaamma Thu Jul 18, 2019 11:04 am

மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் வழக்கம் போல் நம்பி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கச் சென்றார்.

திருமால் :-  ஆதிசேஷனை பார்க்க , ஆதிசேஷன் ஒரு பூநாகமாக உருவெடுத்து நம்பி பூ பறிக்கும் பூவுக்குள் ஒளிந்து நம்பியின் கையை கடித்து மறைந்து விட்டான் 

பூநாகம் கடித்ததும் கையில் இரத்தம் கசியக் கசிய பூக்களைப் பறித்து , அதில் தனது கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பூக்கள் மேல் படாமல் , பூக்களை பறித்து , ஆலயம் வந்து திருமால் முன் நின்று பூ தொடுத்தார் 

திருமால் :- மீண்டும் பேச துவங்கினார்

நம்பி கையில் இரத்தம் வழிகிறது பார் , பற்று போட்டு பின் எனக்கு கைங்கர்யம் செய்யலாமே

நம்பி :- ஸ்வாமி , எனக்கு குருவின் கட்டளையே மிகவும் முக்கியம் பின்பு தான் அனைத்தும். 

தங்களுக்கு பூ பறிக்கும் போது , ஒரு பூ நாகம் என்னை  தீண்டி விட்டது. அதனால் சிறிது இரத்தம் வேறொன்றும் இல்லை ஸ்வாமி

திருமால் :- சரி கடித்த நாகம் வல்லமையற்ற விஷமாக இருப்பதால் , நீர் மலர் கைங்கர்யம் செய்ய முடிந்தது. 

ஒரு வேளை கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்தால் நீர் இறந்தல்லவா போயிருப்பீர்.

உமது குருவின் கட்டளையை எப்படி நீர் நிறைவேற்றுவீர் 

நம்பி :- அப்போதும் என் குருவின் கட்டளையை நிறைவேற்றுவேன் ஸ்வாமி

திருமால் :- எப்படி ?!

நம்பி :- ஸ்வாமி ,  ஒரு வேளை தாங்கள் கூறியது போல் கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்து , நான் இறந்தால் கூட , என் குருவின் ஆசியுடன் உங்களுக்கு வைகுண்டம் வந்து கைங்கர்யம் செய்வேன் ஸ்வாமி 

திருமால் விடாமல் ஒரு வேளை நான் நீர் வைகுண்டம் வர அனுமதிக்க விட்டால் ?! நீர் என்ன செய்வீராம் ?!

நம்பி :- ( சிரித்து கொண்டே ) நீர் யார் அய்யா ?!  எமக்கு அனுமதி தராமல் போவதற்கு ?! 

என் குருவின் ஆசி இருந்தால் , எம்மால் எங்கும் செல்ல முடியும்.
எல்லாம் செய்யும் வல்லமை பெற்றவர் எம் குரு.
 
எல்லாம் செய்யும் வல்லமை உடையவர் என்பதாலே , அவர் உடையவர் என்று அழைக்க படுகிறார்

மேலும் தாய் தந்தையைப் போற்றி காக்கும் பிள்ளைக்கும் , குருவின் கட்டளையை சிரம் மேற்கொண்டு சேவை செய்யும் சீடனுக்கும் மோட்சமும் முக்தியும் கிடைக்கப் பெற்று , வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று நீரே நியதி வகுத்துள்ளீர் 

அப்படி இருக்க , நீர் வகுத்த நியதியை நீரே மீறமுடியுமா என்ன ?!  என்று கேள்வி மேல் கேள்வி கேட்க , வாய் அடைத்து போனார் 

திருமால் :- ம்ம்... இராமானுஜன் தனக்கு சரியான ஆளைத் தான் , மலர் கைங்கர்யம் செய்ய வைத்து உள்ளான் என்று நினைத்து கற்சிலைக்குள் உறைந்து போனார் திருமால்

குரு பக்திக்கு இந்தக் கதையை விட வேறு ஒரு சிறந்த சான்றும் உண்டோ ?!

(கு - இருட்டு

ரு - அகற்றுபவர்)

(குரு என்பவர் , நம் மனதில் உள்ள அறியாமை ஆகிய இருட்டை அகற்றுபவரே குரு என்பவர் ஆவார் )

நன்றி வாட்சப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum