ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

3 posters

Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:01 pm

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா T1XYwGrjQ8iFfSjZSFE4+08d3a3a8fcbcab8fbf0e3f0def75a023

Third party image reference
Chennai: 


அகோரிகளின் 'அஹம் பிரம்மாஸ்மி' வாழ்க்கை, சிதிலமுற்ற மனிதர்கள் என நாம் பார்த்திடாத ஒரு படைப்புதான், ‘நான் கடவுள்’. இந்தப் படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆனாலும், இன்னும் நாம் அசைபோட பல விஷயங்கள் இருக்கின்றன. 


அஜித்தோடு தொடங்கி ஆர்யாவில் முடிந்த கதை :
மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Zes5kax6SIeF43eXY4xK+9df7be8f164bad1fbd4f48ada432ab0d



Third party image reference
‘நான் கடவுள்’ படத்துக்கு முதலில் அஜித்தான் கமிட்டானார் என்பது பலரும் அறிந்த தகவலே. இந்தப் படத்தில் கமிட்டானதற்குப் பிறகு நீளமான முடி, ஜிம் பாடி என்று தன்னை ‘அகோரி’ கதாபாத்திரத்திற்கு தயார்படுத்திக்கொண்டார் அஜித். அதன்பிறகு, ஷூட்டிங் தள்ளிப்போன காரணத்தினால் ‘நான் கடவுள்’ படத்திலிருந்து வெளியேறி, ‘பரமசிவன்’ படத்தில் நடித்தார். ‘பரமசிவன்’ படத்தில் ஆரம்பத்தில் வரும் ஜெயில் போர்ஷன் முழுவதும் அதே ‘நீளமுடி’ கெட்டப்பில் அஜித் நடித்திருப்பார். அஜித் வெளியேறியபிறகு, ஆர்யா ‘நான் கடவுள்’ படத்தில் கமிட்டானார். 


ரியல் ஹீரோ இளையராஜா :


சிதிலமுற்ற மனிதர்கள், அகோரி சாமியார்கள் என்று நாம் இதுவரை அறிந்திடாத இரு பெரும் உலகின் தரிசனங்களை தனது அசாத்திய இசையால் சாத்தியப்படுத்தியிருப்பார் இளையராஜா. இந்தப் படத்தில் இளையராஜாவோடு பணியாற்றிய அனுபவம் பற்றி இயக்குநர் பாலா, ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் சிலாகித்திருப்பார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:05 pm

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா FfDeHEOERWKzvZzBvniL+48f2b130756466bfbe3d7ce88192abb5
Third party image reference
“ 'நான் கடவுள்’ க்ளைமாக்ஸ் பார்த்துட்டு, அதிர்ச்சியாகிட்டார் ராஜா சார். 'மென்டல் பய... இப்படி அறமே இல்லாம எடுத்திருக்கானே... இவனை என்ன பண்றது?’னு திட்டினார். ஏன்னா, ரெண்டு பேரோட தத்துவப் புரிதலும் நேர் எதிர். ரமண மகரிஷியைப் பற்றி அவர் போட்ட 'ரமணமாலை’ பாடலை, 'சார் இந்தப் பாட்டை நான் பயன்படுத்திக்கிறேன்’னு வாங்கினேன். ஏதோ சாமி பாட்டு எடுக்கப்போறேன்னு நினைச்சிருப்பார். ஆனா, அதைப் பிச்சைக்காரங்களை வெச்சு 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...’னு பயன்படுத்தினேன். பார்த்ததும் பதறி, 'டேய் அது 'ரமணமாலை’டா. அதை இப்படிப் பண்ணிட்டியேடா’ன்னார். அப்புறம், 'ஒரு சாமி பாட்டு வேணும் சார்... சிவனைப் பத்தி’னு சொன்னதும், 'ஓம் சிவோஹம்’னு பக்தி மல்கப் போட்டுக்கொடுத்தார். அந்தப் பாட்டுக்குள்ள  டூமச் வயலென்ஸ் இறக்கிட்டேன். 'எதைப் போட்டுக் கொடுத்தாலும் வேறமாதிரி எடுத்துட்டு வந்துடுறானே... பைத்தியக்காரன்’னு கோபமா சொல்வார். ஆனா, அவ்வளவு அன்பா பார்த்துப்பார்!


உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியம்... அவர் எந்த அளவுக்குச் சிறந்த இசையமைப்பாளரோ, அதே அளவு சிறந்த எடிட்டர். படம் ஓடணும்கிறதுக்காக கமர்ஷியல் கூட்டணும்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பார். உதாரணமா 'நான் கடவுள்’ படத்துல பிளாக் அண்ட் ஒயிட்லதான் டைட்டில் போட்டிருந்தேன். 'இதுக்கு எல்லாம் மியூசிக் பண்ணமுடியாது. காசியில எடுத்த ஃபுல் ஃபுட்டேஜையும் வெச்சு ஒரு பாட்டு நீளத்துக்குப் போட்டுக்கொடு’ன்னார். 'அப்படி எதுவும் இல்லே’னு புளுகினேன். 'பொய் சொல்ற... அதெல்லாம் இருக்கும். போய் எடுத்துட்டு வா’னு சொல்லி, அந்த மான்டேஜ் வெச்சு அவர் பண்ணதுதான் அந்த 'மா கங்கா...’ டைட்டில் சாங். படத்துக்கான ஃபீலை டைட்டில்லயே செட் பண்ணிட்டார். காசியில் 'கங்கா ஆர்த்தி’ நிகழ்ச்சி பிரபலம். இப்ப காசியில அந்தப் பாட்டுடனும்தான் கங்கா ஆர்த்தி நடக்குது’’ என்று அப்பேட்டியில் சொல்லியிருக்கிறார், பாலா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:07 pm

ராஜேந்திரன் :
[size=31]மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா FhWui8CPSkyp18i2ZSra+3685c1ab9def547fd870fa65a80fced6
[/size]


Third party image reference
‘நான் கடவுள்’ படத்திற்கு முன்பு பல படங்களில் ஃபைட்டராக வேலை பார்த்திருந்தாலும், ராஜேந்திரனுக்கு ’நான் கடவுள்’ தான் மிகப்பெரிய ப்ரேக். வில்லன் 'தாண்டவன்' கதாபாத்திரத்திற்கு ராஜேந்திரன் கமிட்டான கதையையும் பாலா அதே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


“ ‘பிதாமகன்’ல ஒரு ஃபைட்டர். வழுக்கை மண்டையா, ஆளே வித்தியாசமா வந்து நிப்பார். டூப் போடுறது தொடங்கி ஸ்டன்ட் மாஸ்டருக்கு உதவியா எதுவா இருந்தாலும் 'நான் பண்றேன் சார்’னு முன்னாடி வந்து நிப்பாப்ல. ஒருநாள் அவரைக் கூப்பிட்டு 'உங்க வயசு என்ன?’னு கேட்டேன். 'அறுபது வயசு சார்’னார். மிரண்டுட்டேன். அந்த வயசுக்கு எல்லாம் நான் உசுரோட இருப்பேனானே தெரியாது. அவ்வளவு எனர்ஜியோட இருக்கிற மனுஷன் காலம்பூரா வெறுமனே 2,500 ரூபாய் சம்பளத்துல ஒரு ஃபைட்டராவே தன்னோட வாழ்க்கையை முடிச்சிடக்கூடாதேனு, 'நான் கடவுள்’ல அந்த வில்லன் கேரக்டரை அவருக்குக் கொடுத்தேன்’’ என்றார். 


பாலா தனக்குக் கொடுத்த வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தியிருப்பார் ராஜேந்திரன். மொட்டைத் தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாசமான வில்லனாகவும், கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனைப் பார்த்து, 'நல்ல உருப்படி... நமக்கு வேலை வைக்கலை' என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டியிருப்பார். வில்லனாக அறிமுகமானாலும் தற்போது அதிகமான காமெடிப் படங்களில் நடித்து வருகிறார். வரணும்... பழைய வில்லனா வரணும்னு பல பேர் வெயிட்டிங் பாஸ்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:09 pm

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா JDYjUNCwSZKWedEZ6eGt+afdb36a651191a80e20218b981923736

Third party image reference
'அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடி சபாஷ் வாங்கிய பூஜா, கடவுளைக் கண்டபடி வசை பாடிய கவிஞர் விக்ரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டிய திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வந்த 'கோவை' கிருஷ்ணமூர்த்தி, 'அம்பானி யாரு?' என்றதும், 'செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்ற நக்கலில் தெறித்துச் சிரிக்கவைத்த வடுகப்பட்டி செந்தில், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் கவனிக்கவைத்த ஜெயமோகன், ஒரிஜினல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டைக் காட்சிகளை அமைத்திருந்த 'சூப்பர்' சுப்பராயன் எனப் பலரால், இந்த  பாலாவின் ’கடவுள்’ நமக்குள் வாழ்ந்துவருகிறார்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by SK Sat Feb 10, 2018 10:03 am

நான் பலமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by Dr.S.Soundarapandian Sat Feb 10, 2018 2:43 pm

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா Empty Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum