ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

2 posters

Go down

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் Empty “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Post by KavithaMohan Mon Dec 11, 2017 4:04 pm

ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்களின் கனவுகளை நாசமாக்கிவிட்டது. ரப்பர் தடிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. புயலுக்கு முன்புவரையிலும் ஒரு டன் ரப்பர் மரத்தடிகள் 6,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. தற்போது 5,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது . குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய 3 தாலுகாக்களில் 115 ஆண்டுகளாக அதிகளவில் ரப்பர் சாகுபடியாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு.

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து வீசிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி  மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் தொழில் மற்றும் ரப்பர் தொடர்பான தொழில்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ரப்பர் தடிகளுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு உண்டு. இலகு ரக மரமான ரப்பரை பதப்படுத்தி ரசாயனக் கலவையில் ஊறவைத்துக் கடினத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. ரசாயன முறையில் பதப்படுத்தப்படும் ரப்பர் தடிகள் தேக்கு மரங்களுக்கு இணையான பலம் கொண்டவை. அதற்குப்பிறகு கேரளாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியில் இந்திய அளவிலான ரப்பர் சந்தை உள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் ரப்பர் தடிகள் இந்தச் சந்தைகளில்தான் வியாபாரிகளால் போட்டிபோட்டு வாங்கப்படுகிறது.

ஒகி புயலில் சேதமாகிப்போன ரப்பர் மரங்களை இப்போது வெட்டினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால், ரப்பர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் (ரப்பர் தடிகள் உலர்ந்த பிறகு அது வெறும் விறகாக மட்டுமே பயன்படும்). புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் அதிகளவிலான ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டுவருவதால், அம்மரங்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள், வியாபாரிகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் வைத்த விலை இல்லாமல், வியாபாரிகள் வைக்கும் விலையிலேயே ரப்பர்  தடிகள் விற்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனர். புயலுக்குப் பிறகு கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ரப்பர் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், கேரள மாநிலத்திலும் குமரி மாவட்ட ரப்பர் தடிகளின் விலை சரிந்துள்ளது.

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் IMG-20171206-WA0123_18456
சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீக்குச்சி ஆலைகளுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரப்பர் தடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, அங்கும் அளவுக்கதிகமான ரப்பர்  தடிகள் குவிந்துள்ளன. அதனால், தமிழகச் சந்தையிலும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தடிகள் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. தற்போதையச் சூழலில், ரப்பர் தடிகளை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த வாரம் விறகுக்காக ஒரு டன் ரப்பர் மரங்கள் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 1,500 ரூபாய்க்கு ரப்பர் மரங்களை வாங்க ஆளில்லாமல், விவசாயிகள் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ''இந்த நிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்'' எனக் கவலை தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் IMG-20170808-WA0024_18067
கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இப்பகுதியில் இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை.வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுகுவதோடு, விவசாயிகளுக்கும் நல்ல பயன் கிடைப்பதால், மாவட்டம் நல்ல வளர்ச்சி பெறும். 1992-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் செலவில், கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தக் குமரி மாவட்ட மக்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து,  ரப்பர் தொழிற்சாலை அமைக்க செண்பகராமன்புதூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. ஆனால், இந்த அறிவிப்பும், ஆரம்பக் கட்டப்பணிகளுடன் சிறிது நாள்களில் முடங்கிப்போனது. பின்பு  தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து சென்றாலும், கனரக ரப்பர் தொழிற்சாலைத் திட்டம் மட்டும் இப்பகுதிக்கு வரவேயில்லை. இந்நிலையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம் சுருங்கி 210 கோடி ரூபாய் செலவில், 'ரப்பர் பூங்காத் திட்டமாக' தி.மு.க. ஆட்சியில் மாறியது.

நன்றி
விகடன்
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் Empty Re: “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Post by SK Mon Dec 11, 2017 5:47 pm

முதல்வர் ஆர் கே நகர் தேர்தலில் (மக்களின் மீது ) அக்கறையோடு இருப்பதால் நீங்கள் அவர் வரும் வரை காத்திருக்கவும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum