ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

+2
T.N.Balasubramanian
Pranav Jain
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by Pranav Jain Sat Nov 10, 2018 6:03 pm

சினிமா என்பது என் ரத்தத்தில் ஊரிப்போன ஒன்று. அந்த அளவிற்கு சினிமாவை நான் சுவாசிப்பவன். எல்லா இடங்களிலும் சினிமாக்காரன் என்பதுதான் எனக்கான முதல் அடையாளமாக இருந்திருக்கிறது. அதே போலவே அரசியலையும் இன்னொரு கண்ணாக வைத்து கவனித்து வந்திருக்கிறேன். சினிமாவும் அரசியலும் எனக்கு இரண்டு கண்களைத் போன்றவை. அதனால்தான் பல இடங்களில் கண்களை எனது லோகோவாக பயன்படுத்தி வந்துள்ளேன்.

சினிமா என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதி சக்திவாய்ந்த ஒரு மீடியா. அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதில் பத்திரிக்கையை விட சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். சில இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன். இந்த சக்தி வாய்ந்த மீடியா இன்று சிலரின் சுயநலத்திற்கான பிரச்சார மேடையாகி வருவதைப் பார்க்கும்போது ஏற்படும் ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை...

பல காலங்களாகவே இந்த சினிமா தடம் புரண்டு, தட்டுத் தடுமாறிதான் பயணித்து வந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக தனது இயல்பையும் இழந்து விடுமோ என்று நினைக்கும்போது வேதனையாகவே இருக்கிறது...  ஜாதியை வளர்ப்பவர்கள் முதல் அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் வரை தங்களது சொந்த விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு பிரச்சார மேடையாகவே சினிமாவைப் பயன்படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கதாகும். ஏனென்றால் இது மக்களையும், ரசிகனையும் முட்டாளாக்கும் ஒரு முயற்சியாகும்.! அதாவது சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை தனது சொந்த செலவில் தயாராகும் சினிமாவில் புகுத்துவது என்பது மிகவும் பாராட்டுக்குறிய விஷயமாகும். காரணம் ஆரம்பகால சினிமாவில் இது லாபநோக்கம் இன்றி பொது நலத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, சொந்த லாபத்திற்காகவும், சிலரது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும் மக்களை முட்டாளாக்கி, திரையரங்கை பிரச்சார மேடையாக்கி, விழிப்புணர்ச்சி என்ற பெயரில் சினிமாவை வியாபாரமாக்கி வருவதை ஊக்குவிக்க முடியாது. இது சினிமா என்னும் கலையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமானது.!!

முன்பெல்லாம் பணம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து, லாரி, வேன் மூலம் சொந்த செலவில் அழைத்துச் சென்று அரசியல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்று, பிளாக் டிக்கெட்டோடு பாப்கார்ன், பார்க்கிங் என்று மொத்தமாக வசூலித்து பிரச்சாரம் செய்கின்றனர். இது வியாபார யுத்தியா? அல்லது விழிப்புணர்ச்சியா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு மாற்றத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் ரசிகனாக மாறி ஓவியம், இசை, நடனம், கேளிக்கை, சினிமா என்னும் மாய பிம்பங்களைத் தேடிச் செல்கிறான். ஆனால் அங்கேயும் அழுகை, ஆர்ப்பாட்டம், அரசியல் என்று அதே இயல்பு வாழ்க்கையே காட்டப்படும்போது அவனது மனநிலை ஏமாற்றமடைகிறது. இதைப் பார்கும் ஒரு ரசிகன் திரையரங்கில் கை தட்டலாம், விசிலடித்து ஆரவாரம் செய்யலாம்... ஆனால் இவை எல்லாமே அவனது மூளையின் உத்தரவுகளே தவிர, ரசிகனின் ஆழ்மனதின் வெளிப்பாடு இல்லை. ஒரு ரசிகனின் மனநிலை எப்போதும் இயல்பு வாழ்க்கையை திரையில் காண்பதை விரும்புவதே இல்லை. அதனால்தான் சினிமா எப்போதும் நிஜ வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது என்பதை சிலர் புரிந்து கொள்ள வேணடியது அவசியம். சினிமாவின் இந்த இயல்பு சில நேரங்களில் மாற்றியும் கையாளப்பட்டு இருக்கிறது. காரணம் அன்றைய காலகட்டத்தில் வேறு வடிகால்களும் மாற்று வழிகளும் இல்லை என்பதாலேயே சினிமா தனது இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் செயல்பட்டுள்ளது. ஆனால் இன்று நிறைய மாற்று வழிகள் இருக்கிறது. எனவே சினிமாவிற்குள் இயல்பு வாழ்க்கையை திணிக்காமல் இருப்பதே சிறந்ததாகும். அதற்காக எதையுமே பேசவேண்டாம் என்பது பொருள் இல்லை. எதுவுமே அளவோடு இருப்பது நல்லது.

இன்று சொப்பு வைத்து விளையாடும் சிறுவர்கள் கூட சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங் செய்து டாக் செய்கிறார்கள்... பேசவே தெரியாதவர்கள் கூட ஃபேஸ்புக்கில் ஃபேமஸ் ஆகிறார்கள். டம்மி பீஸ் எல்லாம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்கிறார்கள்... ஆன்ட்ராய்டு போன் உள்ள எல்லோரும் அரசியலை அலசுகிறார்கள், டப்பா வைத்து விளையாடும் குழந்தைகள் கூட டப்ஸ்மேஷ் காட்டி டாப் ஸ்டார் ஆகிறார்கள்... ஆனால் கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், சவுண்ட் சிஸ்டம் என்று ஒட்டு மொத்த டிஜிட்டல் டெக்னாலஜியையும் கையில் வைத்துக் கொண்டு பின்னோக்கியே சென்று கொண்டிருந்தால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறலாமே தவிர படைப்பாளர்கள் வரலாற்றில் இடம் பெறுவது கடினம். திறமையானவர்கள் எல்லாம் தடம் பதிப்பதை விட்டு தடம் மாறிச் செல்வது சினிமாவிற்கு ஆரோக்கியமானதில்லை.!!

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவன்தான் நான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தங்க ஊசி என்பதற்காக எடுத்து தொண்டையில் குத்திக்கொள்ள முடியாது. அதேபோலவே நான் சினிமாக்காரன் என்பதற்காக எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவும் முடியாது. சினிமா வியாபாரம் நோக்கம் கொண்டதுதான் ஆனால் அரசியல் என்பது வியாபாரம் இல்லை. எனவே ஊருகாயாக தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தயிர்சாதம் போன்று மொத்தமாகப் பிசைந்து வியாபாரம் செய்வது நெருடலாகவே இருக்கிறது...

சினிமாவில் அரசியலை காட்டுவது ஆரோக்கியமானது ஆனால் அரசியலையே சினிமாவாக்கி சம்பாதிக்க முயல்வது ஆரோக்கியமானதில்லை. எனவே ஜாதிப் பெருமை பேச நினைப்பவர்கள் சங்கம் அமைத்துக் கொண்டாடுங்கள். அரசியல் பிரச்சாம் செய்ய நினைப்பவர்கள் மேடையமைத்துக் கொள்கையை பரப்புங்கள். அல்லது சோஷியல் மீடியாவில் கட்டுரையாக எழுதுங்கள். பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுங்கள். ஏனென்றால் அரசியல் பிரச்சாரத்தையே வியாபாரமாக்க முயற்சிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இன்றைய மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது!!

- எழுத்ததிகாரன்.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by T.N.Balasubramanian Sat Nov 10, 2018 9:05 pm

ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய
அவனிடம் இருக்கவேண்டிய மூன்று முக்கிய பொருள்கள்.
1 TV சேனல்
2 ஒரு பத்திரிகை
3 சினிமா தொழில்.
சுய ஜால்ரா அடித்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து,
பிடித்து கொள்ளையோ கொள்ளைதான். அவர்கள் வாயை சமயம் வரும்போதெல்லாம்
இலவசத்தை கொடுத்து மூடிவிடுவார்கள். இவர்களை திருத்தவே முடியாது என மௌனியாக
இருக்கும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பதை தேர்தல்தான் கணிக்கும்.
ஜனநாயகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் பலரின் எண்ணம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by ayyasamy ram Sun Nov 11, 2018 8:46 am

T.N.Balasubramanian wrote:ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய

மேற்கோள் செய்த பதிவு: 1285138
--
சூப்பருங்க பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by SK Sun Nov 11, 2018 10:10 am

யார் இந்த எழுத்ததிகாரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by Pranav Jain Sun Nov 11, 2018 10:59 am

SK wrote:யார் இந்த எழுத்ததிகாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1285182
இந்த எழுத்ததிகாரன் யார் என்பது தெரியவில்லை.. இந்திய அரசாங்கமே தேடிகிட்டு இருக்குதாம்.. தெரிஞ்சா சொல்லுங்கள்....!!
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:22 am

T.N.Balasubramanian wrote:ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய
அவனிடம் இருக்கவேண்டிய மூன்று முக்கிய பொருள்கள்.
1 TV சேனல்
2 ஒரு பத்திரிகை
3 சினிமா தொழில்.
சுய ஜால்ரா அடித்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து,
பிடித்து கொள்ளையோ கொள்ளைதான். அவர்கள் வாயை சமயம் வரும்போதெல்லாம்
இலவசத்தை கொடுத்து மூடிவிடுவார்கள். இவர்களை திருத்தவே முடியாது என மௌனியாக
இருக்கும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பதை தேர்தல்தான் கணிக்கும்.
ஜனநாயகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் பலரின் எண்ணம்.
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1285138
நீங்கள் கூறியது போல் அரசியல் வியாபாரம்
பண்ண முதலில் ஒரு துதி பாடும் டிவி
மற்றும்
எதிரியை காரித்துப்பிக்கொண்டே இருக்க ஒரு பத்திரிகை.
நிச்சயமாக சினிமா கம்பெனி
மற்றும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
இவை இருந்தால் இந்த வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:23 am

SK wrote:யார் இந்த எழுத்ததிகாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1285182
கூகுளில் தேடினால் நிச்சயமாக கிடைக்கும்
SK
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:31 am

சினிமாவில் சொல்லும் அனைத்தையும்
நம்பி வாழ்ந்த கூட்டம் நம் தமிழக மக்கள்.
கதாநாயகன் வாக்கே வேதவாக்கு.
உண்மையில் சினிமாவில் நடக்கும்
அனைத்தும் நிஷம் என்று நினைப்பே
இந்த நிலைக்கு காரணம்.
நம்முடைய இந்த செயலைச்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாற்றி கொண்டு
வந்துள்ளனர்.
நமக்கு விழிப்புணர்வு வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 3:16 pm

துணி  கடைக்கோ /நகைக்கடைக்கோ /பெரிய மளிகை கடைக்கோ (சூப்பர் மார்க்கெட்)/ஹோட்டலுக்கோ  சென்றால் வாகனங்கள் நிறுத்த, வாடகை வசூலிப்பது இல்லை .ஆனால் சினிமா தியேட்டருக்கு சென்றால் 20 முதல் 100  வரை இரு சக்கர வண்டிக்கோ நாலு சக்கர வண்டிக்கோ வாடகை வாங்குகிறார்கள். உடலுக்கு கேடு விளைவிக்கும் 10 ரூபாய் பாப்கார்ன் 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்.எந்த பிச்சைக்கார(மன்னிக்க) நடிகனும் இதை எதிர்த்தோ சாடியோ சினிமாவில் பேசுவானா?
இவர்களெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை தர படம் எடுக்கிறார்களாம்.சரியான விபச்சார கும்பல். ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் தலை முதல் கால் வரை சேறும் சகதியும். விபச்சாரிகள் கூட தொழில் தர்மத்தை காத்து காசு கொடுப்பவனுக்கு அவன் கேட்கும் சுகம் தருகிறார்கள்.    
அரசியலில் இப்போது இறங்கி இருக்கும் கமலோ/ரஜினியோ/விஜய்யோ இவர்கள் எல்லாம்
அரசியல் பற்றியோ/ ஒழுக்கத்தை பற்றியோ/கலாச்சாரத்தை பற்றியோ பேச தகுதி அற்றவர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by Pranav Jain Tue Nov 13, 2018 12:58 pm

T.N.Balasubramanian wrote:துணி  கடைக்கோ /நகைக்கடைக்கோ /பெரிய மளிகை கடைக்கோ (சூப்பர் மார்க்கெட்)/ஹோட்டலுக்கோ  சென்றால் வாகனங்கள் நிறுத்த, வாடகை வசூலிப்பது இல்லை .ஆனால் சினிமா தியேட்டருக்கு சென்றால் 20 முதல் 100  வரை இரு சக்கர வண்டிக்கோ நாலு சக்கர வண்டிக்கோ வாடகை வாங்குகிறார்கள். இவர்களெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை தர படம் எடுக்கிறார்களாம்.  அரசியலில் இப்போது இறங்கி இருக்கும் கமலோ/ரஜினியோ/விஜய்யோ இவர்கள் எல்லாம்
அரசியல் பற்றி பேச தகுதி அற்றவர்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285241

சிறந்த கருத்திற்கு நன்றி அண்ணா...
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Empty Re: பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum