ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!

Go down

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Empty வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:49 pm

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  X4i9297yRuao6eu7wDTZ+02CHNVKNEL3
இன்றைய அவசர உலகத்தில், துரித உணவை உண்ண வேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நீரிழிவு, இதய நோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பாரம்பரிய இயற்கை உணவு குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.
திலகராஜன் குறித்து அவரது மனைவியும், ‘மண் வாசனை’ நிர்வாகியுமான மேனகா கூறும்போது, “மென்பொருள் பொறியாளராக இருந்த அவர், நெல் திருவிழா ஒன்றில் பங்கேற்றபோது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல் அவருக்கும் இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் ஏற்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ‘கிரியேட்’, ‘மண் வாசனை’ ஆகிய அமைப்புகளின் சார்பில் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. பாரம்பரிய நெல் ஆர்வலர் மறைந்த பா.திலகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 100 வகை பாரம்பரிய அரிசிகளைக் கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் பங்கேற்று பாரம்பரிய உணவைச் சமைத்தனர்.

மென்பொருள் பொறியாளர் திலகராஜன் குறித்து அவரது மனைவியும், ‘மண் வாசனை’ நிர்வாகியுமான மேனகா கூறும்போது, “மென்பொருள் பொறியாளராக இருந்த அவர், நெல் திருவிழா ஒன்றில் பங்கேற்றபோது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல் அவருக்கும் இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் ஏற்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பணியைத் துறந்த அவர், பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பயணித்தார். பின்னர் பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து, விலையையும் அவர்களையே நிர்ணயிக்க வைத்தார். மேலும் பாரம்பரிய அரிசி மூலமாக தோசை மாவு, இடியாப்ப மாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்கி, விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டப் பாடுபட்டார். அண்மையில் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார்” என்றார். திலகராஜனின் பிறந்த நாளான நவம்பர் 25-ம் தேதி, அவர் அதிகம் நேசித்த 100 பாரம்பரிய அரிசி வகைகளைக்கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Empty Re: வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:56 pm

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  YtmT1OY0RtCX1PFd6t3l+Menagaவேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  N9G4Zst2RaeoByhPUZwV+02CHNVKNEL4
கைக்குத்தல் அரிசி சிறந்தது

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது, “நமது உணவின் பாரம்பரியம் காக்கப்பட கைக்குத்தல் அரிசியை உண்ண வேண்டும். தவிடு நீக்காத அரிசியைத்தான் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க வேண்டும். அரிசி ஆலைகளில் தவிடு நீக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி பேசும்போது, “நியாயவிலைக் கடைகளில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகளை வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் டன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதில் 25 சதவீத கடைகளுக்கு தலா 100 கிலோ கைக்குத்தல் அரிசியை அனுப்புவதற்குத் தேவையான பாரம்பரிய அரிசி விளைச்சலும் இல்லை, விளைவிக்கும் விவசாயிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகோ கம்போ கொடுத்தாலும்கூட, அரிசி உணவு சாப்பிடுவதையே மக்கள் கவுரவமாக நினைக்கின்றனர்” என்றார்.

இயற்கை வேளாண் கொள்கை

‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர் பேசும்போது, “மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கைக்குத்தல் அரிசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பான அம்சங்கள் உள்ளன. அடுத்து வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் அதுபோன்ற அம்சங்கள் இடம்பெறவே இல்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Empty Re: வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:58 pm

பாரம்பரிய நெல் வகைகளில் 8 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியவை. அதை வெளிக்கொணர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பயன்படுத்தப்படும் அரிசியில் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. அதை உண்பதால் நீரிழிவு நோய்தான் வரும். துரித உணவு வகைகளை உண்பதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதிலிருந்து மீள இயற்கை வேளாண் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

பாரம்பரிய நெல் பாதுகாவலர் ‘நெல்’ ஜெயராமன் பேசும்போது, “இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்துள்ளன. பசுமைப் புரட்சியால், நமது பாரம்பரிய நெல் வகைகள் பிலிஃபைன்ஸ் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், ஒடிசா மாநிலம் கட்டாக்கிலும் வைக்கப்பட்டுள்ளன.
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  OixVKtNTJObgc97mRLkG+02CHNVKNEL2

இந்தப் பாரம்பரிய ரகங்களிலிருந்துதான் தற்போது ஒட்டுரகப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, பாரம்பரிய நெல் ரகங்களால் மட்டுமே முடியும். அதற்காகவே, சுமார் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை, சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறோம். பாரம்பரிய அரிசி உணவு நுகர்வோரைச் சென்றடையவே, இந்தப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.

இதை மாநிலம் முழுவதும் பரப்ப, அரசு சார்பில் இயற்கை வேளாண் கொள்கையை உருவாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Empty Re: வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum