ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

2 posters

Go down

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் Empty "சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 3 May 2018 - 19:28

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் INYU8HbRuanVjZma5ER1+13e4f9b79f12042abcdedce756580133
கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கூட பேட்ஸ்மேன்கள் இந்தளவுக்கு ஆக்ரோஷமான சதங்களை அடித்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கோடைக்காலம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலை அள்ளி வீசுகிறது. வெயிலுக்குப் பயந்து பலர் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றனர். ஒருசிலர் வெயிலின் கொடுமை தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்பவர்கள் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான கொடிவேரியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க
"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் MwYyfMYeSJq0V3b8C2RU+9720b0428f695f85cb3df4b4a5cead18
!
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடிவேரி. கொடிவேரி பிரிவு சாலையில் இறங்கி வெறும் ரெண்டே கி.மீ காலார நடந்தால், சில்லென்ற சாரல் காற்றுடன் கொடிவேரி உங்களை வரவேற்கும். (என்கிட்ட தான் கார் இருக்கே!...நான் ஏன் நடக்கணும் எனக் கேட்பவர்கள்... காருக்கு டோக்கன் பாஸ் போட்டுவிட்டு நேராக கொடிவேரியில் நீங்கள் இறங்கலாம்). கொடிவேரி அணைக்குள் நுழைய ஆள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் Empty Re: "சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 3 May 2018 - 19:30

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் GLBKEZmES9i9Cq0GvQUn+708a4d48857c54cbd153fb44eaa460c6
நிற்க!.. இந்த இடத்தில் கொடிவேரி அணைக்கட்டின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கொடிவேரி அணைக்கட்டு காவிரி ஆற்றின் உபநதியாகிய பவானி ஆற்றின் குறுக்கே, பவானிசாகர் அணைக்கு கீழ்ப்புறம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை மைசூர் மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 151 மீட்டர்.
இந்த அணையின் இடதுபுறம் அரக்கன்கோட்டை கால்வாயும், வலது புறத்தில் தடப்பள்ளி கால்வாயும் அமைந்துள்ளன. இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வருடம் 365 நாள்களும் இந்த அணைக்கட்டின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, அது குடிநீருக்காகவும், விவசாய நிலங்களுக்கும் செல்கிறது. எனவே, எப்போது வந்தாலும் கொடிவேரியில் ஜாலியாக ஒரு குளியல் போடலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து பொத்தென கீழே விழுவதன் மூலம் ஓர் அழகான நீர் வீழ்ச்சியாய் உருவாகிறது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அருவி போல் இருந்தாலும், குளிர்ச்சியாய் தலையில் அது கொட்டும்போது சொர்க்கம்தான். தற்போது விவசாயத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து 500 க.அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. மே மாதம் விடுமுறைக்காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாகியுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் Empty Re: "சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 3 May 2018 - 19:31

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் XJeCh1sS9G6SGWaEan2E+82b2d9ee4496d3409535b6cd55887ea5

நன்றாக குளியல் போட்டு வந்ததும், சாப்பிடுவதற்கு சுடச்சுட வறுத்த மீன் ரெடியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுடு சோற்றில் குழி வெட்டி, அதில் மீன் குழம்பை ஊற்றித் தருகிறார்கள். அணையிலிருந்து கொட்டும் நீரை பார்த்தபடியே மீன் சாப்பாட்டை சாப்பிடும்போது ஆகா... பரம ஆனந்தம். சுமார் 25-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கொடிவேரியில் இருக்கின்றன. பக்கத்திலிருக்கும் பவானிசாகர் அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள்தான் என்றாலும், உஷாராக இருக்க வேண்டும். ஒருசில கடைகளில் கெட்டுப்போன மீன்கள்தான் சுடச்சுட பறிமாறப்படுகின்றன. மேலும், மாங்காய், நிலக்கடலை, வெள்ளரிக்காய், இலந்தை வடை என சாப்பிடுவதற்கு எக்கச்சக்கமாக பொருள்கள் கிடைக்கின்றன.
குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா, பரிசல் சவாரி என கொடிவேரி ஒரு பக்காவான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ஆனால், கொடிவேரியில் தங்குவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. வந்தால் குளித்து, ரசித்துவிட்டுச் செல்லலாம் அவ்வளவுதான்... அந்தவகையில், கொடிவேரி ஒருநாள் டூரிஸ்ட் ஸ்டாட் தான். மேலும், கொடிவேரியில் மீன் கடைகளைத் தவிர்த்து சாப்பாட்டுக் கடைகள் என்று எதுவும் இல்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துவருவது நல்லது. இல்லையென்றால், சாப்பாட்டுக்கு 20 கி.மீ பயணித்து கோபிச்செட்டிபாளையமோ, சத்தியமங்கலமோதான் செல்ல வேண்டும்.
எனக்கு எதுவும் தேவையில்லை. அடிக்குற வெயிலை சமாளிக்க சில்லுனு தண்ணியில விழுந்து கிடந்தா போதும் என நினைப்பவர்கள், உடனே கொடிவேரிக்கு கிளம்பலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் Empty Re: "சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu 3 May 2018 - 19:35

முன்பு நாங்கள் எல்லாம் வருடம் இருமுறையாவது கொடிவேரி செல்வோம் ஐயா ... அருமையான இடம் .. சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட(படும் ?) பகுதி ... சின்ன தம்பி படத்தில் வரும் வீடும் இங்கு தான் அமைந்துள்ளது ... நடிகர் பாக்கியராஜின் வெள்ளாங்கோவிளுக்கு அருகில் உள்ள ஊர் ...பவானி சாகர் அணை பூங்கா, பண்ணாரி அம்மன் கோவில் ,கொடிவேரி என ஒரு நாள் பயணத்திற்கு மிகவும் ஏற்றது ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம் Empty Re: "சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum