ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:40 pm

கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ 151429_thumb
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.

கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.

பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:42 pm

அந்த நாள்
-
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ 1_14434
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’

சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.

மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:43 pm

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
-
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ 2_14574
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.

கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.

படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:46 pm

குருதிப்புனல்
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.

`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------

ஆரண்ய காண்டம்

----------
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ 3_14484
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.

ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:48 pm


ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

-
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Onaayum-aattukkuttiyum-1200-1200-675-675-crop-000000_14272
நியாய தர்மத்துக்கு உட்பட்டு `கொலைத்தொழில்’
புரிந்த நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான்.
ஆனால், பெருமளவில் காட்சியமைப்புகளால் படத்தை
நகர்த்திச் சென்ற உத்தி, அற்புதமான ஒளிப்பதிவு,
அசாத்தியமான பின்னணி இசை ஆகியவற்றின் மூலம்
வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது
`ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம்.

மிஷ்கினின் டிரேட் மார்க்கான இரவில் பயணிக்கின்ற
இப்படம், முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டது.
பாடல்கள் இல்லாத இதில், வசனங்களும் மிகமிகக் குறைவு.

ஆனால், பின்னணி இசையில் பெரும் மாயாஜாலத்தையே
நிகழ்த்தி முத்திரை பதித்தார் இளையராஜா.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:51 pm

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ 22CP_THALAIMURAIGAL_MOVIE_STILLS_14120

---
தலைமுறைகள்

----
`வீடு’, `சந்தியா ராகம்’ படங்களைத் தொடர்ந்து,
பாடல்களே இல்லாமல் பாலுமகேந்திரா இயக்கிய
மூன்றாவது திரைப்படம், `தலைமுறைகள்.’

பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் இதுதான்.
இளையராஜாவின் பின்னணி இசையில் கதையின்
நாயகனாக பாலுமகேந்திராவே நடிக்க, `தமிழையும்
இந்தத் தாத்தாவையும் மறந்திராதப்பா...’ என உருகும் குரலில்
அவர் சொல்லும் அந்த வசனம், படத்துக்கான க்ளைமாக்ஸ்
மட்டுமல்ல,
பாலமகேந்திராவுக்கும் பொருத்தமாக அமைந்தது.
-
------------------------------

விசாரணை

------------------
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Visaaranai_14078
-
சந்திரகுமார் எழுதிய `லாக்கப்’ நாவலை அடிப்படையாக
வைத்து, உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து,
நேர்மையான அரசியல் சினிமாவாக வெளிவந்தது
வெற்றி மாறனின் `விசாரணை.’

பாடல்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அதிகம் புழங்கும்
குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள், காமெடியன்,
மிகையான கற்பனை போன்ற வழக்கமான கமர்ஷியல்
விஷயங்கள் ஏதுமின்றி தரமான படமாக `விசாரணை’யைத்
தந்தார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, படத்தின் தரத்தை
மேலும் பலமடங்கு உயர்த்தியது.
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 10:53 pm

டு லெட்
-
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Film_Companion_Review_To-Let_lead_1-1100x600_14511
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’

சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.

இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.

இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’ Empty Re: `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum