ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சியான் விக்ரம்

Go down

சியான் விக்ரம் Empty சியான் விக்ரம்

Post by SK Tue Apr 17, 2018 5:40 pm



தனது தந்தை அடைய நினைத்த லட்சியத்தை, மகன் அடைந்து காட்ட முயற்சி செய்தான். தன்னைப்போல் தன் மகனும் தோல்வியைச் சந்திக்க வேண்டாமென, மகனின் கனவுக்குத் தடையாக நின்றார், தந்தை. அந்தத் தந்தை, நடிகர் வினோத் ராஜ். மகன், நடிகர் விக்ரம். தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் கடந்துவந்த பாதை அவ்வளவு சாதாரணமானவை அல்ல.

விக்ரம்

தன் தந்தையின் ஆசைப்படி லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், எம்.பி.ஏ-வும் படித்து முடித்தார். எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கும்போதே 1984-ல் `என் காதல் என் கண்மணி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட விபத்து, மூன்று ஆண்டுகள் இவரைப் படுத்த படுக்கையாக்கியது. தன் முயற்சியைக் கைவிடாத விக்ரம், மூன்று ஆண்டுகள் கழித்து அதே படத்தில் நடித்தார். 1990-ல் படமும் வெளியானது; படம் படுதோல்வி. தொடர் தோல்விக்கு விக்ரம் மட்டும் விதிவிலக்கா என்ன? தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தில் பல விபத்துகளைச் சந்தித்திருக்கிறார். ஒன்றோ, இரண்டோ கிடையாது... தொடர்ந்து ஒன்பது வருடங்கள் தோல்வி.

தமிழில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் சியான். அந்தப் பக்கமும் தடுமாறிய விக்ரம், மீண்டும் தமிழில் தடம் பதிக்க வந்தார். இம்முறை புது முயற்சி, புது இயக்குநர். படத்தின் பெயர் `சேது', இயக்குநரின் பெயர் பாலா!.

பல சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் முள்ளும் கல்லும் சூழ்ந்திருப்பதைப்போல பாலா வந்த பாதையில் தடைகள் இன்னும் அதிகம். வைக்கோல் போரைக் கொளுத்தியது, காலில் வெட்டு வாங்கியது, கொலை முயற்சி, `சேது' படம் டிராப் ஆகி மீண்டும் தொடங்கியது என பாலா சந்தித்த இன்னல்களும் ஏராளம். பில்டிங் கான்ட்ராக்டர் ஒருவரின் உதவியில் மீண்டும் `சேது' வெளி வரத் தயார் நிலையில் இருந்தான். இப்படி வெவ்வேறு சோகக் கதைகள் இருவருக்குமே உண்டு. திசையெங்கும் முட்டிமோதிப் பார்த்தும் வெற்றியை மட்டும் ருசிக்காத இரு திறமைசாலிகள் கூட்டு சேர்கின்றனர். `இது எந்த ஹீரோவுக்கும் அபூர்வமாகக் கிடைக்கிற வாய்ப்பு விக்ரம். இந்தப் படத்துல ஆக்‌ஷன், பெர்ஃபாமன்ஸ் ரெண்டுக்கும் ஸ்கோப் இருக்கு. இன்டஸ்ட்ரியில் கமல் சாருக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல... அதை ஒரே படத்துல தட்டிரலாம். ஆனா, நீங்க ஆபீஸுக்குப் போறமாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரணும். இந்தக் கதாபாத்திரத்துக்காக இருபது கிலோ எடையையும் குறைக்கணும்' என பாலா விக்ரமிடம் சொல்ல, `நான் பண்றேன் பாலா. உங்கள மாதிரிதான் பாலா நானும். நிறைய படங்கள் பண்ணிட்டேன் பாலா. ஆனா, சொல்லும்படியா எந்தப் படமும் அமையலை' என்று பதிலளித்தார், விக்ரம்.

விக்ரம்

மீண்டும் ஆரம்பமானது `சேது'. ஆனால், மீண்டும் ஒரு இடி சேது மேல் விழுந்தது. இம்முறை ஃபெப்சி - படைப்பாளிகளுக்கு இடையேயான பிரச்னை. படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்போது, தமிழ்சினிமாவில் ஸ்டிரைக். இருவரும் என்ன செய்வதெனத் தெரியாது இருக்கும் வேலையில், ராதிகாவிடமிருந்து விக்ரமிற்கு போன் வருகிறது.

`குடும்பக் கஷ்டம் பாலா, ராதிகா ஒரு டெலி ஃபிலிம் பண்றாங்க. போனா கொஞ்சம் பைசா கிடைக்கும்' என பாலாவிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு அதில் நடிக்கக் கிளம்பினார், விக்ரம். ஷூட்டும் முடிந்தது. கிளம்பி வருகையில், ராதிகாவிடம், `நான் `சேது'னு ஒரு படம் பண்றேன். அது ஒருவேளை ஃபெயிலியர் ஆகியிருச்சுனா உங்ககூட வந்து வொர்க் பண்றேன் மேடம்' எனச் சொல்லிவிட்டு கொடுத்த 60,000 ரூபாய் பணத்தோடு பாலாவைத் தேடி வந்திருக்கிறார். `ஷூட்டிங்ல 60,000 கொடுத்தாங்க பாலா. நீங்களும் ரொம்பக் கஷ்டப்படுறீங்க. இந்தாங்க, உங்களுக்குப் பாதி; எனக்கு மீதி' என வலுக்கட்டாயமாக பாலாவின் கையில் பணத்தைத் திணித்திருக்கிறார் விக்ரம்.

ஏழு மாதங்கள் கழித்து வலி, வேதனைகளுடன் மீண்டும் களமிறங்குகிறான், `சேது'. இம்முறை எந்தப் பிரச்னைகளும் பதம் பார்க்கவில்லை. பிரச்னைகளின்றி பயணித்தான், சேது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே `நாம் முக்கியமான கட்டத்துக்கு ரெடியாகணும் விக்ரம்' என பாலா விக்ரமிடம் சொல்லியிருக்கிறார். ஷூட்டிங் முடிந்து, படமும் வெளியானது. இறுதியில், சறுக்கிய இருவரும் வெற்றியின் ருசியைச் சுவைத்ததோடு, படம் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள் விக்ரமிற்கு `சியான்' என்ற பெயரும் சூட்டி மகிழ்ந்தனர். விக்ரம் சியான் ஆனார்.

பிறகு `விண்ணுக்கும் மண்ணுக்கும்', `தில்', `காசி', `ஜெமினி', `தூள்', `சாமி' எனத் தொட்டதெல்லாம் துலங்கியது. மூன்று வருடங்கள் கழித்து பாலா - விக்ரம் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் `பிதாமகன்' படத்தில் ஒன்று சேர்கிறது. வெற்றி என்ற மகுடத்தைத் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, வேலை என்ற பளுவைத் தலையில் ஏற்றிக்கொண்டது. சியானின் நடிப்பில் எப்போதும் முழுமையைக் காணமுடியும். ஆனால், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் முழுமையான மனிதர். `பிதாமகன்' படப்பிடிப்பு முடிந்ததும், `உன் பேரை நான் கோ-டைரக்டர் லிஸ்ட்ல போட்டுக்கவா' என பாலா விக்ரமிடம் கேட்டிருக்கிறார். எல்லாம் முடிந்தபின் `பிதமாகன்' வெளிவந்தான். `சேது' வரிசையில் அவனும் வெற்றியைச் சுவைத்தான்.

என்னடா ஒரு படத்தை அவன் இவன்னு பேசுறான்னுதானே நினைக்கிறீங்க... அவர் ஏற்று நடித்த பெரும்பாலான படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அதனால்தான் அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிப் பேசும்போதும் அவன், இவன் என்று உரிமையாகப் பேசத் தோன்றுகிறது.

பாலா - விக்ரம்

விக்ரமின் மிகப்பெரிய பலம்தான், வீட்டார்களின் பலவீனமாக இருந்திருக்கக்கூடும். இவரின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், பார்வையாளர்களைத் திருப்திபடுத்துவதில் சியான் என்றுமே தவறியதில்லை. அதற்கு இவரின் மெனக்கெடல், வெவ்வேறு விதமான கெட்அப் போடுவது, எடையைக் கூட்டிக் குறைப்பது, பார்வையற்றவராக நடிப்பது என இவரின் பாத்திரங்கள் அனைத்திலுமே வித்தியாசம் காட்டக்கூடியவர். பார்வையாளர்களைப் பரவசப்படுத்த இந்த மெனக்கெடல்களை இவர் செய்துவந்தாலும், வீட்டில் இருக்கும் இவர் மனைவியும், குழந்தைகளும் என்ன நினைப்பார்கள்?

நாம் நினைப்பதற்கு நேரெதினான ஆள் ஷைலா. விக்ரமுக்குச் சரியான மனைவியாக மட்டுமல்லாமல், ஆகச்சிறந்த துணைவியாகவும் முன்னின்று தன்னம்பிக்கையை அள்ளி ஊட்டுவாராம். விக்ரமின் மூளை, இதயம்... இரண்டுமே ஷைலாதான். இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் நிலைபடுத்துவதும் இவர்தான்.

சியான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்தாலும், ரசிகர்களை மகிழ்விப்பதில் என்றுமே தவறியதில்லை. கலைஞனின் கடமையைக் கச்சிதமாகச் செய்யும் இந்த மகா கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

நன்றி
விகடன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சியான் விக்ரம் Empty Re: சியான் விக்ரம்

Post by SK Tue Apr 17, 2018 5:41 pm

சியான் விக்ரம் ZvojAQykQG6c2hM34t89+2_13250


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum