ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

2 posters

Go down

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் Empty மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Post by ayyasamy ram Mon Jan 21, 2019 12:56 am

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் 201901200518084070_In-Mumbai-National-Cinema-Museum-Prime-Minister-Modi-opened_SECVPF

மும்பை,
இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் பிரமாண்ட தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

19-ம் நூற்றாண்டின் பாரம்பரிய மாளிகையான குல்சன் மஹால் வளாகத்தில் இந்த சினிமா அருங்காட்சியகம் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சினிமா அருங்காட்சியகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து ரசித்தார். விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்த அருங்காட்சியகத்தில், இரண்டாம் உலகப் போரின் 30 மணி நேர டிஜிட்டல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த போரில் இறந்த 1.5 லட்சம் இந்திய வீரர்கள் உலகிற்கு அறியப்படுவார்கள்.

திரைப்படங்களும், சமூகமும் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கிறது. திரைப்படங்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது சமுதாயத்தில் நடக்கிறது, சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் திரைப்படங்கள் காட்டுகின்றன.

நாம் முன்பு திரைப்படங்களில் இந்தியாவின் ஏழ்மை நிலையையும், உதவியின்மையையும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது திரைப்படங்களில் பிரச்சினைகளை காண்பித்தால், தீர்வும் அதிலேயே கூறப்படுகிறது.

சினிமாவை போல இந்தியாவும் மாறுகிறது. இந்தியா பிரச்சினைகளுக்கு தீர்வை தேடுகிறது. இங்கு மில்லியன் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அதற்கு பில்லியன் தீர்வுகளும் இருக்கிறது.

முன்பு திரைப்படங்களை எடுத்து முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆனது. ஆனால் தற்போது ஒரு காலவரையறைக்குள் சில மாதங்களில் படங்கள் எடுத்து முடிக்கப்படுகின்றன. இதேபோன்று அரசாங்க திட்டங்களும் காலக்கெடுவில் முடிக்கப்படுகிறது.

தற்போது நமது சினிமா துறை நமது நாட்டை கடந்தும் புகழ்பெற்று விளங்கு கிறது. சில உலக தலைவர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு நம் மொழி தெரியவில்லை என்றாலும் நம் திரைப்பட பாடல் வரிகள் முழுவதையும் பாடி காட்டுகின்றனர்.

சுற்றுலா வளர்ச்சியில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் போது டீ விற்பவர் கூட பணம் சம்பாதிக்கிறார்.

திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதால், சினிமாத்துறையினரின் கடும் உழைப்புக்கு ஊறுவிளைவிக்கப்படுகிறது. இதை நான் நன்கு அறிவேன். இவ்வாறு திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உறுதிப்பூண்டு உள்ளது.

மேலும் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான அனுமதி பெறுவதை எளிமையாக்கும் வகையில் ஒற்றை சாளர முறை உருவாக்கப்படும்.

டாவோசில் உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு நடைபெறுவதை போல, இந்தியாவில் ஒரு சர்வதேச திரைப்பட உச்சி மாநாடு நடத்தலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் Empty Re: மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 11:04 am

காந்தியுடன் மோடி உட்கார்ந்து இருக்கிறார் அது மெழுகு சிலையா??
சினிமா தான் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது இந்தியாவில்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
»  ஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
» ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum