ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

3 posters

Go down

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் Empty குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

Post by தாமு Mon Dec 21, 2009 6:28 am

குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ச்சியான மற்றும் சிரமமான செயலாகும். அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற வீதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்று பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டு அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.


அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான வீதத்தில் வளர்ச்சியும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.




கண்காணிக்கப்பட வேண்டிய வளர்ச்சி நிலைகள்



  • 2 மாதங்கள் - புன்சிரிப்பு
  • 4 மாதங்கள் - கழுத்து நிற்பது
  • 8 மாதங்கள் - எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
  • 12 மாதங்கள் - எழுந்து நிற்பது





பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்



  • தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
  • திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
  • கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
  • குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.





6 முதல் 12 வாரங்கள்



  • குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
  • பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.





3 மாதங்கள்



  • மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
  • குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
  • குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.





6 மாதங்கள்



  • குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
  • தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
  • குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
  • எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
  • குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
  • குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.





9 மாதங்கள்



  • கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
  • குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.





12 மாதங்கள்



  • குழந்தை எழுந்து நிற்கும்
  • 'மாமா' போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
  • வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.





18 மாதங்கள்



  • யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரைப் பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
  • கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
  • ஓரிரு வார்த்தைகளைப் பேசப்பழகிவிடும்.
  • குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.





2 வருடங்கள்



  • கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
  • கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
  • புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
  • தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
  • பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
  • உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.





3 வருடங்கள்



  • தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
  • நீ பையனா? பெண் பிள்ளையா? போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
  • பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
  • குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.





4 வருடங்கள்



  • மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
  • புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.





5 வருடங்கள்



  • துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
  • குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
  • படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
  • குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.


மூலம்:: என் டி டி வி-யின் மருத்துவர் குழு


www.indg.in
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் Empty Re: குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

Post by தண்டாயுதபாணி Mon Dec 21, 2009 6:30 am

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 677196 குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 677196 குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 677196 குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 677196
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் Empty Re: குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

Post by தாமு Mon Dec 21, 2009 6:44 am

தண்... குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் Empty Re: குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

Post by aarul Mon Dec 21, 2009 7:06 am

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 938222 குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 938222 குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் 938222
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் Empty Re: குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum