ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

5 posters

Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 4:39 pm

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Tanker

ரஷியாவிடமிருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும்
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதற்காக
சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக
அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்
மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருவதால் இரு
நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் என்ற
அச்சம் நிலவி வரும் சூழலில்,

அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு இரு நாடுகளுக்கும்
இடையிலான உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் தாங்கிக் கப்பல்கள், பீரங்கி வாகனங்கள்,
புதிய தலைமுறை போர் விமானங்கள், ஏவுகணைகள்
உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களின் உற்பத்தியில்
சீனா தன்னிறைவு அடைந்து வருகிறது.

எனினும், தனது ராணுவ கூட்டாளியான ரஷியாவிடமிருந்து,
உயர் தொழில்நுட்பத் தளவாடங்களை கொள்முதல்
செய்வதிலும் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில், உலகின் தலைசிறந்த போர் விமானங்களில்
ஒன்றாகக் கருதப்படும் சுகோய்-35 ரகத்தைச் சேர்ந்த
10 விமானங்களை ரஷியாவிடமிருந்து சீனா அண்மையில்
வாங்கியது.

மேலும், எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க
வல்ல ரஷியாவின் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணையும்
சீனா வாங்கியது.

நாட்டின் ராணுவத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக,
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையில் கடந்த 2016-ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்ட தளவாட மேம்பாட்டுத் துறை'
(இடிடி) மூலம் இந்த விமானங்களும், ஏவுகணைகளும்
ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்டன.

இந்த நிலையில், இந்தக் கொள்முதல் தங்களது அமெரிக்க
எதிர்ப்பாளர்களை தடைகள் மூலம் எதிர்கொள்ளும்'
(சிஏஏடிஎஸ்ஏ) சட்டத்தை மீறுவதாகக் கூறி, இடிடி' அமைப்பின்
மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா
வியாழக்கிழமை அறிவித்தது.

மேலும், இது தொடர்பாக இடிடி' அமைப்பின் இயக்குநர்
லீ ஷாங்ஃபூ மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்கா குறிப்பிடும் சிஏஏடிஎஸ்ஏ' சட்டம், உக்ரைன்
உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டின் அங்கமாக இருந்த
கிரைமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டதைக்
கண்டித்து, அமெரிக்காவால் கடந்த ஆண்டு இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவால்
பொருளாதாரத் தடை விதிக்கப்படும் ரஷியா அல்லாத முதல்
நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 4:42 pm



தடையால் என்னவாகும்?

-
ரஷியாவிடமிருந்து சுகோய்-35 விமானங்கள் மற்றும்
எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கிய சீனாவின் இடிடி'
அமைப்பின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையால்,
அந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு ராணுவ
தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்கள்
இனி மறுக்கப்படும்.

மேலும், அமெரிக்க அதிகாரத்துக்குள்பட்ட பகுதிகளில்
இடிடி' அமைப்பால் அந்நிய செலாவணிப் பரிமாற்றங்களை
மேற்கொள்ள முடியாது.

மேலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிதிப்
பரிமாற்ற வசதிகளை அந்த அமைப்பு பயன்படுத்த முடியாது.

அதேபோல், இடிடி' அமைப்பின் இயக்குநர் லீ லாங்ஃபூவும்
அமெரிக்க நிதிப் பரிமாற்ற வசதிகளையோப் பெறவோ,
அமெரிக்க அதிகாரத்துக்குள்பட்ட பகுதிகளில் அந்நியச்
செலாவணிப் பரிமாற்றங்களை செய்யவோ முடியாது.

மேலும், அமெரிக்கா வருவதற்கு அவருக்கு அனுமதி
மறுக்கப்படும்.
-
-----------------------------------

விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்

-
 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Shuang
-

ரஷியாவிடமிருந்து ராணுவ தளவாடங்களைக் கொள்முதல்
செய்ததற்காக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத்
தடைகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் அந்த
நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்
என்று சீனா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்
தொடர்பாளர் கெங் ஷுவாங் செய்தியாளர்களிடம்
வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ராணுவ தளவாடக் கொள்முதல் தொடர்பாக சீனா மீது
அமெரிக்கா விதித்துள்ள அர்த்தமற்ற தடையை வன்மையாகக்
கண்டிக்கிறோம்.

உலகின் இரு நாடுகள், சர்வதேச சட்டங்களுக்குள்பட்டு
தங்களுக்கு இடையே ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பை
மேற்கொள்வதற்கான உரிமையை இந்தத் தடை பறிக்கிறது.

இந்தத் தவறை உணர்ந்து, அமெரிக்கா உடனடியாக
அதனைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால்,
அதற்கான அனைத்து பின்விளைவுகளையும் அந்த நாடு
சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 4:44 pm

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Segei
-

நெருப்போடு விளையாடாதீர்கள்!

--
தங்கள் மீதும், சீனா மீதும் பொருளாதாரத் தடைகளை
விதிப்பது, நெருப்போடு விளையாடுவதற்கு ஒப்பானது
என்று அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சர்
செர்கெய் ரியப்கோவ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக ஸ்திரன்மை என்று ஒரு விஷயம் இருப்பதை
அமெரிக்கா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா
விதிப்பதன் மூலம் அந்த நாட்டுக்கும், ரஷியாவுக்கும்
இடையே பதற்றம் ஏற்படும் என்பதையும், அதனால்
உலக ஸ்திரத் தன்மை பாதிக்கப்படும் என்பதையும்
அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தன்னிச்சையான பொருளாதாரத்
தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்கா நெருப்போடு
விளையாடுகிறது. நெருப்போடு விளையாடுவது
மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைத்தனமாகத்
தோன்றலாம்.

ஆனால், அது மிகவும் ஆபத்தான செயலாகும் என்று
அவர் எச்சரித்தார்.
-
------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by சிவா Sat Sep 22, 2018 5:25 pm

சீனாவை அமெரிக்கா கட்டுப்படுத்த முடியாது, அமெரிக்காவை விட சர்வ வல்லமை படைத்தவர்கள் சீனர்கள். உலக நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்த அமெரிக்காவின் காலம் மலையேறிவிட்டது...



 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 5:54 pm

சைனா சக்தி அளவிடமுடியாதது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by SK Sat Sep 22, 2018 6:02 pm


இந்தியா ரஷ்யவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கிவில்லையா 

மிரட்டலுக்கு அடி பணிந்து விட்டதா நம் நாடு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by aeroboy2000 Sat Sep 22, 2018 6:27 pm


இந்தியா ரஷ்யவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கிவில்லையா 

மிரட்டலுக்கு அடி பணிந்து விட்டதா நம் நாடு


அதை ஏன் கேட்கிறீர்கள் நண்பரே


நம் பாசமிகு
அஞ்சா நெஞ்சர்
56 அங்குல மார்பர் (தடை செய்யப்பட்ட சொல்லா)

ஈரான் கிட்ட எண்ணை வாங்காதே என்று சொன்னதும்
வடிவேலு ஸ்டைலில்
ஈரானா அப்படி ஒரு கன்ட்ரியைக் கேள்விப்பட்டது கூட கிடையாதே ...
என்று கூறும் துணிச்சல் காரர் ...

ரஷியா பக்கம் தலை வச்சிப் படுப்பதும் கூடக் கிடையாதே ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி  மகிழ்ச்சி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by சிவா Sat Sep 22, 2018 7:15 pm

aeroboy2000 wrote:

இந்தியா ரஷ்யவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கிவில்லையா 

மிரட்டலுக்கு அடி பணிந்து விட்டதா நம் நாடு


அதை ஏன் கேட்கிறீர்கள் நண்பரே


நம் பாசமிகு
அஞ்சா நெஞ்சர்
56 அங்குல மார்பர் (தடை செய்யப்பட்ட சொல்லா)

ஈரான் கிட்ட எண்ணை வாங்காதே என்று சொன்னதும்
வடிவேலு ஸ்டைலில்
ஈரானா அப்படி ஒரு கன்ட்ரியைக் கேள்விப்பட்டது கூட கிடையாதே ...
என்று கூறும் துணிச்சல் காரர் ...

ரஷியா பக்கம் தலை வச்சிப் படுப்பதும் கூடக் கிடையாதே ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி  மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1278716

ஆறுதல்


 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை! Empty Re: அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
» தைவானுக்கு போர் விமானம்: அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்
» அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க ஆயத்தமாகும் சீனா?
»  தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum