ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_c10கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_m10கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_c10 
Dr.S.Soundarapandian
கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_c10கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_m10கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது

Go down

கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது Empty கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது

Post by ayyasamy ram Mon Jan 14, 2019 8:32 am

கொடநாடு விடியோ விவகாரம்: தில்லியில் சயன், மனோஜ் கைது RA

கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் இருவரையும் தமிழக
தனிப்படை போலீஸார் தில்லியில் கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு
எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம்
பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார்
ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக்
குற்றவாளி சயன், கேரளத்துக்கு குடும்பத்தோடு காரில் செல்லும்
போது, விபத்துக்குள்ளானதில் அவரின் மனைவி விஷ்ணுபிரியா,
மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர்.
சயன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி
பராமரிப்பாளராக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணிபுரிந்து
வந்த தினேஷ் குமார் என்பவரும் மரணம் அடைந்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில்
யார் இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சயன்
மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின்,
வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ்,
சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீஸார்
கைது செய்தனர்.

பல மாதங்களாக பேச மறுத்து வந்த சயன்,
தற்போது தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம்
அளித்துள்ள விடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி மீது புகார் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்
படத்தை மேத்யூ வெள்ளிக்கிழமை வெளியிட, விவகாரம் விஸ்வரூபம்
எடுத்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, இந்த விடியோவில் வெளியாகி உள்ள
தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப்
பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மேத்யூ மீது தமிழ்நாடு சைபர் கிரைம்
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆவணப்படத்தில்
பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீதும் வழக்குப்
பதியப்பட்டது.

அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர்
ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்குப் பதிவு செய்யப்
பட்டது.

கொடநாடு வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு
துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பும்
நோக்கில் விடியோ ஆதாரம் வெளியிட்டதாகக் கூறப்படும்
மேத்யூ சாமுவேல், விடியோவில் பேசிய சயன், மனோஜ் ஆகியோரை
கைது செய்ய தனிப்படை தில்லி விரைந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டதை சென்னை மாநகர காவல் ஆணையர்
ஏ.கே.விசுவநாதன் உறுதி செய்துள்ளார். இருவரும் திங்கள்கிழமை
தமிழகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
-
------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum