ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

+2
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 6:45 pm

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! F5d25610

கடையில் நீங்கள் வாங்கிய உருளை சிப்ஸில் கொடுத்த காசுக்குப் பெறுமானமுள்ள அளவுக்கு சிப்ஸ் இல்லை என்று அடிக்கடி கவலைப்படும் நாம் அந்த சிப்ஸுக்குள் இருக்கும் உள்ளரசியலை எப்போதாவது கவனித்திருக்கிறோமா? சிப்ஸ் பாக்கெட்டில் பெயருக்கு பத்தே பத்து உருளை சிப்ஸ் ஃப்ளேக்குகளைப் பேக் செய்து விட்டு மிச்சத்திற்கு காற்றடைத்து விற்பனை செய்கிறார்கள் என்று நம்மில் பெரும்பாலானோர் பலமுறை வருத்தப்பட்டிருப்போம். ஆனால் அவர்களது ஏமாற்றுத்திறன் அதில் மட்டுமில்லை. உருளை சிப்ஸை டிசைன் செய்வது முதலே தொடங்கி விடுகிறது என்கிறது இந்த காணொளிக் காட்சி.

இதையெல்லாம் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்பவர்கள் யாரும் கனவிலும் யோசித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு வாய்க்கு ருசியாக மொறு, மொறுப்பாக உண்பதற்கு சிப்ஸ் கிடைத்தால் போதும். அதிலும் அந்த சிப்ஸ் சாதாரண பாலீதீன் பேக்கில் இல்லாமல் பிரபலமான சிப்ஸ் கம்பெனியின் பெயர் அச்சிடப்பட்ட கவர்ச்சியான ராப்பருடன் கூடிய பேக்காக இருந்தால் இன்னும் அந்தஸ்தாக உணர்வோம். இப்படித்தானே இத்தனை நாட்களும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை முட்டாள் தனமானது என்று நுகர்வோர் யோசிக்க வேண்டிய தருணம் கடந்து கொண்டிருக்கிறது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 6:50 pm

இது ஹோம்மேட் உருளை சிப்ஸ்...

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! 458caf10

இது பன்னாட்டு வணிக நிறுவன பேக்கிங்கில் கிடைக்கும் உருளை சிப்ஸ்...
வீட்டில் சிப்ஸ் வறுக்கும் போது கவனித்திருப்பீர்கள். நம் வீட்டு சிப்ஸ்கள் வகைக்கொன்றான பொரிந்து வந்திருக்கும். அவற்றை நாம் ஆற வைத்து பிளாஸ்டிக் ஜாரில் எடுத்து வைக்கையில் சில சிப்ஸ்கள் உடைந்து விடும். சில வடிவமிழந்து எளிதில் உடையும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். மொத்தத்தில் சிப்ஸின் வடிவத்தில் நாம் பெரிதாக கவனம் செலுத்தியிருக்க மாட்டோம். ஆனால், அதே கடையில் வாங்கும் சிப்ஸ்களை நம் வீட்டு சிப்ஸ்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உற்றுக் கவனித்தீர்களெனில் சிப்ஸ்களின் சுவை முதல் அவற்றின் வடிவம், அவை ஸ்லைஸ் செய்யப்பட்டு பொறித்தெடுக்கப்பட்ட விதம், பேக்கிங் நுணுக்கம் முதல் அத்தனையிலுமே நாம் மாபெரும் வித்யாசங்களைக் காண முடியும்.
மேலோட்டமாகப் பார்த்தால் அவற்றில் பெரிதாக எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றலாம். ஆனால் அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மாபெரும் வியாபார தந்திரம் இருக்கிறதென்கிறது மேலுள்ள காணொளி. இவர்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 6:52 pm

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! 627ca910
சிப்ஸ்களை இரண்டு கர்வ் அதாவது வளைவுகளுடன் டிசைன் செய்வதால் அவை எளிதில் உடைந்து போகாமலிருப்பதோடு, கையில் பிடித்து உண்பதற்கும் வசதியாக இருக்கிறது. அது மட்டுமல்ல, பாக்கெட்டில் பேக் செய்யும் போது உள்ளே நிறைய சிப்ஸ் இருப்பதான தோற்றத்தையும் அது ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் இந்த சிப்ஸ்களை பல லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்து சூப்பர் கம்ப்யூட்டர்களை வைத்து இப்படி இரண்டு கர்வ் வருமாறு டிசைன் செய்து விற்பனை செய்கின்றன பன்னாட்டு வணிக நிறுவனங்கள். இதனால் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் வாங்கி உண்பவர்களுக்கு பாக்கெட்டின் வடிவத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பம் அதனுள்ளிருக்கும் சிப்ஸை உண்ணும் போது கிடைப்பதில்லை. ஏனென்றால் உள்ளே சிப்ஸ் இருந்தால் தானே?! அவர்கள் பெயருக்கு சிப்ஸ் என்று பெயரிட்டு காற்றடைத்த பாக்கெட்டுகளைத் தானே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றால். குறைவான உற்பத்தியில் நிறைவான... இல்லையில்லை கொள்ளை, கொள்ளையாய் லாபம். அவ்வளவு தான். அது போதாதா?!
நுகர்வோர் நலன் பற்றிய அக்கறை துளியுமின்றி லாபத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்ட இந்த ஏமாற்று வித்தைக்கு அவர்களிட்டுள்ள சாகஸப் பெயர் தான் வியாபார தந்திரம், தொழில் ரகசியம் இத்யாதி, இத்யாதி.
Video & Concept Courtesy: LMES
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by ராஜா Wed Jun 06, 2018 4:19 pm

நல்ல கட்டுரை ஆனால் தினமணி சொல்வது போல இதில் பூசணிக்காயை எல்லாம் மறைக்கவில்லை, அதற்கு தான் அவர்கள் சிப்ஸ் பாக்கெட்டில் மேல் எடை எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ளார்களே.

உருளை சிப்ஸ் இது போல இரட்டை வளைவுகளை கொண்டு வடிவமைத்துள்ளதில் மிகப்பெரிய அறிவியல் உள்ளது. LMES என்ற youtube தளத்தில் பிரேம் ஆனந்த் குறிப்பிட்டுள்ளதை கீழே பாருங்கள். சுவராஸ்யமாக இருக்கும் இது போல இவர் நிறைய காணொளிகள் பதிவிட்டுள்ளார் விருப்பமுள்ளவர்கள் பாருங்கள். இப்ப சமீபத்தில் sterlite பற்றி காணொளி போட்டதால் நிறைய சர்ச்சைகளும் பிரபலமாகவும் ஆகிட்டார்னு நினைக்கிறேன் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 5:50 pm

ஆனந்த் வீடியோ விளக்கம் மிக அருமை ராஜா
நீங்கள் வீடியோ பதிவிட்டு உண்மையை
புரியவைத்து உள்ளீர்கள் நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by krishnaamma Wed Jun 06, 2018 10:39 pm

உங்கள் பதிவு மிகவும் உண்மையானது ஐயா, ஒரு பத்து சிப்ஸ் கூட உள்ளே இருக்காது, நாம் அவர்களின் பேக்கிங் காக மட்டுமே பணம் தருவது போல் இருக்கும் ....சோகம்
.
.
.

..
என்னுடைய நெட் மிகவும் ஸ்லொவ் வாக உள்ளது சோகம் ...எனவே, வீடியோ நாளை பார்த்து பதில் போடுகிறேன் ஐயா............பதிவுக்கு மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 11:33 am

krishnaamma wrote:உங்கள் பதிவு மிகவும் உண்மையானது ஐயா, ஒரு பத்து சிப்ஸ் கூட உள்ளே இருக்காது, நாம் அவர்களின் பேக்கிங் காக மட்டுமே பணம் தருவது போல் இருக்கும் ....சோகம்
.
.
.

..
என்னுடைய நெட் மிகவும் ஸ்லொவ் வாக உள்ளது சோகம்  ...எனவே, வீடியோ நாளை  பார்த்து பதில் போடுகிறேன் ஐயா............பதிவுக்கு மிக்க நன்றி !  புன்னகை

நான் 2001 வருடம் மில்லிற்கு மிஷின் வாங்க டெல்லி சென்று அங்கிருந்து காரில் ஹரியானவில் இருந்த மில்லை தேடி சென்றோம்.அப்போது என்னுடன் வந்த புரோக்கர்
நாம் செல்லும் வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது எனவே ஏதாவது வாங்கி செல்வோம்
என்று கூறி பிஸ்கட்,பிரட் மற்றும் இந்த சிப்ஸ் நான்கைந்து வாங்கி கொண்டார் டிரைவர்
சேர்த்து மூன்று பேருக்கு.
போக போக பசி முதலில் இந்த சிப்ஸை எடுத்தோம் பாக்கெட் பெரியது மனதளவில்
திருப்தி. பிரித்தவுடன் ஒரே காற்று ,யானை பசிக்கு சோளப்பொரி என்பார்களே அப்போது
இதற்கு அர்த்தம் புரிந்த்து.பாக்கெட்டில் எடை குறிக்கப்பட்டிருப்பினும் மனதளவில் நாம்
ஏமாற்றப்படுகிறோம் என்பதே உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by krishnaamma Thu Jun 07, 2018 11:35 am

பழ.முத்துராமலிங்கம் wrote:

உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 12:14 pm

krishnaamma wrote:

நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by krishnaamma Thu Jun 07, 2018 12:17 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:

உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை
நன்றி அம்மா

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! Empty Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum