ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்!

Go down

சென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்! Empty சென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்!

Post by ayyasamy ram Thu Jun 27, 2019 8:46 pm


சென்னை:
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி சென்னை,
முன்னணியில் இருந்தாலும் கூட, அதனால் தமிழர்கள் பெரிய
அளவில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.

ஏன் என்றால், ஐஐடி சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில்
பி.டெக் -எம் டெக் (இரட்டை பட்டப்படிப்பு) அல்லது எம்.டெக்
பயிலும் மாணவர்களில் 20 சதவீதம் பேர் கூட தமிழர்கள் இல்லை
என்பதே.

மீதமிருக்கும் அனைத்து மாணவர் சேர்க்கை இடங்களும்
பெரும்பாலும் ஆந்திரா, தெலங்கானா மாநில மாணவர்களாலேயே
நிரப்பப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரம், தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் இ. முரளிதரன் எழுப்பியிருந்த கேள்விக்கு விடையாகக்
கிடைத்துள்ளது.

அதாவது பி.டெக். பாடப்பிரிவில் வெறும் 16% தமிழக மாணவர்கள்
மட்டுமே சேர்ந்துள்ளனர். அதே சமயம், ஆந்திரா, தெலங்கானா
மாநிலங்களைச் சேர்ந்த 40% மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கை
பெற்றுள்ளனர்.

இதேப்போல, பி.டெக்-எம்.டெக் (இரட்டைப் பட்டம்) பாடப்பிரிவில்
30 சதவீதமும், எம்.டெக் பாடப்பிரிவில் 25 சதவீதமும் ஆந்திரா
மற்றும் தெலங்கான மாநில மாணவர்களே சேர்ந்துள்ளதாகவும்,
அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக 18 சதவீத தமிழக
மாணவர்களே சேர்க்கை பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் பிற ஐஐடி நிறுவனங்களிலும்
கூட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்
அதிகம் பேர் இடம் பெறுகிறார்கள். இது குறித்து சரியான புள்ளி விவரம்
இதுவரை கிடைக்கவில்லை.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் நான் இது
குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளேன்.
ஒவ்வொரு ஐஐடியின் மாணவர் சேர்க்கை விகிதத்தையும் தனித்தனியாகக்
கோரியுள்ளேன் என்கிறார் முரளிதரன்.

எனவே, ஒவ்வொரு ஐஐடியும் அமைந்திருக்கும் மாநிலங்களின்
மாணவர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவர் சேர்க்கைக்கான
இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

முன்பு இந்தியாவில் வெறும் 5 ஐஐடிக்கள்தான் இருந்தன. தற்போது
23 ஐஐடிக்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மாநிலத்துக்கு ஒன்று
என்ற விகிதத்தில் உள்ளது. எனவே, ஐஐடி அமைந்திருக்கும் மாநிலத்தைச்
சேர்ந்த மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி
செய்ய வேண்டும் என்று முரளிதரன் வலியுறுத்துகிறார்.

ஏராளமான மக்களின் வரிப்பணத்தில்தான் ஐஐடிக்கள் நிறுவனப்
படுகின்றன. எனவே, ஒரு மாநிலத்தில் அமையும் ஐஐடியில், அந்த
மாநில மாணவர்கள் பயன்பெறுவது நிச்சயம் உறுதி செய்யப்பட
வேண்டும் என்று அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்
பாலகுருசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா கூறுகையில்,
மண்டல பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையில் பயன்
படுத்திய நடைமுறையை ஐஐடிக்கள் பின்பற்ற வேண்டும். 2002ம்
ஆண்டுக்குப் பிறகு அனைத்து மண்டல பொறியியல் கல்லூரிகளும்,
மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியோடு செயல்படும் வரை
50 சதவீத மாணவர் சேர்க்கையை கல்லூரி அமைந்திருக்கும் மாநில
மாணவர்களுக்காக ஒதுக்கியிருந்தது.

எப்போது மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படும் என்ஐடியாக
மாறியதோ அதுமுதல் இந்த நடைமுறை கைவிடப்பட்டது என்றார்.
-
------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum