ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:53 pm

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  BWEYBPjEQWaM1h329yKO+23CHTNaduTemple





மிழகத்தின் பழம் பெருமைக்கும் கலாச்சாரத்துக்கும் எத்தனையோ அடையாளங்கள்.. அவற்றில் மிக முக்கியமானது வானுயர்ந்த கோபுரங்களுடன் அமைந்துள்ள திருக்கோயில்கள். அதனால்தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில்கூட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியினர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள்தான் அரசு அலுவலகங்களாகவும், கலைகள் வளர்க்கும் இடங்களாகவும் இருந்தன. நீதி வழங்கும் இடம், தானியக் கிடங்கு எல்லாமே இவைதான். கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றுவதாக உள்ளன. மகளின் திருமணத்துக்காக கோயில் நிதியில் கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதுபற்றிய செய்தி கல்வெட்டில் இருப்பது கோயில்கள் எவ்வாறு மக்களுக்காக இயங்கின என்பதை நமக்கு காட்டுகிறது.

கோயில்களைக் கட்டிய மன்னர்கள், அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காக நிலங்களை தானமாக வழங்கினர். கோயில் நிர்வாகம் செம்மையாக நடக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகவும் அக்கறை காட்டினார்கள். கோயில் நிர்வாகிகள் ஸ்ரீகாரியம் என அழைக்கப்பட்டனர்.

தமிழக கோயில்களின் நகைகள், நிலங்கள், சிலைகள் உள்ளிட்ட சொத்துகளைத் தனி நபர்கள்தான் நிர்வாகம் செய்து வந்தனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 1927-ல் ஆங்கிலேய அரசு, இந்து சமய அறநிலைய வாரியம் என்ற கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:55 pm

அதன்பிறகும் ஜமீன்தார்கள் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களால் கோயில் சொத்துகளும், சிலைகளும் கடத்தப்பட்டன. நாடு விடுதலை அடைந்த பிறகு, 1951-ல் இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் அங்கமாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.

38,635 கோயில்கள்

17 சமணக் கோயில்கள், 1,910 அறக்கட்டளைகள், 56 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 57 கோயில்கள் உட்பட 38 ஆயிரத்து 635 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 331 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.

672 கோயில்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், 3 ஆயிரத்து 550 கோயில்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் ஆண்டு வருவாய் உள்ளது. 34 ஆயிரத்து 82 கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.

4.78 லட்சம் ஏக்கர் நிலம்

கோயில்கள், திருமடங்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 283 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாய நிலங்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.838 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமாக 2 ஆயிரத்து 359 குளங்கள், 989 மரத் தேர்கள், 57 தங்க ரதங்கள், 45 வெள்ளி ரதங்கள் உள்ளன
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:55 pm

கடந்த 6 ஆண்டுகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 559 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 789 கோயில்களுக்குச் சொந்தமானவை. மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்களின் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 70 கோயில்களுக்கு சொந்தமான 1,119 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதுபோல ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஆயிரத்து 315 ஏக்கர் நிலங்கள், 468 கிரவுண்டு மனைகள், 179 கிரவுண்டு கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 887 கோடி. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 338 ஏக்கர் விளை நிலங்கள், 152 கிரவுண்டு மனைகள், 24 கிரவுண்டு கட்டிடங்கள் என ரூ.467 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

2011 முதல் 2016 வரை சுமார் 300 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 6 ஆயிரத்து 66 நபர்கள் வாடகைதாரர்களாக வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது குடியிருப்புகளுக்கு குடிநீர், மின் இணைப்பு வசதி பெற தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயில் நிர்வாகத்துடன், இவ்வளவு சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையில் ஆணையர் தலைமையில் கூடுதல், துணை மற்றும் உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 628 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் பல கோயில்களின் நிலை இன்றைக்கு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. போதிய பராமரிப்பின்மையால் பல்லாயிரம் கோயில்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழகத்தின் கிராமங்களில் பயணம் செய்தால் இடிபாடுகளுடன் சிதைந்துகிடக்கும் கற்கோயில்களைக் காணலாம்.

விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத் துறை, காவல் துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலிலேயே சிலைகள் திருடப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. அப்படியெனில் அறநிலையத் துறை தனது கடமையை செய்யத் தவறிவிட்டதா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:57 pm

இதுதொடர்பாக, 36 ஆண்டுகள் பல்வேறு கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றிய அழ.முத்துப்பழனியப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

ஒட்டுமொத்தமாக அறநிலையத் துறை செயல்படவில்லை என கூறிவிட முடியாது. அறநிலையத் துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துகளும், விலை மதிப்பற்ற சிலைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக்கூடும்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர, அறநிலையத் துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சொத்துகள் அபகரிக்கப்படுவதும், சிலை கடத்தலும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது என அவரிடம் கேட்டபோது, ‘‘1983-ல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. உலோகத் திருமேனிகள், கற்சிலைகள், நகைகள், கோபுர கலசங்கள், உண்டியல் திருட்டு சம்பந்தமாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் துறையில் உள்ள சிலர் சிலைகளை மீட்டு அதை கடத்தல்காரர்களுக்கே விற்பனை செய்ததும் நடந்துள்ளது. இந்த நிலையை மாற்ற கடும் சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அறநிலையத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வருவாய், சுற்றுலா, தொல்லியல், ஊரக வளர்ச்சி, வனம் மற்றும் காவல் துறைகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொள்ளை போன கோயில் சொத்துகளை எளிதில் மீட்கலாம். இனி கொள்ளை போகாமலும் தடுக்கலாம்’’ என்றார்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by SK Mon Dec 25, 2017 1:27 pm

இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by T.N.Balasubramanian Mon Dec 25, 2017 2:20 pm

முக்கியமாக இந்து அறநிலைய கட்டளைகளுக்கு உட்பட்ட    கோவில்களில் வரும் வருமானம் மிக அதிகம்.
ஒரு சில கோவில்களை தவிர. பராமரிப்பு கோயில் வசதிகளை மேன்படுத்துதல் மிகவும் குறைவு அல்லது கேவலம். சீரமைத்தாலே நல்லது. பணம் சுருட்டும் கும்பல்கள் பெருகிவிட்டன.
நேற்று காலை சென்னைக்கு அருகே பல்லாவரம் பக்கத்தில் ஒரு சனி பகவான் கோயிலுக்கு சென்று இருந்தேன். பரம்பரை கோவில் என்று கூறிக்கொண்டனர். குப்பை பாலிதீன் பைகள் கோவில் ஆண்டவர் சிலைகள் இருக்குமிடம் எல்லாம் எடுக்கப்படாத பூக்குவியல்கள். உடைந்த தேங்காய்கள் சிறிதே நாற்றத்தையும் உண்டாக்கி கொண்டு இருந்தது. கோயில்களில் அச்சத்தை உண்டாக்கும் நாய்களின் நடமாட்டம். வருமானமோ அதிகம் அதிகம். எவ்வளவு ஏழைகள் தங்களுடைய சேமிப்புகளை நம்பிக்கையின் பேரில் காணிக்கையாக செலுத்துகிறார்களே அதற்கு  தகுந்தபடி  கவனிப்பு இல்லை. மீண்டும் ஒரு முறை போகத்தான்   வேண்டுமா என்று கேள்வி எழுப்பும் கோயில் அது.
தனியார் நடத்தும் ஒரு கோவில் எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ளது. மிகவும் மெச்சும்முறையில் அதை இன்றளவும் நடத்தி வருகிறார்கள். அங்கு சென்று வந்தாலே மீண்டும் போகமாட்டோமா என்ற  ஆர்வம் தோன்றுவிக்கும் கோவில் அது. சுத்தம் சுகாதாரம் தரிசனம் பிரசாத விநியோகம் மெச்சத்தக்கவை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 6:52 pm

நன்றி ஐயா.
தங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை.
இந்து அறநிலையத் துறை நடத்தும் கோயில் நிர்வாகம் இந்த லட்சணத்தில் தான் உள்ளது.
ஒவ்வொன்றிலும் எவ்வளவு காசு பார்க்கலாம்
என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.
இது தான் இப்போதைய நிலை.
இதை சீராக வழி உண்டோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 6:54 pm

SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by krishnaamma Mon Dec 25, 2017 7:02 pm

SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709


ரொம்ப சரி....படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 7:36 pm

krishnaamma wrote:
SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709


ரொம்ப சரி....படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1254739
இவர்கள் சாப்பிட மிச்சமே கோவில் பராமரிப்பிற்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Empty Re: பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாழ்க விக்ரம் உங்களுக்கு பல்லாயிரம் கோடி வாழ்த்துக்கள்..நீங்கள் நூறாண்டு நலமுடன் .வாழனும்..
» மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துகள் ஏலம்
» ஏழுமலையானுக்கு ரூ.2 லட்சம் கோடி அசையா சொத்துகள்:
» தாவூத் இப்ராஹிமின் ரூ.15,000 கோடி சொத்துகள் பறிமுதல்
» ரூ.800 கோடி சொத்துகள் பறிமுதல்: அமைச்சரெல்லாம் இல்லைங்க.. போக்குவரத்து அதிகாரிதான்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum