ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Go down

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா! Empty "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:04 pm

இன்றைய தலைமுறை மாணவர்கள் நமது விழுமியங்களாக இருக்கும் பாரம்பர்ய விஷயங்களை, பொருள்களை, கிராமத்தின் தொன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி ஒன்று, பாரம்பர்ய பொருள்களைக்கொண்டு இரண்டு நாள்கள் கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியை நடத்தி பாராட்டுப் பெற்றுள்ளது.

[You must be registered and logged in to see this link.]

கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா! Empty Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:06 pm

[You must be registered and logged in to see this link.]
இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா! Empty Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:10 pm

[You must be registered and logged in to see this link.]


இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,
"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.
[You must be registered and logged in to see this link.]


'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை

வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா! Empty Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:12 pm

[You must be registered and logged in to see this link.]
இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.
கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா! Empty Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum