Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
Page 1 of 1
பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
![பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! VjQ33N8SqKoN2earlVGC+7bcfa85937ce719c264840b81d1894da](https://www.filepicker.io/api/file/vjQ33N8SqKoN2earlVGC+7bcfa85937ce719c264840b81d1894da.jpg)
பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு தற்போது தமிழர்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில் நம்முடைய பாரம்பரிய சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. ஆனாலும், பண்டிகை என்றாலே கேசரி, பொங்கல், வடை இல்லாமல் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வட இந்திய இறக்குமதியான ரவையைத் தவிர்த்துவிட்டு, நம்ம ஊர் பனிவரகு, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எளிய உணவுகளை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பனிவரகு ரவை கேசரி
தேவையானவை: பனிவரகு ரவை - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், தண்ணீர் - 4 கப், முந்திரி - 5, திராட்சை - 10, ஏலக்காய் - 2, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, மிதமான தீயில் பனிவரகு ரவையை வறுக்கவும். பிறகு, கொதிக்கவைத்த நீரில் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்துச் சேர்த்து, கிளறி இறக்கவும்.
நன்றி
Newstm
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
![பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! 8qzEx9ewTum86qbd3Jli+f6f5031d6389fb09e85eb994356b5d1e](https://www.filepicker.io/api/file/8qzEx9ewTum86qbd3Jli+f6f5031d6389fb09e85eb994356b5d1e.jpg)
அக்கார அடிசல்
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பால் - முக்கால் லிட்டர், நாட்டுச்சர்க்கரை - 400 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - 200 கிராம், முந்திரி (பொடித்தது) - 5, கிஸ்மிஸ் (திராட்சை) -சிறிதளவு, ஏலக்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
செய்முறை: நன்கு சுத்தம் செய்த பச்சரிசியை பாலில் வேக வைக்கவும் (பாலுடன் சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்). அரிசி வெந்தவுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து மீண்டும் குழைய வேகவைக்கவும். பொடித்த நாட்டுச்சர்க்கரையை இத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய்ப்பொடியை வதக்கி, அதை வேக வைத்த அரிசியில் சேர்த்துக் கிளறவும். அக்கார அடிசிலை ருசித்துப் புசிக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
![பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! LOYquM9QACsKIY7kWdPy+7bacceae1731fde9a2770ef5403ff81d](https://www.filepicker.io/api/file/LOYquM9QACsKIY7kWdPy+7bacceae1731fde9a2770ef5403ff81d.jpg)
நவதானிய அடை
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் – குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி – சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 3 அல்லது 5, இஞ்சி – ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்… அருமையாக இருக்கும்.
பலன்கள்: புரதச்சத்து முதல் அத்தனைவித வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவு. அனைவருக்கும் ஏற்றது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
![பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! SiA9xRkTdq5IdwSBYiUr+6a7c98ee33567cb3b029725c3571b8b5](https://www.filepicker.io/api/file/SiA9xRkTdq5IdwSBYiUr+6a7c98ee33567cb3b029725c3571b8b5.jpg)
முக்கனிப் பழக்கலவை
தேவையானவை: மாம்பழம் – 3, வாழைப்பழம் – 5, பலாச்சுளை – 10, தேன் – தேவையான அளவு.
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடும்போது மேலும் சுவையாக இருக்கும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என அத்தியாவசதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அதிக கார்போஹைட்ரேட் உள்ளதால் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைவாக எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல், அன்றைய தினத்தின் டயட்டில் சிறிது மாற்றம் செய்துகொள்வது நல்லது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
![பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! G4FnmeHSQAyRFMXwktOI+09ce843d9bc57ec6d30448b8f3864ac9](https://www.filepicker.io/api/file/g4FnmeHSQAyRFMXwktOI+09ce843d9bc57ec6d30448b8f3864ac9.jpg)
கதம்பக்காய்க் கூட்டு
தேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 100 கிராம், பாசிப்பருப்பு – 200 கிராம், நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு – சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 5, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: கோடைக்காலத்துக்கு ஏற்ற நீர்க்காய்கறிகள் கலவை. நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு புத்துணர்வு தரும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்
» சானியா திருமணம்: 23 வகை உணவுகளுடன் தடபுடல் விருந்து
» பாலியல் வன்முறை செய்திகள் - பேசத் தொடங்குவோம்!
» மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
» அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்!
» சானியா திருமணம்: 23 வகை உணவுகளுடன் தடபுடல் விருந்து
» பாலியல் வன்முறை செய்திகள் - பேசத் தொடங்குவோம்!
» மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
» அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|