ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

Go down

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Empty மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

Post by ayyasamy ram Sat Jul 13, 2019 8:02 am

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு 201907130241243799_Opposition-to-the-neutrino-program_SECVPF
-

தேனி,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம்
ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள
அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ
ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணுசக்தி
ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்
துறையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

நியூட்ரினோ ஆய்வில் வெற்றி பெற்றால் பிரபஞ்சம் எப்படி
உருவானது? என்பதை கண்டறிய வாய்ப்பு இருப்பதாகவும்,
எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை பெற முடியும்
என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி அதிர்ச்சி,
எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை
முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதற்கு இந்த ஆராய்ச்சி பலன் அளிக்கும் என்பதும்
விஞ்ஞானிகளின் கருத்து.

எதிர்ப்பு

அதே நேரத்தில் இந்த திட்டத்துக்கு விவசாயிகள், இயற்கை
ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படும் என்றும், விளை நிலங்கள் பாதிக்கப்படும்
என்றெல்லாம் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.

பசுமைத் தீர்ப்பாயம் இந்த திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும்
சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து
2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.


இந்நிலையில், இந்த
ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் உறுதி
அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு
மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளது. இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது. எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது’
என்று கூறியுள்ளார்.

போராட்டம்

இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள்
வலியுறுத்தி வரும் நிலையில், இதை செயல்படுத்த மத்திய
அரசு உறுதியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில்
கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில்
ஈடுபட போவதாக தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள்
அறிவித்துள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Empty Re: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

Post by ayyasamy ram Sat Jul 13, 2019 8:14 am

மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு
-
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு 201907130205258995_The-central-government-has-approved-the-hydrocarbon-project_SECVPF
-
புதுச்சேரி,

புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.


இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Empty Re: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

Post by Guest Sat Jul 13, 2019 11:21 am

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு 1571444738
எதிர்ப்பது மட்டும் எதிர்க்கட்சி அல்ல.நல்லதை ஆதரிக்க வேண்டும்.
ஆனால்...............

ஹைட்ரொகார்பன், ஆயில் கழிவுகளால் பாழடைந்த நைஜீரிய டெல்டா ஆற்றுப் படுக்கைகளை/பகுதிகளை துப்பரவு செய்ய 30-40 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் மீண்டும் பயன்படும் நிலமாக மாறுமா என ஐயம் தெரிவிக்கிறார்கள்.ஆயில் ஆய்வுகளை நடத்தி முடித்துவிட்டு சத்தமில்லாமல் வெளியேறிய Shell நிறுவனம்.
(UN/ Amnesty)

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Niger-delta-clean-up-e1464800291393

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Niger

ஒவ்வொரு வினாடியும் நமது உடலை கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் முத்தமிட்டு செல்கின்றன. அவற்றால் பாதிப்போ அல்லது ரேடியோ ஆக்டிவோ கிடையாது.
ஆனால் நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இயற்கை வளங்கள் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு Empty Re: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு 1 ரூவா கூட தரலை: ஜெ
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
» 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum