ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன?

Go down

ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Empty ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன?

Post by சிவா Tue Dec 22, 2009 7:20 am


ஓழுக்கம் பற்றிய 3 கேள்விகளுக்கு ஓஷோ பதில்கள்


1.ஓழுக்கம் என்றால் என்ன ?

மதம் சிதைந்து போனால் அது எப்போதும் ஓழுக்கமாகமாறிவிடுகிறது. ஓழுக்கம் என்பது இறந்து போன மதம். மதம் என்பது உயிரோட்டமுள்ள ஓழுக்கம். அவை சந்திப்பதேயில்லை, அவை சந்திக்க இயலாது. ஏனெனில் வாழ்வும் மரணமும் சந்திப்பதேயில்லை, இருளும் ஓளியும் சந்திப்பதேயில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை ஓன்று போலவே தோற்றமளிக்கின்றன. வாழும் மனிதனை போலவே இறந்த பிணமும் காட்சியளிக்கிறது. அதே முகம், அதே கண்கள், அதே மூக்கு, மயிர்கள், உடம்பு எல்லாம் அவன் உயிரோடு இருந்தபோது இருந்ததை போலவே இருக்கின்றன. ஓன்றே ஓன்றுதான் இல்லை, அந்த ஓன்றை பார்க்க இயலாது. உயிரோட்டம் இல்லை, ஆனால் உயிரோட்டத்தை தொடவோ, பார்க்கவோ முடியாது. எனவே இறந்துபோன ஓரு மனிதன், இன்னும் அவன் உயிரோடு இருப்பதை போலவே காட்சியளிக்கிறான். ஓழுக்கத்தை பற்றிய விஷயத்தில் அது இன்னும் சிக்கலானது.

ஓழுக்கம் மதத்தைப் போலவே காட்சியளிக்கிறது, ஆனால் அது அப்படி அல்ல. அது ஓரு பிணம். மதம் இளமையானது, புத்துணர்வு மிக்கது. மதம் மலர்களின் புத்துணர்வையும், காலைப் பனித்துளியின் புத்துணர்வையும் கொண்டது. மதம் ஓரு வசந்தம், நட்சத்திரங்களின் வசந்தம், வாழ்வின் வசந்தம், பிரபஞ்சத்தின் வசந்தம். மதம் உள்ளபோது ஓழுக்கம் இருப்பதில்லை, அவனது இயல்பே ஓழுக்கமாக இருக்கிறது.

ஆனால் அங்கு ஓழுக்கம் என்ற ஓன்று தனியாக இருப்பதில்லை, ஓழுக்கம் என்றால் என்ன என்ற கருத்தும் இருப்பதில்லை. அது அவனது இயல்பாகவே உள்ளது, உன்னுடைய நிழல் உன்னை தொடர்வதை போல அது உன்னை தொடர்கிறது. நீ உன்னுடைய நிழலை சுமக்க வேண்டியதில்லை. நீ உன்னுடைய நிழலைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. உன்னுடைய நிழல் உன்னை தொடர்கிறதா இல்லையா என நீ திரும்பி திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அது உன்னை பின்தொடரும்.

அதைப்போலவே, ஓழுக்கம் மதத்தன்மை வாய்ந்த மனிதனை பின்தொடர்கிறது. அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை, அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை, அது அவனது இயல்பான குணம். ஆனால் மதம் இறந்தபிறகு, உயிரோட்டம் மறைந்த பிறகு, ஓருவன் ஓழுக்கத்தைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க தொடங்குகிறான். விழிப்புணர்வு மறைந்துவிட்டது, அது குறித்த சிந்தனை மட்டுமே அவன் ஓதுங்குமிடமாக மீதமுள்ளது.

இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓழுக்கவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது ஓழுக்கத்தை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது ஓழுக்கத்தை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் ஓழுக்கத்தை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும்.

எடுத்துகாட்டாக, ஓழுக்கவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்......

அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.


ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Empty Re: ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன?

Post by சிவா Tue Dec 22, 2009 7:21 am



2.ஓழுக்கம் என்பது சமுதாய பயன்பாடு என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால் தனிமனிதனுக்கு அது பயனற்றதா?


ஓழுக்கம் அல்லது ஓழுக்கமான பழக்கவழக்கம் என்பது சமுதாயத்தைப் பொறுத்தவரை வெறும் பயன்பாடு மட்டுமே. ஆனால் தனிமனிதனுக்கு அது பயன்பாடல்ல, அது ஓரு ஆனந்தம். ஆதலினால், சமுதாயத்தின் தேவைகளை போலித்தனமான ஓழுக்கத்தால் கூட திருப்திப்படுத்திவிடமுடியும்.

ஆனால் தனிமனிதனைப் பொறுத்தவரை அது போதாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் போதும் ஆனால் உன்னைப் பொறுத்தவரை அது போதாது. நீ கண்டிப்பாக இதைப் பார்க்க இயலும் — நீ உனக்குள்ளே நன்றாக இருக்கிறாயோ இல்லையோ. சமுதாயம் உனது சமூக முகத்தை குறித்தே கவலை கொள்கிறது, உன்னுடைய உள்ளிருப்பை பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் உனக்கு சமூக முகம் ஆடையை போன்றதே. அது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் நீ தொடங்குகிறாய். சமூக முகம் என்ற இந்த முகமூடியிலிருந்து தனித்தும் அதற்கு பின்னும் உள்ளதே உனது உண்மையான இருப்பு. அங்குதான் ஓழுக்கம் பிறக்கிறது.

பொய்யான ஓழுக்கத்தின் மூலம் உருவான சமுதாயம் நாகரீகம் என அழைக்கப்படுகிறது. வாழ்வின் உண்மையை அடைந்த மனிதர்களை கொண்ட சமுதாயம் பண்பாடானது என அழைக்கப்படுகிறது. இதுதான் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு. நாகரீகம் என்பது ஓரு பயன்பாடு, பண்பாடு என்பது உள் ஓத்திசைவு மற்றும் ஆனந்தம்.

இன்று நம்மிடம் நாகரீகம் உள்ளது ஆனால் பண்பாடு இல்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த பண்பாட்டை உருவாக்க முடியும். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை தூய்மைபடுத்துவதால் நாகரீகம் வருகிறது. பண்பாடு நம்மை தூய்மைபடுத்திகொள்வதன் மூலம் நம்மை புரிந்துகெரள்வதால் வருகிறது. நாகரீகம் என்பது உடல், பண்பாடு என்பது இருப்பு. தன் இருப்பில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள் மட்டுமே ஓரு பண்பாட்டை உருவாக்கமுடியும்.


ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Empty Re: ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன?

Post by சிவா Tue Dec 22, 2009 7:22 am

3.காமத்தைப் பொறுத்தவரை ஓழுக்கத்தின் எதிர்காலம் என்ன?

காமத்தைப் பொறுத்தவரை எந்த ஓழுக்கத்திற்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் ஓழுக்கத்தையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் ஓழுக்கத்தின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. ஓழுக்கம் அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. ஓழுக்க சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.

உண்மை, நேர்மை, சுயப்பெரறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் காமமும் ஓழுக்கமும் கிட்டதட்ட ஓரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது ஓழுக்கமற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக ஓழுக்கமானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். ஓழுக்கம் ஓற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த ஓழுக்கத்திற்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஓரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.

கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஓரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஓருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஓருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஓரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஓரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஓருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஓருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஓரு பொருட்டாக இருக்ககூடாது.

எதிர்காலம் காமத்தை குறித்து ஓரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.

காமம் உடலைச் சார்ந்த ஓரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஓரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.

டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின் முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர் “ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என ஓப்புகொண்டார்.

“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்” என அவர் கூறினார்.

அதற்கு அவள், “நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு தெரியாது” என கூறினாள்.

இதுதான் எதிர்காலம்.


ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன? Empty Re: ஓழுக்கம் பற்றி ஓஷோவின் கருத்து என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum