ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

3 posters

Go down

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  Empty சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Post by sugumaran Sun Aug 06, 2017 9:38 am

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  C8YbW14QTMi687qkqtx8+1
--அண்ணாமலை சுகுமாரன்
சங்க இலக்கியங்கள் தமிழரின் பெருமை கொள்ளத்தக்க அரிய செல்வங்களாகும் . உலக வரலாற்றில் இத்தனை நெடிய இலக்கிய ஆதாரங்கள் தமிழ் தவிர வேறு மொழிகள்
பெற்றிருக்கிறதா என்பது சந்தேகமே .
தமிழர்களின் வரலாற்றை நிறுவ சங்க இலக்கியங்கள் பெரும் பங்காற்றும்
ஆயினும் நாம் சங்க இலக்கியங்கள் பற்றி சரியான புரிதலில் இருக்கிறோமா என்ற ஐயம் உள்ளது .
தற்போதைய இளைய சமுதாயம் சங்க இலக்கியம் குறித்து
அத்தனை ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை .

சங்கஇலக்கியம் எனப்படுவது தமிழில் கிருஸ்த்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும்.

சங்க இலக்கியம் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
இப்புலவர்களுள் அடங்கியவர்களில் பல தரப்பட்ட தொழில் புரிந்தோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் கூட உண்டு.

சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி சமூக வாழ்க்கையை , அப்போதைய நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.

பண்டைத்தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் தெளிவாக தெரிவிக்கிறது
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.
ஓலைச் சுவடிகளில் முடங்கிக்கிடந்த அவைகளை அயராது தேடியலைந்து அச்சுக்கு கொண்டுவராமல் இருந்திருந்தால்
தமிழுக்கும் ,வரலாற்றுக்கும் எத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை .நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது .
சங்கஇலக்கியங்கள் எட்டுத்தொகைநூல்கள்,பத்துப்பாட்டு ,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டு பதிக்கப்பெற்றாலும் , அவைகளின் காலம் கி. மு மூன்றாம்
நூற்றாண்டு முதல் எனபொதுவாக கருதப்பெறுகின்றன .
ஆயினும் தொல் காப்பியம் போன்ற ஆதி காப்பியங்களில்
பல இடங்களில் "என்பனர் புலவர்" எனகுறிப்பிடப்படுவதால்
பல இலக்கியங்கள் தொல்காப்பியருக்கு முந்தைய பல
நீண்ட காலம் நிலைபெற்றிருப்பதை அறியலாம் .

கோவையில் 2010 இல் நடைபெற்ற சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது எந்த நூற்றாண்டில் ? என்பது பற்றி செம்மொழி மாநாட்டில் நடந்த ஆய்வரங்கத்தில்,பல தமிழறிஞர்கள் விவாதித்தனர்.
அதில் சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவோடு உறுதி செய்கின்றன, என்று ஆய்வரங்கம் நிறைவு செய்யப்பட்டது.
அதுபற்றிய செய்திகளை எடுத்துக் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
6/8/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  Empty Re: சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Post by M.Jagadeesan Sun Aug 06, 2017 12:45 pm

" என்மனார் புலவர் " என்ற சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பு பல இலக்கியங்கள் தமிழ்நாட்டில் இருந்தன என்பதைக் குறிப்பிடுகின்றன. பதினெட்டாம் பெருக்கன்று ஓலைச் சுவடிகளை ஆற்றில் விடுவது அந்தக்காலத்தில் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் . எத்தனையோ தமிழ் இலக்கியங்கள் ஆற்றோடு போய்விட்டன. என்ன செய்வது ? இவ்வளவாவது கிடைத்ததே என்று ஆறுதல் கொள்ளவேண்டியதுதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  Empty Re: சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Post by Dr.S.Soundarapandian Sun Aug 06, 2017 6:53 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  Empty Re: சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Post by sugumaran Wed Aug 09, 2017 8:18 am


சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  C7KoekAdQAy1li5TEqNO+2A
சங்க இலக்கியம் - நம்ம இலக்கியம் - 2
அண்ணாமலை சுகுமாரன்
தமிழகத்தின் அதிகமான வரலாற்று பயிற்றுவிக்கும் நூல்களில் சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது
சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக காலத்தை நிர்ணயம் செயகிறார்கள்

சங்ககாலம் பற்றிய காலத்தை சரியாக கணிக்க சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது எந்த நூற்றாண்டில்’ என்பது பற்றிகோவையில் செம்மொழி மாநாட்டில் நடந்த ஆய்வரங்கத்தில்அப்போது தமிழறிஞர்கள் விவாதித்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் ஆய்வரங்கத்தில், சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இதுவரை நடத்திய ஆய்வுகள் குறித்த விவாதம் மாநாட்டின் நான்காவது நாளில் நடந்தது.
கொடிசியா வளாகத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடந்த இந்த கலந்தாய்வில்அப்போதைய தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு :

அப்போது பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் தலைமை வகித்துப் பேசியதாவது:
“சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை. அதனால் அதற்கேற்ப சரியான ஆதாரங்களை கொடுக்கும் அளவிற்கு ஆய்வுகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது:

பேராசிரியர் பொற்கோ(பொன் .கோதண்டராமன்) பேசுகையில்,””பிற்காலத்தில் எழுந்த உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (நாம் என்பது) சங்க இலக்கியங்களில் இல்லை. இன்னும், “செய்யா’ போன்ற வினையெச்ச வடிவங்கள் மொழிப்பழமையைக் காட்டுகின்றன. சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது’ என்றார்.

சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது:

பேராசிரியர் மணவாளன் பேசுகையில்,””பிறமொழிகளிடம் இல்லாத பொருளிலக்கண மரபை உருவாக்கிய சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது’ என்றார்.
பேராசிரியர் கந்தசாமி பேசுகையில், “பக்தி இலக்கியத்தில் மானுடக்காதல் பொருளை மையப்படுத்தும் இலக்கிய மரபு, யாப்புமுறை, தத்துவ சிந்தனை, அதியமான் கல்வெட்டுச்சான்று ஆகியவற்றின் அடிப்படையில் சங்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது’ என்று கூறினார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்:

தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “”பெருவழுதி, கொல்லிப்புறை, மாக்கோதை காசுகள் மற்றும் அதியமான் மோதிரத்தில் பிராமி எழுத்துக்கள் இருப்பதை பார்க்கும் போது நாணயவியல் சான்றுகளில் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்,” என்று கூறினார்.

கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன:

பேராசிரியை சம்பகலெட்சுமி பேசுகையில்,” அரசியல் உருவாக்கம், சமூக அமைப்பு, வணிகவளர்ச்சி, நகர உருவாக்கம், சமய நிலை எழுத்துருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சங்கப்பாடல்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., முதல் நூற்றாண்டை சேர்ந்தது

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமி பேசுகையில்,” சங்க காலத்திய பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி சொற்களைக் காண முடியாது. அதியமான், கொற்றன், பெருங்கடுக்கோ, பிட்டன் போன்றவர்களின் பெயர்கள் கி.மு., முதல் நூற்றாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்ட ஓடுகளிலும் காணப்படுகின்றன. எனவே சங்ககால இலக்கியங்கள் இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்’ என்றார்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்: ---==பேராசிரியர் சுப்பராயலு

”தமிழகத்திலுள்ள அரிக்கமேடு, கரூர், அழகன்குளம், கொடுமணல், கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 120 இடங்களில் இதுவரை பதிவாகியிருக்கும் இரும்புக் காலச்சின்னங்கள், புலிமான் கோம்பை, தாதப்பட்டி போன்ற இடங்களில் கிடைத்த எழுத்துடை நடுகற்கள், சங்கப்பாடல்களில் காணப்படும் ஆகோள் போன்ற சொற்கள் பதிவு செய்திருக்கும் எழுத்துக்களை பார்த்தால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் ‘ என்றார்.

சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டுஆகும் ;

பேராசிரியர் சண்முகம் பேசுகையில், ” தமிழக ரோமானிய வணிகம் பற்றிய பயணக்குறிப்புகள் இரு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட வணிக உடன்படிக்கைகளில் காணப்படும் பெயர்கள் சாத்தன், கணணன், கொற்றப்பூமான் போன்ற தமிழ் வணிகர் பெயர்கள், முசிறி போன்ற இடங்களில் நடந்த வாணிபத்தை வருணிக்கும் சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம்:
பேராசிரியர்கள் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கொடுத்த கருத்துக்களின் படி சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவோடு உறுதி செய்கின்றன, என்று ஆய்வரங்கம் நிறைவு செய்யப்பட்டது.

இவ்வாறு 2010 ஆய்வரங்கில் இந்த உண்மை நிறுவப்பட்டாலும் இது வரை இந்த செய்தி நமது பாட புத்தகங்களில் இடம்பெற்றதா என்பது தெரியவில்லை .
நமது வரலாறு பற்றிய பெருமை நமக்கு ,நமது மரபுகளை
பேண அவசியம் தேவை .
அடுத்த பகுதியில் சங்க நூல்களில் என்ன என்ன இருக்கின்றன . எத்தகைய செய்திகள் இருக்கின்றன என்பதைக் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
9/௮/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

சங்க இலக்கியம்   --- நம்ம இலக்கியம்  Empty Re: சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum