ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் காதல்

5 posters

Go down

முதியோர் காதல் Empty முதியோர் காதல்

Post by Mr.theni Sat Jul 21, 2018 8:02 pm


முன்னைநாள் கவர்ச்சி யில்லை;
   முறுவலாய் என்னைக் கொல்லும்
அன்றைநாள் மலர்ச்சி யில்லை;
   அழகிய பற்கள் இல்லை;
என்னையே அடக்கம் செய்த
   இடுப்பசை வின்றிங் கில்லை;
என்னதான் இலையென் றாலும்
   எனக்கிங் கவள்தான் எல்லாம்.

சொல்லினில் தேன்கு ழைத்தே
      சிந்திடும் வித்தை யில்லை;
பல்லினில் முத்தைக் காட்டிப்
      பளிச்சென எனையே வீழ்த்தும்
சொல்லிட இயலா ஆற்றல்
      சிறிதுமே இல்லை;ஆனால்
அல்லொடு பகலு மின்பம்
     அளிக்கிறாள்;அவள்தான் எல்லாம்.

தளுக்கொடு மிடுக்கும் சேர்ந்த
       தளிர்நடை இன்றைக் கில்லை;
விழுந்திடச் செய்யும் கையின்
     வீச்செதும் இன்றைக் கில்லை;
களுக்கெனச் சிரித்தே முல்லை
      கொட்டிடும் இளமை யில்லை;
அழகென ஒன்று மில்லை;
     ஆயினும் அவள்தான் எல்லாம்

வாயினிற் பற்கள் இல்லை;
     வார்த்தையில் தெளிவே இல்லை;
ஆயிரம் சுருக்கம் கொண்ட
    அவள்முகம் கவர்ச்சி யில்லை;
போயவள் திரும்பும் போது
       பொலிவுகள் உதிர்வ தில்லை;
ஆயினும் அவளி ருப்பே
    அளவிலா மகிழ்ச்சி கூட்டும்.

பசப்பிடும் உரைகள்  இல்லை
     பார்வையில் மயக்கம் இல்லை;
உசுப்பிடும் உரசல் இல்லை;
    உணர்ச்சிகள் கொதிப்ப தில்லை;
அசத்திடும் அணைப்பு மில்லை;
    அணுவெலாம் துடிப்ப தில்லை;
திசுக்களில் உணர்ச்சி யில்லை;
     சத்தியம் அவள்தான் எல்லாம்

தீயினை மூட்டி விட்டுச்
     சிரித்திடும் சீண்டல் இல்லை;
வாயினை இதழ்ப்பூட் டாலே
     பூட்டிடும் முயற்சி யில்லை;
ஆயிரம் பொருள்கள் கூறும்
   அங்கமே பேச வில்லை;
ஆயினும் எனக்க வள்தான்
   ஆயுளின் இன்ப வெள்ளம்.

கவிஞர் ச.சவகர்லால்

( எனக்கு வந்த முக நூல் பதிவு.)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

முதியோர் காதல் Empty Re: முதியோர் காதல்

Post by Dr.S.Soundarapandian Sat Jul 21, 2018 8:22 pm

முதியோர் காதல் 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முதியோர் காதல் Empty Re: முதியோர் காதல்

Post by சிவனாசான் Sat Jul 21, 2018 9:27 pm

தேன் நீ. எனவே தெவிட்டாத கவிதை தேன்.
உம் அன்பரை பார்த்தாயா சவகர்லால் என்னே
அருமை தமிழ் உள்ளம் உணர்வு எல்லாம்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

முதியோர் காதல் Empty Re: முதியோர் காதல்

Post by ayyasamy ram Mon Jul 23, 2018 8:13 pm

முதியோர் காதல் 103459460 முதியோர் காதல் 3838410834
-
குடும்ப விளக்கில் - முதியோர் காதலில் .....


-------------
புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எது எனக்கின்பம் நல்கும்?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!
-
-----------------------------------
முதியோர் காதல் - பாரதிதாசன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதியோர் காதல் Empty Re: முதியோர் காதல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 23, 2018 8:35 pm

ayyasamy ram wrote:முதியோர் காதல் 103459460 முதியோர் காதல் 3838410834
-
குடும்ப விளக்கில் - முதியோர் காதலில் .....


-------------
புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எது எனக்கின்பம் நல்கும்?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!
-
-----------------------------------
முதியோர் காதல் - பாரதிதாசன்
அருமையான முதியோர் காதல் கவிதை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

முதியோர் காதல் Empty Re: முதியோர் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum