ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_m10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10 
Dr.S.Soundarapandian
தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_m10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10 
heezulia
தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_m10தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்?

Go down

தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? Empty தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்?

Post by ksikkuh Thu Dec 07, 2017 2:07 pm



ஒரு முயற்சியில் தோற்றுவிட்டால் அதிலேயே மூழ்கி விடுவதோ, அல்லது அதிலிருந்து போராடி மீண்டு வருவது என்பதெல்லாம் இதுவரை நாம் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த மீண்டு வரும் காலம் என்பது தோல்வியின் வீரியத்தை பொருத்து அமையும். ஆனால் மில்லினயல் தலைமுறை இந்த தோல்விகளை ஏற்காத தலைமுறையாக இருக்கிறது. இப்போது 30 வயதுக்குள் இருக்கும் தலைமுறையினர் அனைவருமே தோல்வியை கண்டு துவளுவதோ, அதிலிருந்து மீண்டு வர காலம் எடுத்து கொள்வதோ இல்லை என்கிறது ஆய்வு.

தோல்விகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதனை விரும்பத்தகாத விஷயமாகவே பார்க்கத் துவங்கி விட்டனர். ஒருவேளை அதனையும் மீறி தோற்றுவிட்டால் அடுத்த நிமிடமே அதனை சரி செய்யும் வேலைகளில் இறங்கி விடுகின்றனர். அதைவிட அதிகமான செயல்திறனோடு அதனை வெற்றி கொள்ளும் மனநிலைக்கு தங்களை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்? இதில் இவர்களுக்கு உள்ள சாதக, பாதகங்கள் என்ன? என பல கேள்விகளுக்கு மில்லினியல்களின் பதில் இது தான்.

தொழில்நுட்பம் தரும் பாடம்:

இவர்கள் அதிகமாக தொழில்நுட்பத்தோடு இணைந்து காணப்படும் தலைமுறையாக உள்ளனர். இவர்களது மனநிலை கிட்டத்தட்ட தொழில்நுட்ப கருவிகள் போலவே மாறி இருக்கிறது. ஒரு மென்பொருள் ப்ரோக்ராம் வேலை செய்யவில்லை என்றால் அதிலுள்ள பிரச்னை சரிசெய்து ரன் செய்வது போலவே இவர்கள் தங்கள் தோல்வியை அணுக ஆரம்பித்து விட்டார்கள். இது வேலை, செயல்பாடுகளில் மட்டுமல்ல சில நேரங்களில் காதல், நட்பு போன்ற தங்களது தனிப்பட்ட விஷயங்களையும் ஃபார்மெட் செய்து திரும்ப பதிவேற்றும் ஹைடெக் சமூகமாக மாறியுள்ளனர். இதனால் தோல்வி இவர்களை பெரிதும் பாதிப்பதில்லை.

அக்கறையான தலைமுறை;

தன்னைப் பற்றியும், தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றியும் மிகுந்த அக்கறையுள்ள தலைமுறையாக இந்த தலைமுறையுள்ளது. இவர்கள் தோல்விகளுக்காக தவறான முடிவுகளை கையில் எடுக்கமாட்டார்கள். தன்னை மனரீதியாக மிக அதிகமாக பலப்படுத்தி கொள்கிறார்கள். தங்களது தோல்விகளை சமூக வலைதளங்களில் ஒற்றை போஸ்டில் உடைத்தெறியும் திறன் இவர்களிடம் உள்ளது. தங்களை மீட்டெடுக்கும் நேரத்தை மிக சொற்ப நேரங்களில் இவர்களால் செய்ய முடிகிறது.
Advertisement

அக்ரஸிவ் ஜெனரேஷன்:

தோல்விகளால் நிறைந்த ஒரு வேலையை தானாக முன்வந்து எடுத்து அதனை ஒரு ‘கேம்’ போல அணுகி அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல இவர்களால் எளிதில் முடிகிறது. இதற்கு சில நேரடி உதாரணங்களும் உள்ளன. உலகத்தை ஒரே இடத்தில் இணைப்பது, பகிர வைப்பது கடினம் என்பதை உடைத்தது மார்க் சக்கர்பெர்க் எனும் ஒரு மில்லினியல்தான். ‘வெளிநாடுகளில் தோற்கும் அணி இந்தியா’ என்பதையெல்லாம் கேட்கப் பிடிக்கவில்லை, தோல்வி பிடிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு மாற்றிய விராட் கோலியும் மில்லினியல்தான். காதல் தோல்விகள், சர்ச்சைகள் என நிறைந்த வாழ்க்கையில் இசைக்காக ஒரு கூட்டத்தை தன் பக்கம் ஓடி வரவழைத்த ஜஸ்டின் பைபர், மில்லினியல்தான். இந்த அக்ரஸிவ் மனிதர்களின் உதாரணங்கள் மட்டுமல்ல. இந்த தலைமுறையும் கிட்டத்தட்ட அப்படிதான் இருக்கிறது.

ப்ளஸ்:

1. மேலைநாட்டு கலாசாரம், உணவு, உடையில் மட்டுமல்ல, எளிதில் தோல்விகளை விட்டு வெளியேறும் பக்குவம் மில்லினியல் தலைமுறையினரிடம்தான் அதிகமாக உள்ளது.

2. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் உலக அளவில் 75% உங்கள் தலைமுறை வெற்றி பெறுகிறது. செல்ஃபி தலைமுறை என வர்ணிக்கப்பட்டாலும் சுயநலமில்லாத தலைமுறையாக உலகத்தின் பார்வையில் இந்த தலைமுறை இருக்கிறது. அடுத்தக்கட்டத்துக்கு எளிதில் நகரும் தலைமுறை.

3. அடுத்த தலைமுறைக்கான தேவை, அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் வேலையை இந்த தலைமுறைதான் முடிவு செய்கிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் அந்த பழக்கமில்லை.

மைனஸ்:

1. தோல்விகளை ஏற்காமல் அதனை சரி செய்யும் வேலைக்கு மாறும்போது. இந்த வேகம் தெரியாத முந்தைய தலைமுறையை கோபத்துடன் அணுகுவது.

2. முந்தைய தலைமுறையின் அனுபவத்தை புறக்கணிப்பது.

3. அனைத்து உணர்ச்சிகளையும் உடனடியாக வெளிப்படுத்தி உறவுகளில் பலமற்று இருப்பது. காதல், நட்பு உள்ளிட்ட‌ தோல்விகளில் இருந்து உடனடியாக வெளியே வந்தாலும் திடமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவிப்பது.

தோல்விகளை ஏற்காமல் இருப்பது, அதிலிருந்து வேகமாக வெளிவருவது எல்லாம் நல்ல விஷயம்தான். தோல்விகளை சரியாக புரிந்து கொள்ளாமல் போனால் மீண்டும் சரிவு இவர்களை நோக்கி வரும். இதனை இவர்கள் புரிதலோடு அணுகினால் இந்த நூற்றாண்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்யும் தலைமுறை இவர்களாகத்தான் இருப்பார்கள்.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum