ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!

2 posters

Go down

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?! Empty பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!

Post by ayyasamy ram Tue 14 Aug 2018 - 21:13


பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?! 5
-
பிளாஸ்டிக் சூழ் உலகு என்று வர்ணிக்கும் அளவு
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன
பிளாஸ்டிக் பொருட்கள்.

நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலும்
எத்தனை மண்ணில் மட்கக் கூடியவை என்று யோசித்துப்
பாருங்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு மிகவும்
குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும்.

காலையில் எழுந்து பிரஷ் செய்வதில் தொடங்கி இரவு
தூங்கச் செல்லும்வரை பிளாஸ்டிக் என்பது ஒரு தவிர்க்க
முடியாத பொருளாக இன்று உருவெடுத்துள்ளது.

பயன்படுத்திய பிறகு தூக்கி எறியக்கூடிய
(Use and Throw) கலாச்சாரம்தான் இன்றைய
உலகையே இயக்கிக் கொண்டும் இருக்கிறது.

சராசரியாக ஒரு பிளாஸ்டிக் முழுவதுமாக அழிவதற்கு
200 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதனால்
சுற்றுப்புறச் சூழலுக்கும், நமக்கும் பிளாஸ்டிக் என்பது
பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது.

என்னதான் பிளாஸ்டிக்கினை ஒழிக்க அரசு பலவித
கெடுபிடிகளை விதித்தாலும் பிளாஸ்டிக் என்னும்
நெகிழியின் பயன்பாடு இன்னும் முடிவுக்குக் கொண்டு
வர முடியாமல் திணறுகின்றனர்.

இதற்கு சரியான மாற்று வழிதான் பயோ பிளாஸ்டிக்
என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எதிர் வரும் 2050-ம் ஆண்டில் கடலில் இருக்கும்
மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை
அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்துக் கட்ட அதற்கு மாற்றுப்
பொருள் இன்று அவசரமாகத் தேவைப்படுகிறது.
எனவேதான் பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிக்கும்
முனைப்பு உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது.

அத்தகைய முயற்சிகளில் முக்கியமான ஒன்றுதான்
இந்த பயோ பிளாஸ்டிக்(Bio Plastic).
வெதுவெதுப்பான தண்ணீரில் உடனடியாகவும்,
நிலத்திலோ, கடலிலோ கரையக்கூடிய ஒரு சிறப்பை
பயோ பிளாஸ்டிக் பெற்றுள்ளது.

அதுவும் 2 அல்லது 3 மாதங்களில் கரைந்துவிடும் என்பது
இதன் தனிச்சிறப்பு என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அப்படி என்ன இருக்கிறது இந்த பயோ பிளாஸ்டிக்கில்?

பயோ பிளாஸ்டிக் என்பது மரவள்ளிக்கிழங்கு,
மக்காச்சோளம், சோயா ஆகியவற்றைப் பயன்படுத்தித்
தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக
இதில் பைகள் செய்து பயன்படுத்தலாம்.

வேடிக்கைக்காகச் சொன்னால், நச்சுப்பொருட்கள்
இல்லாததால் பயோ பிளாஸ்டிக்கை கரைத்துக்
குடித்தாலும் உடலுக்குத் தீங்கு விளையாது.

பயோ பிளாஸ்டிக் பைகள் சில நாட்களிலேயே மண்ணிலோ,
நீரிலோ கரைந்து போய்விடுகின்றன. ஆகையால், இதற்கு
100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயோபிளாஸ்டிக்கின் நன்மைகள் என்ன?

* பயோ பிளாஸ்டிக் என்பது முழுக்கமுழுக்க காய்கறிகள்
மற்றும் இயற்கை கழிவுகளால் தயாரிக்கப்படுவதால்
இதனை குழந்தைகளோ அல்லது விலங்குகளோ
உட்கொண்டு விட்டாலும் உடலுக்கு எந்தவித பாதிப்பும்
ஏற்படாது.

* நிலத்திலேயே விட்டுவிட்டாலும் 2 அல்லது 3 மாதங்களில்
மக்கி மண்ணுக்கு சிறந்த உரமாக மாறி பயன் அளிக்கும்
குணம் கொண்டது பயோ பிளாஸ்டிக்.

*இதனை எரித்தாலும் எந்தவித தீய மாசும் சுற்றுச்
சூழலுக்கு ஏற்படுத்துவதில்லை. சாதாரண காகிதம்
பேப்பர் போன்று எரிந்து சாம்பலாகி விடுகிறது.

* சாதாரண பிளாஸ்டிக் பையை விட விலை சற்று
அதிகமென்றாலும் துணிப்பை மற்றும் இதர பைகளை
விட இது விலை குறைவாகவே இருக்கும்.

* பாலித்தீன் பைகளால் வரும் நரம்பு தளர்ச்சி, நோய்
எதிர்ப்பை குறைத்தல், மூச்சுக் குழாய் பாதிப்பு, சிறுநீரக
செயல் குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற
அபாயங்களிலிருந்து நம்மை காக்கிறது.

நாளைய சந்ததிகளுக்கு ஏதாவது நல்லது புரிய வேண்டும்
என்றால் நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக
வைத்திருப்பதுடன், அவற்றை அடுத்த தலைமுறைக்கு
நல்ல முறையில் விட்டுச் செல்வது
நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதை உணர
வேண்டும்!
-
------------------------

- எம். வசந்தி
நன்றி- குங்குமம் டாக்டர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?! Empty Re: பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!

Post by T.N.Balasubramanian Tue 14 Aug 2018 - 21:45

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?! 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» கள்ள நோட்டுக்களை ஒழிக்க பிளாஸ்டிக் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி
» கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை
»  பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum