ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் கோல்மால்

Go down

கூகுள் கோல்மால் Empty கூகுள் கோல்மால்

Post by aeroboy2000 Sat Feb 10, 2018 1:39 pm

கூகுள் கோல்மால்




மேகி என்றால் நூடுல்ஸ் என்று புரிந்து கொள்வதை விட சுலபமானது கூகுளை சர்ச் எஞ்சினாக அறிந்து வைத்திருப்பது. தனது சூப்பர் அல்காரிதத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 208 கோடியை கடந்த ஆண்டு மட்டும் பேங்க் பேலன்சில் கெத்தாக ஏற்றியுள்ளது கூகுள். முதலில் சிம்பிளாக சர்ச் எஞ்சின், இமெயில் எனத் தொடங்கி யூ டியூப், மேப்ஸ், ஷாப்பிங், ஆண்ட்ராய்ட் ஓஎஸ் என வலுவாக விழுதுகளை ஊன்றி இணைய விளம்பர மார்க்கெட்டை 70% தன் கையில் வைத்துள்ளது. 2016ம் ஆண்டுப்படி கூகுள் (79.4 பில்லியன்கள்), ஃபேஸ்புக் (26.9 பில்லியன்கள்) சம்பாதித்து, விரைவில் டைம்ஸ் குழுமத்தை வருமானத்தில் பின்தள்ளவிருக்கிறது. செய்தி நிறுவனங்களின் செய்திகளைத் தொகுத்து, லிஸ்ட்படி முன் பின்னாகக் காட்டிய மார்க்கெட்டிங் திறமைதான் இதற்குக் காரணம் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள்.


திறந்திடு சீசேம்!

பார்க்க விரும்பும் சினிமா, வாசிக்கத் தேடும் புத்தகம், அறிவுத்தேடலுக்கான தகவல்கள் என ஒருவர் டைப் செய்யும் தகவல்களிலிருந்தே அவரை அனுமானித்து, இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து விளம்பரங்களை வெளியிடுவதே கூகுளின் வெற்றி ரகசியம். இலவச ஆண்ட்ராய்ட் ஓஎஸ் மூலம் 80 சதவிகித போன்கள் உலகமெங்கும் இயக்கப்படுவது கூகுளின் ஃப்யூச்சர் வெற்றிக்கு அடித்தளம். கூகுள் நியூஸ், உலகிலுள்ள அனைத்து செய்தி நிறுவனங்களிடமிருந்து செய்திகளைப் பெற்று பயனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப லிஸ்ட் போட்டு அடுக்கித் தருகிறது. இதில் வரும் பாப் அப் விளம்பரங்களுக்கான கட்டணத்தை கூகுள் மட்டுமே தன்னிச்சையாக தீர்மானிப்பதால், செய்தியை உருவாக்கும் நிறுவனங்களின் பங்கேற்பு கீழே தள்ளப்படுகிறது என்ற சர்ச்சையும் உள்ளது.

சர்ச்சை சங்கடங்கள்!
‘‘கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விதிகளை மீறி வணிகம் செய்வதை இயல்பானதாக மாற்றிக் கொண்டுவிட்டன...’’ என்கிறார் IDIA நிறுவன இயக்குநரான சாம்நாத் பஷீர். 2017ம் ஆண்டின் டாப் 30 நிறுவனங்களில் முதலிடம் பெற்ற நிறுவனமான ஆல்பபெட் இன்க், கூகுளின் தாய் நிறுவனம். 2012 - 16ம் ஆண்டில் கூகுளின் வளர்ச்சி 64%. இதற்கடுத்த இடத்தில் ஃபேஸ்புக் உள்ளது. ‘‘இவை இரண்டும் மார்க்கெட்டிங் மூலம் தனது வருவாயில் பெரும்பகுதியைப் பெற்றாலும் அதனை உருவாக்கிய கலைஞர்களுக்கு மிகக் குறைவான தொகையையே அளிக்கிறது...’’ என்கிறார் பஸ்ஃபீட் தளத்தின் இயக்குநரான ஜோனா பரெட்டி.



கூகுள் தந்திரங்கள்!
‘‘புத்திசாலித்தனமான முறையில் தனது வியாபார எல்லைகளை விரிவாக்குவதோடு, தனது போட்டியாளர்களுக்குமான விதிகளையும், தானே உருவாக்கி வருகிறது...’’ என ஒரே வார்த்தையில் கூகுளின் தந்திரங்களை புட்டு வைக்கிறார் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த கௌதம் சின்கா. போட்டிகளை அழித்து தனிப்பெரும் ராஜாவாக கோலோச்ச விரும்பும் கூகுளின் செயல்பாடு பலரையும் ஈர்ப்பதாயில்லை.

யூ டியூபில் வீடியோ தொடங்கும் முன் ஒளிபரப்பாகும் இன்ஸ்ட்ரீம் முறைக்காக 20 லட்சம், வீடியோ ஒளிபரப்பும்போது கீழே வரும் விளம்பரத்திற்கு 10 லட்சம் என கூகுள் தோராயத் தொகையாக வசூலிக்கிறது. இதில் ஸ்கிப் வசதி உண்டு என்பதுதான் விளம்பர நிறுவனங்களின் கடுகடுப்புக்கு காரணம். ஆனால், ‘‘யூ டியூப் என்பது டிஜிட்டல் ரியல் எஸ்டேட் போல. பத்து நாட்கள் விளம்பரம் ஒளிபரப்பினாலும் அது சென்று சேரும் மக்கள் பரப்பு அதிகம்...’’ என்கிறார் விளம்பரத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர்.

வரியும் தண்டனை நிமித்தங்களும்!

2017ம் ஆண்டு ஆல்பபெட் இன்க், 27.5 பில்லியன் டாலர்களை தனது Adwords மூலம் சம்பாதித்துள்ளது. இதுதவிர உப வருவாயை ப்ளே ஸ்டோர், ஆப்ஸ், கூகுள் ஃபைபர் ஆகிய திட்டங்கள் தருகின்றன. பொருட்களின் விலை பற்றி ஒப்பீடுகளை ஃபவுண்டெம் என்ற தளத்திலிருந்து அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய யூனியனில் கடந்தாண்டு ஜூன் மாதம் 2.8 பில்லியன் டாலர்களை அபராதமாகக் கட்டியது கூகுள் நிறுவனம். 2015ம் ஆண்டு அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் மக்களவையில் போட்டி ஆணையத்திற்கு கூகுள் மீது வந்த புகார்களை விசாரிக்க ஆணையிட்டார். ஆயினும் கூகுள் இதற்கு ஒத்துழைக்க மறுத்தது.

2017ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பெங்களூரு ஐடி துறை (ITAT) தொடர்ந்த வழக்கில் கூகுளின் ஆறு அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 2007 - 2013 வரையிலான ரூ.1,457 கோடிக்கான வரித்தொகையைக் கட்டுமாறு ஆணையிட்டது. அமெரிக்காவிலுள்ள கூகுள் இன்டர்நேஷனலின் மானிய உதவி பெறும் துணை நிறுவனமே கூகுள் இந்தியா. இந்நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த வருமானத்தை கூகுள் அயர்லாந்துக்கு அனுப்பிய வகையில் அரசுக்கு கட்டவேண்டிய வரியை கட்டாததுதான் பிரச்னைக்கு காரணம்.

கூகுள் இதில் முக்கிய வாதமாக முன்வைத்தது, தான் இந்தியாவில் குர்கான், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் செயல்படுத்தும் அலுவலகங்கள் நிரந்தரமானவை அல்ல என்பது. மேலும் இந்தியா - அயர்லாந்து நாடுகளுக்கிடையேயான இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தையும் (DTAA) வரி கட்டாததற்கு கூகுள் துணைக்கு அழைத்தது. ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. ‘‘கூகுள் Adwords என்ற புரோகிராமைப் பயன்படுத்தி இங்குள்ள பயனர்களின் தகவல்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது. கூகுள் என்பதை பிராண்டாக இந்தியாவில் பயன்படுத்தி வரும் லாபத்தை ராயல்டி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்து அயர்லாந்துக்கு அனுப்பிவிடுகிறது.

இதற்கு ஐடி சட்டமான 9(1)(Vi) சட்டத்தையும் சாட்சியாக்குகிறது...’’ என்கிறார் IDIA அமைப்பின் நிறுவனவரான சாம்நாத் பஷீர். நிதி மசோதா 2016ன் படி டிஜிட்டல் இணைய நிறுவனங்களுக்கு 6% மட்டுமே வரி விதிக்கலாம். இந்தியாவில் ஆபீஸ் உள்ள கம்பெனிகளைவிட அலுவலகமற்ற ஃபாரீன் நிறுவனங்களுக்கே வரிச்சலுகை அதிகம். ‘‘இந்தியாவில் கூகுள் விரைவில் டேட்டா பண்ணைகளை அமைக்கவிருக்கிறது. அப்போது டெக் உலகின் ரூல்ஸ் அனைத்தும் மாறும்...’’என நம்பிக்கையோடு பேசுகிறார் ஹைதராபாத் பேராசிரியர் பிரசாந்த் ரெட்டி.l

- ச.அன்பரசு

26 Jan 2018
குங்குமம்


பாடகன் பாடகன் பாடகன்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

கூகுள் கோல்மால் Empty Re: கூகுள் கோல்மால்

Post by Guest Sat Feb 10, 2018 11:26 pm

மாறுமா?
ருசி கண்ட எந்த கார்பொரேட் நிறுவனமும் தன்னை மாற்றிக் கொள்ளாது.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum