ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயிறு!

3 posters

Go down

கயிறு! Empty கயிறு!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:53 pm

இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 


'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. தேனீர் கடையில் உட்கார்ந்திருந்த இருவர், அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து எழுந்து, நடந்தான், ரகு. அவர்களும் அவனை பின் தொடர்ந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல், எதிரே இருந்த பெட்டிக் கடையில், பீடி வாங்கி பற்ற வைத்தபடி, கடைக்காரரிடம் பத்மினியை பற்றி விசாரித்தான். 


'இப்போதெல்லாம் அவளைத் தேடி யாரும் வருவதில்லையே... இவன் யார்...' என நினைத்து, ''நீங்க...'' என்று தயங்கியபடி கேட்டார். 


''பத்மினியோட அண்ணன்...'' என்றான்.
அவருக்கு தலை சுற்றியது. சமாளித்து, பத்மினி வீட்டிற்கு செல்லும் வழியை காட்டினார். அவர் சொன்ன வழியில் செல்ல ஆரம்பித்தான், ரகு. இப்போதும், அந்த இருவர், அவனை பின் தொடர்ந்தனர். தன் நிலையை நினைக்க, அவனுக்கே வியப்பாக இருந்தது.


அன்று, எப்போதும் போல் இல்லாமல், திருவிழா கொண்டாடும் இடம் போல், 'ஜே ஜே' என்று இருந்தது, சிறைக்கூடம். 


சக கைதியிடம்,'இன்னிக்கு சுதந்திர தினமா?' என்று கேட்டான், ரகு.
'இல்ல; ஏதோ ரக் ஷா பந்தன் பண்டிகையாம்...' 


'அப்படின்னா...'
'அது, இந்திக்காரங்க கொண்டாடறதுப்பா. பெண்கள் நம்ம கையில சின்ன கயிறு கட்டி, நம்மை சகோதரனா ஏத்துக்குவாங்க; நாம அவங்களுக்கு ஏதாவது பரிசு தரணும்...'
'கயிறு கட்டினா, நாம எப்படி அவங்களுக்கு உறவாயிட முடியும்?'


'விடுப்பா... சொந்த ரத்த உறவுகளே நம்மை விட்டுப் போயிடுச்சு; இதுல, நீயோ அனாதை. இன்னைக்கு நல்ல சோறு கிடைக்கும். யாரோ ஒருத்தி கையில் கயிறு கட்டினா என்ன... அப்புறம் அதை துாக்கி வீசிடுற வேண்டியது தான்...'


அவன் சொன்ன மாதிரியே, நல்ல சோறு கிடைத்தது. அழகான இளம்பெண்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு கைதியின் வலது கையில், 'ராக்கி' எனும் கயிற்றை கட்டி, அவர்களை சகோதரனாக ஏற்றுக் கொண்டனர். அப்படித்தான் ரகுவின் கையில் கயிற்றை கட்டினாள், பத்மினி.


'நீங்க எல்லாம் யார்?' என்று கேட்டான், ரகு.
சிரித்த பத்மினி, 'ஒருவிதத்தில் உங்கள மாதிரி தான் நாங்களும்... என்ன... நீங்க உள்ளே இருக்கிறீங்க; நாங்க வெளியே இருக்கோம்...' என்றாள்.


'புரியல...'
'நீங்க பாவம் செஞ்சுட்டு தண்டனை அனுபவிக்கிறீங்க... நாங்க, தினமும் பாவத்தையே தண்டனையா அனுபவிக்கிறோம். அதாவது, உடம்பை வித்து பொழைக்கிறோம். வெளியே, 'அண்ணா'ன்னு அன்புடன் அழைக்க யாரும் இல்ல; அதனால தான் உங்கள தேடி இங்கே வந்தோம்...' என்றாள்.


கொஞ்ச நேரம், சலனமின்றி அவளைப் பார்த்தான், ரகு. அவனுக்கென்று இந்த உலகில் யாரும் இல்லை; எங்கிருந்தோ வந்த ஒருத்தி அவனை சகோதரனாக ஏற்றுக் கொள்கிறாள் என்பதை நினைத்த போது, நெகிழ்ச்சியாக இருந்தது. 
'பத்மினி...' என்றான்.



தொடரும்..............


Last edited by krishnaamma on Fri Dec 22, 2017 10:00 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:54 pm

அண்ணா...' என்று அவள் அழைக்கவும், அவன் உள்ளம் கனிந்து, கண்ணீர் வந்தது. 
அதை மறைத்து, 'இன்றைக்கு அண்ணன், தன் தங்கச்சிக்கு ஏதாவது பரிசு தரணுமாம்; நான், இத்தனை நாள், ஜெயில்ல வேலை செய்து சம்பாதிச்ச காசு இருக்கு... அதை, உனக்கு தரேன்; இந்த வேலைய விட்டுட்டு, ஒரு தையல் மிஷின் வாங்கி, உழைச்சு சாப்பிடு. 



உண்மையிலேயே நீ, என்னை அண்ணனாக ஏத்துக்கிட்டா இதை செய்...' என்றான். 
கண்கள் கலங்க, தலையாட்டினாள், பத்மினி.


இப்போது, அவளை தேடித்தான் செல்கிறான், ரகு. அவனை பின் தொடர்வது, மப்டியில் வரும், இரு போலீசார்.


ஜெயிலர் இந்த பயணத்திற்கு சம்மதிக்கவே இல்லை.
'விளையாடறியா... சும்மா ஒரு பேச்சுக்கு, உன் கடைசி ஆசை என்னன்னு கேட்டா, இப்படியா ஆசைப்படுவே...' என்றார்.


'ப்ளீஸ்... ஜெயிலர் ஐயா... ஒரே ஒருமுறை என் தங்கச்சிய பாத்துட்டு வந்துடறேன்; அவ நல்லா இருக்கிறத பாத்துட்டா போதும்; அப்புறம், சாகிறத பத்தி கவலைப்பட மாட்டேன்...' என்றான்.


'இன்னும் மூணு நாள்ல உனக்கு துாக்கு தண்டனை; இப்படிப்பட்ட நிலையில எப்படி உன்னை அனுப்புறது...' என்று ஜெயிலர் மறுத்த போது, 'ரகு நல்ல மனிதன் சார்... அவன்கிட்ட வாழறதுக்கு கொஞ்சம் தருணம் தான் இருக்கு; அவன், ஆசைப்பட்டபடி நடக்கட்டுமே...' என்றார், ஜெயில் வார்டன்.


'இது, 'ரிஸ்க்'கான விஷயம் இல்லயா?'
'அதை நான் பாத்துக்கறேன்; இவனை திரும்ப கொண்டு வருவதற்கு நான் உத்தரவாதம் தர்றேன்...' என்று வார்டன் கூறியதும், சம்மதித்தார், ஜெயிலர். 


ஒரு வழியாக பத்மினியின் வீட்டை கண்டுபிடித்த போது, அது, பூட்டியிருந்தது. வாசல் திண்ணையில் அமர்ந்தான். கையில் அவள் கட்டிய கயிறு இன்னும் இருந்தது. அது, ஒரு மாயக் கயிறாக அவனை கட்டிப் போட்டிருந்தது. 


சிறிது நேரத்தில், வீட்டிற்கு வந்த பத்மினி, திண்ணையில் அமர்ந்திருந்த ரகுவை பார்த்து, ஆச்சரியத்துடன், ''அண்ணா... நீங்களா... வாங்கண்ணா...'' என்று வரவேற்றவள், ''பக்கத்து தெருவில சுடிதார் தைக்க கொடுத்திருந்தாங்க; அதை கொடுக்க போயிருந்தேன்...'' என்றபடி, கதவை திறந்தாள்.


வீட்டிற்குள் நுழைந்தான், ரகு; சற்று துாரத்தில் நின்று, அந்த வீட்டையே நோட்டமிட்டபடி இருந்தனர், மப்டியில் வந்த போலீசார்.


''அண்ணா, நீங்க சொன்ன மாதிரியே திருந்தி நல்லபடி வாழ்றேன்... என்னை பாத்து, இன்னும் சிலர் அந்த தொழிலை விட்டு, வேறு வேலைக்கு போயிட்டாங்க,'' என்றவள், ''அண்ணா... உங்களுக்கு சாப்பிட, என்ன பிடிக்கும்...''என்று கேட்டாள். 


''எதுக்கு கேக்குறே?''
''இல்லண்ணா... முதல் முறையா என் வீட்டிற்கு வந்திருக்கீங்க, நீங்க கேட்டதை எல்லாம் சமைச்சு போடணும்ன்னு ஆசையா இருக்கு...'' என்றாள். 
''பத்மினி... நான் முதல் முறையாக உன் வீட்டிற்கு வரல; கடைசி முறையாக வந்திருக்கேன்...'' என்றான். 


புரியாமல் அவள் முழிக்கவும், ''நாளை மறுநாள், எனக்கு துாக்கு தண்டனை நிறைவேத்தப் போறாங்க; என்னோட கடைசி ஆசையே, உன்னை ஒருமுறை பாத்துடணும்ங்கிறது தான்; அதனால, நீ சமைச்சுப் போடுறத உட்கார்ந்து சாப்பிட முடியாதும்மா... கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடு போதும்...'' என்றான்.


இதைக் கேட்டு அதிர்ந்த பத்மினி, கண்களை துடைத்தபடி டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். குடித்து முடித்து, அவளிடம் விடைபெறும் போது, ஏதேச்சையாக, அவனது பார்வை, சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் மீது விழுந்தது. அதற்கு மாலை போடப்பட்டிருந்தது. புகைப்படத்தில் இருந்தவன், கேசவன்; மது போதையில் ஏற்பட்ட சண்டையில், அவனைக் கொன்றது, ரகு தான். 


''என்ன அண்ணா... அந்த படத்தையே பாக்கறீங்க?'' என்று கேட்டாள், பத்மினி. 
''யார் இது?''
''அவர்தான் என் அண்ணன்...'' என்று அவள் கூறியதும், அவன் இதயத்தில் இடி விழுந்தது.
கொஞ்ச நேரம், அப்படியே தலைகுனிந்து அமர்ந்தான், ரகு. சில நிமிடங்கள் அங்கு கணத்த நிசப்தம் நிலவியது. அதைக் கலைக்கும் விதமாக, ''அண்ணா...'' என்று அழைத்தாள், பத்மினி. அந்த வார்த்தை அவன் இதயத்தை அறுப்பதை போலிருந்தது.


''பத்மினி... உங்க அண்ணனை கொன்றது யார்ன்னு உனக்கு தெரியுமா?'' என்று குரல் கம்மக் கேட்டான்.
''தெரியும்ண்ணா...'' என்றாள், அமைதியாக!
''தெரிந்துமா என்னை, உன் அண்ணனாக ஏற்றாய்?''
''ஆமாம்.''
''என்னை பழிவாங்கணும்ன்னு உனக்கு தோணலயா?''


''ஆரம்பத்தில் உங்கள பத்தி நினைக்கும் போதெல்லாம், என் மனதில் வெறுப்பு தீ எழும். அதில் தண்ணீர் ஊற்றி அணைக்கத்தான், உங்க கையில, ராக்கி கயிற்றை கட்டினேன்,'' என்றாள். 


சிறிது நேரம் மவுனமாக இருந்த ரகு, மெல்ல விசும்பினான்; பின், பைத்தியக்காரன் போல் சிரிக்க ஆரம்பித்தான்.


''அண்ணா...'' என்றாள், மென்மையாக, பத்மினி.
''அப்படி கூப்பிட்டு என்னை இம்சை படுத்தாதம்மா... கழுத்தை நெறிக்கப் போகும் கயிற்றை விட, நீ, என் கையில் கட்டிய இந்த சிறிய கயிறு வலிக்குதும்மா...'' என்றான்.
இருவரின் கண்களும் கலங்கின.


திரும்பும்போது, ''என்ன ரகு, உன் கடைசி ஆசை நிறைவேறிருச்சா?'' என்று கேட்டனர், போலீசார். 
''இல்ல; எனக்கு வாழணும்ன்னு ஆசையா இருக்கு,'' என்றான் ரகு!

அப்சல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 11:06 am

krishnaamma wrote:
''அண்ணா...'' என்றாள், மென்மையாக, பத்மினி.
''அப்படி கூப்பிட்டு என்னை இம்சை படுத்தாதம்மா... கழுத்தை நெறிக்கப் போகும் கயிற்றை விட, நீ, என் கையில் கட்டிய இந்த சிறிய கயிறு வலிக்குதும்மா...'' என்றான்.
இருவரின் கண்களும் கலங்கின.


திரும்பும்போது, ''என்ன ரகு, உன் கடைசி ஆசை நிறைவேறிருச்சா?'' என்று கேட்டனர், போலீசார். 
''இல்ல; எனக்கு வாழணும்ன்னு ஆசையா இருக்கு,'' என்றான் ரகு!

அப்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1254431
இந்த கதையில் குடியின் மிருகத்தனம், அண்ணன் தங்கை பாசம், வட இந்திய ராக்கி கலாச்சாரம்
போலீஸ்சாரின் மனிதாபம், நம்பிக்கை. எல்லாவற்றிகும் மேல் கிரீடம் வைத்தார் போல் விலைமாதர்கள் பற்றிய நிலை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அற்புதம்.
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by SK Sat Dec 23, 2017 11:18 am

நெகிழ்ச்சியான கதை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:13 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
''அண்ணா...'' என்றாள், மென்மையாக, பத்மினி.
''அப்படி கூப்பிட்டு என்னை இம்சை படுத்தாதம்மா... கழுத்தை நெறிக்கப் போகும் கயிற்றை விட, நீ, என் கையில் கட்டிய இந்த சிறிய கயிறு வலிக்குதும்மா...'' என்றான்.
இருவரின் கண்களும் கலங்கின.


திரும்பும்போது, ''என்ன ரகு, உன் கடைசி ஆசை நிறைவேறிருச்சா?'' என்று கேட்டனர், போலீசார். 
''இல்ல; எனக்கு வாழணும்ன்னு ஆசையா இருக்கு,'' என்றான் ரகு!

அப்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1254431
இந்த கதையில் குடியின் மிருகத்தனம், அண்ணன் தங்கை பாசம், வட இந்திய ராக்கி கலாச்சாரம்
போலீஸ்சாரின் மனிதாபம், நம்பிக்கை. எல்லாவற்றிகும் மேல் கிரீடம் வைத்தார் போல் விலைமாதர்கள் பற்றிய நிலை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அற்புதம்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254466

ஆமாம் ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:13 pm

SK wrote:நெகிழ்ச்சியான கதை
மேற்கோள் செய்த பதிவு: 1254469


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கயிறு! Empty Re: கயிறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum