ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

3 posters

Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by M.Jagadeesan Wed Jun 19, 2019 1:17 pm

திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
==============================
எட்டு வகையான மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் . அவையாவன :

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப .

இவற்றுள் நகை என்பது சிரிப்பு . அழுகை என்பது அவலம் . இளிவரல் என்பது இழிபு . மருட்கை என்பது வியப்பு . அச்சம் என்பது பயம் . பெருமிதம் என்பது வீரம் . வெகுளி என்பது சினம் . உவகை என்பது காமம் முதலான மகிழ்ச்சி .

மெய்ப்பாடுகளை சுவை என்றும் குறிப்பர் . ஒவ்வொரு சுவையும் பிறப்பதற்கு நான்கு நிலைக்களன்களை தொல்காப்பியர் காட்டியுள்ளார் . ஆக எட்டு சுவைகள் பிறப்பதற்கு முப்பத்திரண்டு நிலைக்களன்களை தொல்காப்பியர் சுட்டுகிறார் . இந்த எண்வகை மெய்ப்பாடுகளைத் திருவள்ளுவர் எவ்வாறு தம் நூலில் காட்டியுள்ளார் என்று விரிவாகக் காண்போம் .

நகை :
=======
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப .

சிரிப்பானது எள்ளல் , இளமை , பேதைமை , மடமை ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் என்று ஆசிரியர் கூறுகிறார் .

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் . ( 1040 )

போதிய நிலத்தை வைத்துக்கொண்டு , சிலர் அதில் பயிரிடாமல் சோம்பியிருப்பர் . யான் வறியவன் என்று சொல்லித் திரிவர் . இப்படிப்பட்ட சோம்பேறிகளைக் கண்டு அந்த நிலமகளே எள்ளி நகையாடுவாளாம் .

இது எள்ளல் பற்றித் தோன்றிய நகையாம் .

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் . ( 1094 )

தலைவனை நேருக்கு நேர் நோக்க முடியாமல் நாணம் தடுக்கிறது . அவன் தன்னை நோக்கும்போது , அவள் நிலத்தை நோக்குகிறாள் . அவன் தன்னைப் பார்க்காத போது , அவனழகைக் கண்டு ரசித்து தன்னுள் மெல்ல நகைக்கிறாள்

இது தலைவியின் பேதைமை காரணமாகப் பிறந்த நகையாம் .

அழுகை ;
=========
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே .

இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியன் ஆதல் . இழவு என்பது ஒன்றை இழத்தல் . அசைவு என்பது முன்பிருந்த நிலைமை மாறி வருந்துதல் , வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத நிலை . இவை நான்கு பாட்டானும் அழுகை வரும் என்று தொல்காப்பியர் உரைப்பார் .

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று . ( 1318 )

தலைவனுக்குத் தும்மல் வருகிறது . அதை அவன் மறைக்க முயலுகிறான் . அதைக்கண்ட தலைவி , " உமக்கு உறவான பெண் ஒருத்தி உம்மை நினைக்கிறாள் . அதை யான் அறியாதவாறு மறைக்க முயல்கிறீர் " என்று கூறி தலைவி அழுகிறாளாம் .

இது தலைவன் தன்னை இகழ்ந்தான் எனத் தலைவி கருதியமையால் பிறந்த அழுகையாதலின் , இதனை இளிவு பற்றி வந்த அழுகை என்னலாம் .

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் . ( 1227 )

காலைப் பொழுதில் தலைவி நல்ல மனநிலையில் இருக்கிறாள் . ஆனால் மாலைப் பொழுது நெருங்க நெருங்க காம நோய் வருத்தத் துன்புறுகிறாள் . இது முன்னை நிலை மாறியது குறித்துப் பேசுதலின் , இது அசைவு காரணமாக வந்த அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டு என்னலாம் .

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது . ( 1049 )

நெருப்பிலே கூட ஒருவன் உறக்கம் கொள்ள இயலும் ; ஆனால் இந்த வறுமை வந்துவிட்டால் , ஒருவன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது . வறுமையால் வாடி நலிவான் ஒருவனின் உணர்விலிருந்து பிறக்கும் இச்ச்சொற்கள் , அவ்வறுமைத் துன்பத்தின் மிகுதியால் நேர்ந்த அவலத்தினை உருக்கமாக உணாத்துகின்றன .

( தொடரும் )



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty Re: திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:40 pm

நகை  பெண்களுக்கு  மிக அவசியம்  என்பது சரியாக புரிந்து கொள்ளாமல் 
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என  பெண்களை நினைக்க வைத்து 
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty Re: திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by M.Jagadeesan Thu Jun 20, 2019 12:19 pm

இளிவரல் :
===========
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே .

இளிவரல் என்பது இரக்கம் .

இது முதுமை , நோய் , வருத்தம் , ஆற்றல் குறைவு ஆகியவற்றால் வரும் என்பர் .

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு .( 1269 )

நெடுந்தொலைவு சென்ற துணைவர் , வரும் நாளை மனத்து வைத்து ஏங்குபவர்க்கு , ஒருநாள் செல்லுதல் ஏழுநாள் செல்லுதல்போல் நீண்டு கழியும் .

தலைவன் பிரிவு காரணமாகத் தலைவி மாட்டுத் தோன்றும் வருத்தத்தைப் புலப்படுத்துதலின் , இது வருத்தம் காரணமாக வந்த இளிவரல் சுவைக்கு எடுத்துக்காட்டாகும் .

மருட்கை :
==========
மருட்கை என்பது வியப்பாகும் .

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே .

புதுமையானது , முன்பு காணாத புதிய பொருள் , பெருமை என்பது மிகப்பெரிய ஒன்று , சிறுமை என்பது மிகச்சிறிய ஒன்று , ஆக்கமாவது ஒன்று மறறொன்றாய் திரிந்தது . இவை நான்கு காரணமாக வியப்பு அல்லது அற்புதம் உண்டாகும் .

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு . ( 1081 )

தலைவன் , தலைவியுடைய அழகைப் பார்த்து அதிசயிக்கிறான் . " இவள் தெய்வப் பெண்ணோ ! அழகிய மயிலோ ! திரண்ட கூந்தலையுடைய மாதோ !
என் நெஞ்சம் அறியாமல் மயங்குகிறது . " என்று கூறுகிறான் .

இது புதுமை காரணமாகத் தோன்றிய மருட்கையாகும் .

தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ . ( 1159 )

இது காமத்தீயின் தனித்தன்மை குறித்து வியந்தவாறாம் . இயல்பான தீ தொட்டால்தான் சுடும் . ஆனால் காமத்தீயோ தொட்டால் சுடாது ; விட்டால்தான் சுடும் . இது இயற்கைக்கு மாறாக இருக்கும் ஆக்கநிலை மருட்கையாகும் .

( தொடரும் )


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty Re: திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by Sudharani Thu Jun 20, 2019 5:00 pm

T.N.Balasubramanian wrote:நகை  பெண்களுக்கு  மிக அவசியம்  என்பது சரியாக புரிந்து கொள்ளாமல் 
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என  பெண்களை நினைக்க வைத்து 
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]

பெண்மைக்கு அழகு சேர்ப்பது புன்னகைத்தான் பொன்ன்னகை அல்ல என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது MJ அவர்களின் பதிவு.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty Re: திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

அச்சம் :
========
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே . ( தொல்-மெய்ப்-8 )

அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய அஞ்சத்தக்க விலங்குகள் , கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை எனப்படுவது பெரியோர் ,தந்தையர் , ஆசிரியர் , அரசர் முதலானோரைக் குறிக்கும் . இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு அச்சம் ஏற்படும் .

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு . ( 1048 )

நாள்தோறும் வறுமையால் வாடி துன்புற்ற ஒருவன் , " நேற்றுத் துன்புறுத்தி வாட்டிய அந்த வறுமை , இன்றும் என்னிடம் வருமோ ? " என்று அச்சம் கொள்கிறான் . அந்த அச்சத்தின் விளைவே இந்தக் குறட்பா ஆகும் .

( தொடரும் )


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Empty Re: திருக்குறளில் மெய்ப்பாடுகள் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum