ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

3 posters

Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:04 am

இஸ்லாமியப் பெண்ணே! தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்று. தொழுகையின் சட்டதிட்டங்கள், அதன் நிபந்தனைகள் ஆகியவற்றை தெரிந்து அதை முழுமையாகச் செயல்படுத்திக் கொள்!.

மூமின்களின் தாய்மார்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்:

''நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் பெண்கள் திரிந்து கொண்டிருந்தது

போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதி யுடன் கடைபிடித்துத் தொழுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:33)

இது பொதுவாக எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். தொழுகை இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் இரண்டாவது இடம் வம்க் கிறது. அது இஸ்லாத்தின் தூண். தொழுகையை விடுவது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எவரிடம் தொழுகை இல்லையோ அவர் இஸ்லாத்தில் இல்லை. எவ்வித காரணமுமின்றி தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது தொழுகையை வீணடிப்பதாகும்.

''ஆனால் இவர்களுக்குப்பின் (வழிகெட்ட) சந்ததியினர் இவர்களின் இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள். அவர்கள் மறுமையில் பெரும் கெடுதியை உண்டாக்கும் நரகத்தையே சந்திப்பார்கள். பாவமன்னிப்புக் கோரி பாவங் களிலிருந்து விலம் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் களைச் செய்பவர்களைத் தவிர, அத்தகையோர் சுவர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களுக்கு எதிலும் குறை ஏதும் செய்யப் படாது.'' (அல்குர்ஆன் 19:59,60)

குர்ஆன் விளக்கவுரையாளர்களில் ஒருசாரார் மேற் கண்ட வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கத்தைப் பற்றி இமாம் இப்னுஹஜர் அவர்கள் குறிப்பிடும்போது தொழு கையை வீணாக்குவதென்பது அதனுடைய நேரத்தை சரியாகக் கடைபிடிக்காது இருப்பதாகும். ஒரு தொழு கைக்கான நேரம் கடந்தபின் அதைத் தொழுவதுமாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'கய்யு' என்பது நரகத் தில் உள்ள ஒரு ஓடையாகும் என்று குறிப்பிடுகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty தொழுகையில் பெண்களுக்கென சில சட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.

Post by சிவா Fri Sep 26, 2008 1:06 am

1. பெண்களுக்கு ஆண்களைப்போன்று சப்தமிட்டு பாங்கு இகாமத் சொல்லவேண்டியதில்லை. காரணம் பாங்கிற்கு சப்தத்தை உயர்த்திச் சொல்ல வேண்டு மென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.

2. பெண்ணின் முகத்தைத் தவிர இதர உறுப்புக்களை எல்லாம் தொழும்போது மறைத்தாக வேண்டும். முன் இரண்டு கரங்களையும் பாதத்தையும் மறைக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இவை யாவும் பிற ஆண்கள் பார்க்காமல் இருக்கும் போதுதான். அவர்கள் பார்க்கும் நிலை ஏற்படும்போது உறுப்புக்கள் அனைத்தையும் அவசியம் மறைத்தாக வேண்டும். தொழுகைக்கு வெளியே மறைப்பது எவ்வாறு கடமையாக உள்ளதோ அவ்வாறே தொழுகை யிலும் தலை, கழுத்து, பாதம் ஆகிய எல்லாவற்றையும் மறைத் தாக வேண்டும்.

''பருவமான பெண்கள் தலை, பிடறியை மறைத்தால் தவிர அவர்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: ,அஹ்மது, அபூதாவுது, நஸயீ, இப்னுமாஜா, திர்மதி)

ஒரு பெண் கீழங்கி அணியாமல் தலையையும், பிடறியையும் மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து தொழுவது கூடுமா என உம்மு ஸலமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, 'அவர்களின் பாதத்தையும் மறைக்கும் விதத்தில் அந்த ஆடை இருக்குமானால் அதை அணிந்து தொழலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவுத்)

தொழுகையில் பெண் தனது தலையையும் பிடறியையும் அவசியம் மறைத்தாக வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழியி லிந்து விளங்கமுடிகிறது.

உம்முஸலமா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸிலி ருந்து பாதம் உட்பட எல்லா உறுப்புக்களையும் மறைக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

பிற ஆண்கள் பார்க்காத விதத்தில் முகத்தை திறந்து வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அறிஞர் கள் இதை ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வாத் தொகுப்பு 22ழூ ழூ113,114 ல் குறிப்பிடுகிறார்கள்.

''ஒரு பெண் தனியாகத் தொழும்போது தலையை மறைத்திருக்க வேண்டும். தொழுகை அல்லாத நேரங்க ளில் வீட்டிலிருக்கும் போது தலை திறந்து இருப்பது அவளுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். தொழுகையின் போது அலங்கரித்துக் கொள்வது அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமையாகும். இரவு நேரத்தில் ஒருவர் தனிமையில் இருந்தாலும் அவர் நிர்வாணமாக கஅபாவை வலம் வருவது கூடாது. தனிமையில் இருக்கும்போது நிர்வாணமாகத் தொழுவதும் கூடாது. தொழுகையில் உடலை மறைப்பதென்பது அடுத்தவர்களின் பார்வை யோடு தொடர்புடையது அல்ல.

முக்னி என்ற நூலில் 2ழூ ழூ328 ல் கூறப்பட்டுள்ளது.

''சுதந்திரமான ஒருபெண் தன் உடல் முழுவதையும் தொழுகையின்போது மறைத்துக் கொள்வது கடமை யாகும். அதில் ஏதாவது வெளிப்படுமாயின் தொழுகை கூடாது.'' இவ்வாறே மாலிக், ஷாஃபி, அவ்ஸாயீ போன்ற இமாம்களும் கூறியுள்ளனர்.

3. முக்னி என்ற நூலில் 2ழூ ழூ258 ல் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் தொழும்போது ருகூஃ மற்றும் ஸ{ஜூத் நிலை யில் தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அமரும் போது கால்களை மடக்கி வைத்து அமரவேண்டும். அல்லது இரண்டு கால்களையும் வலப்புறமாகக் கொண்டு வந்து இருக்கையைத் தரை யில் வைத்து அமர வேண்டும். கால்களை முன்பக்கம் மடக்கி வைத்து அமரவும் கூடாது. வலது காலை நட்டி புட்டியை தரையில் வைத்து அமர்வது அல்லது வலதுகாலை நட்டி இடதுகாலின் மீது அமர்வதை விட இது அவளுக்கு மிக மறைவானதாகும்.

மஜ்மூவு என்ற நூலில் 3ழூ ழூ455 ல் நவவி அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் ஷாஃபியீ அவர்கள் முக்தஸர் என்ற நூலில் கூறும்போது தொழுகையின் செயல்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் ஸ{ஜூதுச் செய்யும் போது தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தன் வயிற்றை தொடையோடு சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் அவளின் உடலை மறைப்பதற்கு அவளுக்குச் சிறந்த வழியாகும். இந்த விதம் தான் ருகூவு, மற்றும் ஏனைய நிலைகளிலும் அவளுக்கு மிகவும் சிறந்தது.

4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல்

இது விஷயத்தில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளதுஇவ்வாறு தொழுவதில் தவறில்லை என அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்கள் உம்முவரகா என்ற பெண் தன் வீட்டாருக்கு இமாமத் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். (நூல்: அபூதாவுத்)

சிலர் இது அனுமதிக்கப்படாதது என்று கூறு கின்றனர். இன்னும் சிலர் வெறுக்கப்பட்டது என் கின்றனர். வேறுசிலர் உபரியான (நஃபிலான) தொழுகை களை நடத்துவது கூடும்; கடமையான தொழுகைகளில் கூடாது என்று கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஒரு பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும்.

இதைத் நன்கு அறிந்து கொள்வதற்கு முக்னி நூலில் 2ழூ ழூ202 லும் மஜ்மூவு என்ற நூலில் 4ழூ ழூ84,85 லும் பார்க்க!

பிற ஆண்கள் இல்லாதபோது தொழுகையில் இமாமத் செய்யும் பெண் சப்தமிட்டு ஓதலாம்.

5. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஆண்களுடன் ஜமாஅத்தாகத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது அவர்களுக்குச் சிறந்ததாகும்.

''பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்:முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத்)

''பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தடுக்கா தீர்கள். ஆனால் அவர்களின் வீடு அவர்களுக்குச் சிறந்த தாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

ஒரு பெண் தன்னை மறைத்துக் கொள்வதற்கு வீட்டிலிருந்து தொழுவதுதான் அவளுக்குச் சிறந்ததாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty ஒரு பெண் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது பின்வரும் ஒழுங்கு முறைகளைப் பேணிக்கொள்வது கடமையாகும்

Post by சிவா Fri Sep 26, 2008 1:09 am

1. முழுமையாகப் பர்தா அணிந்திருக்க வேண்டும்.

''நபி(ஸல்) அவர்களோடு பெண்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும்போது தங்களை முழுமை யாக ஆடையால் மறைத்திருப்பார்கள். அப்போது அவர்கள் யார் என்பதை குறைந்த வெளிச்சத்தில் கண்டு பிடிக்க முடியாது.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

2. வெளியில் செல்லும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்வது கூடாது.

''அல்லாஹ்வின் பள்ளிவாசலுக்குச் செல்லும் பெண் களை தடுக்காதீர்கள் அவர்கள் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசாமல் செல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

''எந்தவொரு பெண் நறுமனத்தைப் பயன்படுத்து கிறாளோ அவள் நம்முடன் இஷா தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வரவேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், அபூதாவுத் மற்றும் நஸயீ)

''பள்ளிவாசலுக்கு வரக்கூடிய பெண்களில் யாரும் நறுமணம் பூசாது இருக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் அவர்களின் மனைவி ஜைனப் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 3ழூ ழூ140,141 ல் குறிப்பிடுகிறார்.

இந்த ஹதீஸின் மூலம் விளங்குவது என்னவென்றால் தவறான காரியங்களுக்கு இடம் அளிக்கின்ற விஷயங்கள் இடம் பெறாத போதுதான் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம். தவற்றைத் தூண்டுகின்ற விதத்தில் உள்ளவற் றில் ஒன்றுதான் நறுமணம் பூசுவதும். பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்குக் கொடுத்த அனுமதி அவர்கள் நறு மணம் ஆபரணம் போன்ற தவறுகளின்பால் ஈர்க்கின் றவை இல்லாத போதுதான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:10 am

3. வெளியில் செல்லும்போது...

ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.

''நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி(ஸல்)அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல் வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களை யும் தடுத்திருப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் 'அஹ்கா முன்னிஸா' எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.

இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டா லும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதை களிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.

4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நிலை ஏற்பட்டால் ஆண்களுக்குப்பின்னால் தனியாக வரிசையில நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது நானும் ஓர் அநாதையும் வரிசையில் நின்றோம் எங்களுக்குப் பின்னால் வயது முதிர்ந்த பெண் நின்றாள்'' என அனஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

''எங்களுடைய வீட்டில் நானும், ஓர் அநாதையும் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். எங்களுடைய தாயார் உம்முசுலைம் எங்களுக்குப் பின்னால் நின்றார்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

''ஜமாஅத் தொழுகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கள் வருவார்களானால் ஆண்களுக்குப்பின்னால் வரிசையாக நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வருசைப்படுத்தும் போது ஆண்களை முன் வரிசையிலும் அவர்களுக்குப் பின்னால் சிறுவர் களையும் அவர்களுக்குப் பின்னால் பெண்களையும் நிறுத்துவார்கள்'' (நூல்: அஹ்மத்)

''ஆண்களின் வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையா கும், அதில் சிறப்புக் குறைந்தது கடைசி வரிசையாகும். பெண்களின் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும். அதில் சிறப்பு குறைந்தது முதல் வரிசையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹ{ரைரா(ரழி) அறிவிக்கிறார்.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் பின்வரும் விஷயங்களை அறிவிக்கின்றன. பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் வரிசையாக நிற்கவேண்டும். கடமையான தொழுகையானாலும் ரமளானில் தொழும் இரவுத் தொழுகையானாலும் தொழும்போது சிதறியவர்களாகத் தொழக் கூடாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:11 am

5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் தங்கள் ஒரு கையின் மேல் மற்றொரு கையை தட்டி ஞாபகமூட்ட வேண்டும்.

''தொழுகையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமாயின் ஆண்கள் 'தஸ்பீஹ்' சொல்லட்டும். பெண்கள் ஒரு கையின் மேல் இன்னொரு கையை அடிக்க வேண்டும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

ஜமாஅத் தொழுகையில் ஏதாவது தவறு நிகழும் போது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியாகும். காரணம் பெண்களின் குரல் ஆண்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியதாகும். எனவே கையில் அடிக்கும்படியும், பேசமால் இருக்கும் படியும் ஏவப்பட்டுள்ளாள்.

இமாம் ஸலாம் சொல்லி விடுவாரானால் பெண்கள் ஸலாம் கொடுத்துவிட்டு விரைவாக பள்ளியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்

ஆண்கள் அமர்ந்திருக்க வேண்டும் திரும்பிச் செல்லும் பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஏற்படாதிருக்க இவ்வாறு செய்ய வேண்டும். உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார்.

கடமையான தொழுகைகளிலிருந்து பெண்கள் ஸலாம் கொடுத்துவிடுவார்களானால் அவர்கள் எழுந்து சென்றுவிடுவார்கள். நபி(ஸல்) அவர்களும் ஆண்களும் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்த பின்னர் மற்றவர்களும் எழுந்து செல்வார்கள்.

இமாம் சுஹரி அவர்கள் அறிவிக்கிறார்கள். பெண் கள் திரும்பிச் செல்லவேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமர்வார்கள். (நூல்: அஷ்ஷரஹ{ல் கபீர் அல் முகனி பக்கம் 1ழூ ழூ422)

இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் என்ற நூலில் 2ழூ ழூ326 ல் குறிப்பிடுகிறார்கள்.

தொழுகை நடத்தும் இமாம் தம் பின்னால் நின்று தொழுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தடுக்கப்பட்ட விஷயங்களுக்கு இழுத்துச் செல்கின்ற காரியங்களை விட்டும் தூரமாக இருக்கவேண்டும். வீடு ஒரு புறமிருக்க பாதைகளில் கூட அந்நியப் பெண்களும், ஆணும் கலந்திருப்பதை வெறுக்க வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழி அறிவிக்கிறது.

இமாம் நவவி அவர்கள் மஜ்மூவு என்ற நூலில்3ழூ ழூ455ல் குறிப்பிடுகிறார்.

6. ஜமாஅத்தாகத் தொழும்போது பெண்கள் ஆண்களிலிருந்து பல விஷயங்களில் வேறுபடுகிறார்கள்.

1. ஜமாஅத் தொழுகை ஆண்களுக்கு கடமையானது போன்று பெண்களுக்குக் கடமையாக இல்லை.

2. பெண்களுக்கு, பெண் இமாமாக நின்று தொழும்போது வரிசையின் நடுவில் நிற்கவேண்டும்.

3. ஒரு பெண் தனியாக ஜமாஅத் தொழுகைக்கு வருவாளா னால் தனியாக பின் வரிசையில் நிற்கவேண்டும். ஆண் கள் அவ்வாறு நிற்கக் கூடாது.

4. ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் பல வரிசைகளாக நின்று தொழும்போது கடைசி வரிசையே அவர்களுக் குச் சிறந்ததாகும்.

ஆண்களும் பெண்களும் கலந்திருப்பது கூடாது என்பதைத்தான் மேற்கண்ட விஷயங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:12 am

7. பெருநாள் தொழுகைக்கு பெண்கள் செல்லுதல்.

''ஹஜ்பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைக்காக மாதவிடாய்ப் பெண்களையும் கன்னிப் பெண்களையும் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளி யேற ஏவும்படி நபி(ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள். மாதவிடாய்ப்பெண்கள் தொழாமல் இருக்க வேண்டும் நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்'' என உம்மு அதிய்யா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகிறார்கள்.

கன்னி, என்றும் கன்னித்தன்மை அற்றவள் என்றும் வாலிபம் என்றும் வயோதிகம் என்றும் மாதவிடாய்காரி என்றும் பாகுபடுத்தாமல் எல்லா பெண்களும் பெருநாள் தொழுகைக்காக வெளியே செல்ல வேண்டும். என்பதைத் தான் இதுபோன்ற ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

இத்தாவில் இருக்கின்ற பெண், அல்லது அவள் வெளியே வருவதினால் ஏதாவது குழப்பம் ஏற்படும் என்று கருதும் பெண், அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ள பெண் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார். (நைலுல் அவ்தார் பக்கம் 3ழூ ழூ306)

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் 6ழூ ழூ458-459ல் குறிப்பிடுகிறார்கள்.

பெருநாளைத் தவிர மற்ற ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வதை விட வீட்டில் தொழுவதே பெண்களுக்குச் சிறந்ததாக இருக்கிறது.

பெருநாளைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே செல்லக் கட்டளையிடப்பட்டுள்ளனர். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை,

1. பெருநாள் தொழுகை ஒரு ஆண்டில் இரண்டு முறைதான் நடக்கிறது. ஆனால் ஜும்ஆ தொழுகையும் ஜமாஅத் தொழுகையும் அவ்வாறல்ல.

2. ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைக்குப் பகரமாக தம் வீட்டில் லுஹர் தொழுது கொள்வதுதான் அவளுக்கு ஜும்ஆவாகும். பெருநாள் தொழுகையைப் பொறுத்த வரை அதற்குப் பகரமாக வேறு தொழுகை ஏதும் தொழ முடியாது.

3. பெருநாள் தொழுகைக்காக அல்லாஹ்வைத் தொழுது ஞாபகப்படுத்துவதற்காக எல்லோரும் மைதானத் திற்குச் செல்கின்றனர். சில விதத்தில் இது ஹஜ்ஜிற்கு ஒப்பான தாக உள்ளது. எனவே தான் பெரிய பெருநாள் ஹாஜி களுக்கு ஒத்தார்போல் ஹஜ்ஜுடைய காலத்தில் வருகிறது. ஹாஜிகளைப் பொறுத்தவரையில் அரபா மைதானத்தில நிற்கும் நாள்தான் அவர்களுக்குப் பெருநாளாகும்.

(உடல் பருமனில்லாத உடல் அமைப்பு வெளியில் தெரியாத) அழகில் குறைந்த பெண்கள்தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்ல வேண்டும் என இமாம் ஷாஃபியீ குறிப்பிடுகிறார்.

இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 5ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்.

இமாம் ஷாஃபீயும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள்: தன் உடற்கட்டு வெளியே தெரியாத பெண்கள் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. உடல்கட்டு வெளியே தெரியும் படியான பெண்கள் வெளியில் செல்வது வெறுக்கப்படுகிறது. அப்படியே அவர்கள் வெளியே செல்வதானால் இறுக்கமில்லாத ஆடையை அணிந்து செல்லவேண்டும. தங்களை வெளிப்படுத்திக் காட்டும் எந்த ஆடையையும் அணிவது கூடாது.

தண்¡ரால் சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது. நறுமணமுள்ள பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது. இவையெல்லாம் வயது முதிர்ந்த பெண்களுக்குத் தான், அதே நேரத்தில் இளம்பெண், அழகுள்ள பெண், ஆசையைத் தூண்டுகின்ற பெண் ஆகியோர் வெளியில் செல்வது வெறுக்கப்பட்டுள்ளது. காரணம் அப்பெண்கள் மீதோ, அப்பெண்களாலோ தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

இது உம்முஅதிய்யா அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளதே என்று வினவப்பட்டால் இதற்கு பதில் ஆயிஷா(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸாகும்.

இக்காலத்தில் பெண்கள் புதுமையாக ஏற்படுத்தியுள்ள பழக்க வழக்கங்களை நபி(ஸல்) அவர்கள் பார்ப்பார் களானால் இஸ்ரவேலப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இவர்களும் தடுக்கப் பட்டிருப்பார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

காரணம் ஆரம்பகாலம் போல் அல்லாமல் இக்காலத்தில் தீமைக்குரிய காரணங்களும், குழப்பங் களும் அதிகரித்துவிட்டன. இக்காலத்தில் இவை மிகக் கடுமையாகவே உள்ளன.

இமாம் இப்னுல் ஜவ்ஸி 'அஹ்காமுன்னிஸா' என்ற நூலின் பக்கம் 38 ல் குறிப்பிடுகிறார்.

பெண்கள் வெளியில் செல்வது அனுமதிக்கப் பட்டதுதான். ஆனால் அவள் மீதோ, அவளினாலோ குழப்பங்கள் ஏற்படும் என்று அஞ்சப்படுமானால் வெளியில் செல்லாமலிருப்பதே சிறந்தது, காரணம் ஆரம்பகால பெண்கள் வாழ்ந்த சூழ்நிலை இக்காலத்து பெண்கள் வாழும் சூழ்நிலையைப் போன்றதல்ல, இவ்வாறே ஆண்களும் அன்று காணப்பட்டனர். ஆரம்ப கால மக்கள் மிகவும் பேனுதலுடையவர்களாக இருந்தனர்.

இஸ்லாமியப் பெண்ணே! மேலே கூறப்பட்டுள்ள இமாம்களின் கூற்றிலிருந்து, குறிப்பிடப்பட்ட நிபந்தனை களுடனும். அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேட வேண்டும் என்ற எண்ணத்துடனும் முஸ்லிம்களுடன் (அழைப்புப் பணியிலும்), பிரார்த்தனையிலும் பங்கு பெறவேண்டுமென்ற எண்ணத்திலும் தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்லவேண்டும் என்பதை புரிந்து கொள்வாய், பெருநாளைக்கு வெளியில் செல்ல அனுமதி கிடைத்திருப்பது அலங்காரத்தை வெளிப் படுத்தவோ, குழப்பம் ஏற்படுத்தவோ அல்ல என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by சபீர் Sat May 08, 2010 10:25 pm

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 154550 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 678642 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 154550 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 678642 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 154550 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 678642 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 154550 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by எஸ்.அஸ்லி Sat May 08, 2010 11:45 pm

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 154550 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் 678642


பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum