ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

5 posters

Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 4:09 pm

இன்று பல சமூக பிரச்னைகள் மக்கள் போராட்டமாக மாறி வீதிக்கு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மனிதர் வீதிகளில் உள்ள சமூகப் பிரச்னைக்கு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூரு வீதிகளின் பிரச்னையை வண்ணங்கள் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறார். ஆம், பெங்களூருவின் சாலைகளை சமூக விழிப்புஉணர்வு ஓவியங்களால் நிரப்பும் பாதல் நஞ்சுண்டசாமிதான் அந்த மாற்றத்துக்கான நபர்.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  2551a210

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
picture: https://twitter.com/baadalvirus

``ஒரு ஓவியம்... இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு'' - இதெல்லாம் நம்பவா முடிகிறது. இது சாத்தியம்தான் பெங்களூரு சாலையில் நீண்ட நாட்களாக மூடப்படாமல் கொசுக்களை பரப்பிக்கொண்டிருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்தவாறே இருந்தது. அது நஞ்சுண்டசாமியின் கண்ணில் பட்டது. அடுத்த கனமே அங்கு ஒரு மிகப்பெரிய மெகா சைஸ் கொசு ஓவியம் வரைந்து முடித்தார். கொசுவின் வாயாக பாதள சாக்கடையை வடிவமைத்தார். ஓவியம் அழிவதற்குள் பெங்களூரு மாநகராட்சி சாக்கடையை மூடியது. இந்த கவன ஈர்ப்புதான் இவரின் சாதனை.

இவர் மட்டுமல்ல..`நம்ம பெங்களூரு’ என்று ஒரு குழுவாக ஓவியர்கள் தங்கள் சமூக கோபத்தைத் தீர்வாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் கவன ஈர்ப்பு உத்தி எல்லாரையும் வியக்க வைக்கிறது. இதில் வியக்க வைத்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. பெங்களூருவில் இவரை தெரியாத சமூக அக்கறை கொண்ட இதயங்கள் குறைவு. காணும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் இவரது தூரிகை சரி செய்ய ஆயத்தமாகிவிடும்.

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  42484210


2015 - ஆம் வருடம், நம் ஊரில் இருப்பதைப்போலவே, பெங்களூருவின் பிரதான சாலைகளில் ஒன்றான சுல்தான் பாளையாவில் அப்போது பெய்த கனமழை காரணமாக, 15 அடி அளவில் பெரிய பள்ளம் தோன்றியது. அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக அந்த நகரைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் கண்ட பாதல், அந்தப் பள்ளத்தின் மீது ஃபைபரில் செய்யப்பட்ட முதலையைக் கொண்டு 3D ஓவியத்தை செய்திருந்தார். அந்த முதலை நிஜ முதலை போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. சாலையைக் கடந்து சென்ற பெரும்பாலானோர் அதை உண்மையான முதலை என்றே நினைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து. பலர் அதைப் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம், காட்டுத் தீயாக பரவ, அடுத்தநாளே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பள்ளத்தை சரிசெய்தனர். பாதல் வரைந்த முதலை, முதல்வர் வரை பாய்ந்ததுதான் இதன் வெற்றி!
நன்றி
விகடன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon May 28, 2018 4:16 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 4:15 pm

கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரு காமராஜ் சாலை – கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கினார் பாதல் நஞ்சுண்டசாமி. அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல,கன்னட நடிகை சோனு கௌடாதான்.சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிற உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கினார். இதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாதல் பெங்களூருவின் ரியல் ஹீரோவானார். தனக்குத் தெரிந்த கலையை மக்களின் பிரச்னைக்கான தீர்வாக மாற்றிய பாதல் நஞ்சுண்டசாமியுடன் பேசினோம்.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  9c700010


``பெங்களூருதான் என் சொந்த ஊர். சமரராஜேந்திரா கல்லூரியில் ஓவியக்கலை பயின்றேன். படிப்புக்குப் பிறகு ஒக்லிவி & மாதர் எனும் விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைவது பிடித்தமான விஷயம். இந்தக் கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் கலையாகப் பார்க்கவிரும்பவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகான, என் ஓவியங்களால் முடியும் என்று நம்பினேன். இன்று ஓரளவுக்கு அதனை நோக்கி ஓடுகிறேன்.

என் ஓவியங்கள் மக்கள் பிரச்னைகள், உரிமைக்கான குரல், மக்களின் மனநிலை என அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதைத்தான் என் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. என்னுடய ஓவியங்கள் சாக்கடையை மூடாமல் இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட தெருவின் பிரச்னைகளை மட்டும் பேசாமல், நிகழுலகில் நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளையும் (current affairs) பேச வேண்டும் என்பது என் ஆசை.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  A03e9e10


இந்த எண்ணம் எனக்கு இன்று தொடங்கியது அல்ல. கல்லூரி காலத்திலிருந்தே என் கனவு இதுதான். நான் சந்திக்கும் மனிதர்கள்தான் இதற்கான இன்ஸ்பிரேஷன். கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறேன். என்னால் முடிந்த உதவியை இந்த சமூகத்துக்கு என் கலை மூலம் சொல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம்.’’

பாதல் நஞ்சுண்டசாமி எதார்த்தமாய் பேசுகிறார். அவர் ஓவியங்கள் அரசு இயந்திரத்தை செயல்பட வைக்கிறது. எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு நகரும் அவர் அடைத்தது சாக்கடை ஓட்டைகளை மட்டுமல்ல சமூக ஓட்டைகளையும் தான். சபாஷ் பாதல்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by ayyasamy ram Mon May 28, 2018 5:06 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by T.N.Balasubramanian Mon May 28, 2018 5:58 pm

மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon May 28, 2018 6:00 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 6:58 pm

ayyasamy ram wrote:
விடியோ பதிவிற்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 7:00 pm

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்
நன்றி ஐயா ரமேஷ் பதிவை எதிர் நோக்குவோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by krishnaamma Tue May 29, 2018 10:50 am

பகிர்வுக்கு நன்றி...ஆனால் இது மிக பழைய செய்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by krishnaamma Tue May 29, 2018 10:51 am

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்

சிலவற்றை உடனே சரி செய்தார்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 29, 2018 4:13 pm

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்
அந்த பள்ளங்கள் மூடப்பட்டனவா என்று தெரியவில்லை ஐயா ... சிரி ஆனால் மெட்ரொ பணியின் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் பல பகுதிகளில் சாலைகள் சரியாக இல்லை ஐயா மேடு பள்ளமாக தான் இப்பொழுதும் உள்ளது ..


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Empty Re: பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum