ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_m10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10 
VENKUSADAS
தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_m10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_m10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10 
VENKUSADAS
தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_m10தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்?

3 posters

Go down

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Empty தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்?

Post by சிவா Wed Sep 05, 2018 11:36 pm



மனிதகுலத்தின் மிகப்பெரிய மாமருந்து, பிறந்த குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவு தாய்ப்பால்தான். அதனால்தான் அதை திரவ தங்கம் என அழைக்கின்றனர். பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தைகள் சிறப்பாக செயல்பட தாய்ப்பால் அவசியம் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. தாய்க்கும், குழந்தைக்குமான பாசத்தையும் இது பெருக்குகிறது. சர்வதேச அளவில் தாய்ப்பால் இல்லாமல் வருடத்திற்கு ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றன. பசும்பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் அது குழந்தையின் உள்ளுறுப்புகளுக்கு அதிக வேலையை கொடுக்கும். பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களில் இதுவும் ஒன்று. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் தாய்க்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது.


தாய்ப்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளுக்கு நிகரான நன்மைகள் தாய்க்கும் ஏற்படுகிறது. மார்பக புற்றுநோய் உள்ள பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெரிதும் குறைகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது. கருவுற்று இருக்கும்போதும், குழந்தை பிறந்தவுடனும் தாயின் எடை கூடும், தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் எடை குறையும், கருவுறுவதற்கு முன்பிருந்த உடல்வாகை திரும்பப்பெறுவார்கள். உண்மையில் தாய்ப்பால் சுரக்கும் அளவிற்கும், மார்பகத்தின் அளவிற்கும் சம்மந்தமே இல்லை. மார்பக திசுக்களின் எண்ணிக்கையும், அது தூண்டப்படும் விதமும்தான் தாய்ப்பாலின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால் தாய்மார்கள் பயப்பட தேவையில்லை. மாதவிடாய் ஏற்படும் காலத்தை தாமதப்படுத்துகிறது, இரத்த இழப்பையும் சரிசெய்கிறது.


உளவியல் ரீதியான பல காரணங்களும் உள்ளன. தாய்க்கும், சேய்க்குமான உறவு வலுப்படும், மனநிம்மதி கிடைக்கும். இப்படி தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் பல நன்மைகள் உண்டாம். இந்த விஷயத்தில் ஆண்கள் உணர வேண்டியதும் இருக்கிறது. ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதென்பது மிக இயல்பான, தேவையான ஒரு செயல். அவள் அதை எந்த இடத்திலும் கொடுப்பதற்கான சங்கடமின்மையை ஆண்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு, பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் மையங்களை அமைத்திருக்கிறது. இருந்தாலும் அவை கூட தேவையில்லாத அளவுக்கு மனமாற்றம் வேண்டும். சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றில் ஒரு பெண் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் அட்டைப்படமாக வந்தது. அதற்கு எழுந்த எதிர்ப்பும் சர்ச்சைகளும் அந்த மனமாற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுகின்றன.


தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Empty Re: தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்?

Post by ayyasamy ram Mon Sep 10, 2018 9:03 am

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? 103459460
-தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? 201803021209247406_Case-registered-against-magazine-Grihalakshmi-model-Gilu_SECVPF

தாய்ப்பால் புகட்டுதல் இயற்கையான ஒன்றுதான்
என்பதை நிரூபிக்கும் வகையில், க்ரிஹலஷ்மி
(Grihalakshmi) எனும் மலையாள இருவார இதழில்
மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும்
புகைப்படம் அட்டைப்படமாக வைக்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது. க்ரிஹலஷ்மி இதழ் பெண்களுக்காக
மாத்ரூபூமி வெளியீடாக வரும் இதழாகும்.

அந்த அட்டைப்படத்தில்,
“தாய்மார்கள் கேரளாவிடம் கூறுகின்றனர்:
“தயவுசெய்து எங்களை உற்றுப்பார்க்காதீர்கள்;
நாங்கள் பால் கொடுக்க வேண்டும்”, என
எழுதப்பட்டிருந்தது.

இந்த அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மாடல்
கிலு ஜோசஃப், கவிஞர், எழுத்தாளர், விமான
பணிப்பெண் என பன்முகத் தன்மை கொண்டவர்.

இதுகுறித்து, கிலு ஜோசஃப் தெரிவிக்கையில்,
“தாய்ப்பால் புகட்டுவதை பாலியல் ரீதியாக
தொடர்புப்படுத்தி பார்ப்பதுதான் தவறு.
அது ஒரு அழகான விஷயம். இதை ஏன் தவறாக
நினைக்கிறீர்கள்?

உங்கள் குழந்தைக்கு பால் புகட்டினால்,
எந்த கடவுள் கோபமடையும்”, என கூறினார்.
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Empty Re: தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்?

Post by SK Mon Sep 10, 2018 5:08 pm

அருமையான பதிவு தல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்? Empty Re: தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum