ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Go down

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Empty ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Post by ayyasamy ram Fri Jul 07, 2017 3:41 pm

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! B2Ma9AKGTZu6Nfmn0hHN+28
-


‘‘‘எனக்குப் பிடிச்ச படம், ‘சதுரங்க வேட்டை’.
இப்ப இரண்டாம் பாகத்தோட motion போஸ்டரை பார்த்தா,
அதை விட இன்ட்ரஸ்ட்டிங்கா, விறுவிறுப்பா இருக்கும்னு
தோணுது. படத்தை பார்க்கணும்னு ஆர்வமா இருக்கேன்’னு
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் சொன்னார்.
-
படத்தோட டப்பிங் அப்ப, ஹீரோ அரவிந்த்சாமி ரொம்பவே
ஹேப்பியாகிட்டார்.
-
என்னோட கேரியர்ல முக்கியமான படமா வந்திருக்கு
நிர்மல் குமார்’ன்னார். த்ரிஷாவும் படத்தை பார்த்துட்டாங்க.
அவங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்…’’ எடிட்டிங்
பரபரப்பிலும் உற்சாகமாக பேசுகிறார் ‘சதுரங்க வேட்டை 2’
படத்தின் இயக்குநரான என்.வி.நிர்மல்குமார்.
-
விஜய் ஆண்டனியை ‘சலீம்’ ஆக்கியவர் இவர்.
-
‘‘ஆக்‌ஷுவலா இந்த படத்தையும் ‘சதுரங்க வேட்டை’
வினோத்தே இயக்கியிருக்க வேண்டியது. கதை, ஸ்கிரிப்ட்னு
எல்லாம் ரெடியா இருந்தது. ஆனா, அவர் கார்த்தி சாரோட
‘தீரன்’ல பிஸியாகிட்டார். அந்த டைம்லதான் மனோபாலா
சாரை சந்திச்சேன். ‘உங்க ‘சலீம்’ பார்த்தேன். எனக்கு
பிடிச்சிருந்தது. ‘சதுரங்க வேட்டை 2’ பண்றீங்களா’னு
கேட்டார். ‘இருபது வருஷத்துக்குப் பிறகு ‘சலீம்’ மூலம்
இயக்குநராகியிருக்கேன்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Empty Re: ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Post by ayyasamy ram Fri Jul 07, 2017 3:43 pm

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! P8ha3OQCWTWnSIpgtWgo+28a
-
இந்த சூழல்ல என் இரண்டாவது படமே இன்னொருத்தரோட
ஸ்கிரிப்டா? வேண்டாம் சார்’னு சொன்னேன். அவர்
சிரிச்சுட்டார். ‘உனக்கு முழு சுதந்திரம் தர்றேன். கதையை
வலுப்படுத்த நீ என்ன வேணாலும் பண்ணலாம்’னு சொன்னார்.
-
அதுக்கு அப்புறம் ஸ்கிரிப்டை படிச்சுப் பார்த்தேன்.
சில மாற்றங்கள் பண்ணிட்டு, வினோத்கிட்ட பேசினேன்.
அவருக்கும் அந்த சேன்ஜஸ் பிடிச்சிருந்தது. ‘சதுரங்க வேட்டை 2’
ரெடியானது இப்படித்தான்…’’ புன்னகைக்கிறார் நிர்மல்குமார்.
-
ஃபர்ஸ்ட் பார்ட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குதா?

-
இல்ல. ‘சதுரங்க வேட்டை’ல சின்னச் சின்ன ஊர்கள்ல நடக்கற
ஐந்தாறு இன்ஸிடென்ட்ஸ் இருக்கும். இது அப்படியில்ல.
மெட்ரோ சிட்டியான சென்னைல நடக்கற ஒரு ஹைடெக்
இன்ஸிடென்ட். முதல் பாகத்துல வந்த காந்தி பாபு (நட்ராஜ்)
கேரக்டரை இதுல அரவிந்த்சாமி சார் பண்றார்.
-
ஹைடெக்கான ஹேண்ட்சம் திருடன். பணம் இருக்கற
இடத்துலதான் இருப்பார். பணத்துக்காக எதை
வேண்டுமானாலும் செய்யத் துணியும் கேரக்டர்.

‘உனக்கு ஒரு விஷயம் தெரியுதுனா… நீ அதை மாத்த முயற்சி
பண்ணாதே. அதை பயன்படுத்து!’ என்பதுதான் அவரோட
பாலிஸி. படத்தோட லைனும் அதான்! அரவிந்த்சாமி
மாதிரியே த்ரிஷாவும் ஒரு க்யூட் திருடி.

சைக்காலஜி ஸ்டூடண்ட். அழகான ஒரு திருடனும், பேரழகியான
ஒரு திருடியும் பண்ற தில்லாலங்கடிதான் படம்.
-


Last edited by ayyasamy ram on Fri Jul 07, 2017 3:52 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Empty Re: ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Post by ayyasamy ram Fri Jul 07, 2017 3:46 pm

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! TA70J947S1aKjbACn1Pn+28b
--
நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, மன், குமாரவேல்,
இயக்குநர்கள் இ.ராமதாஸ், மனோபாலா, எஸ்.எஸ்.ஸ்டேன்லி,
ஆர்.என்.ஆர்.மனோகர்னு நிறைய ஸ்டார் காஸ்ட். இது தவிர
முக்கியமான சீன்ல சஸ்பென்ஸ் எலிமென்ட்டா ரெண்டு
ஸ்டார்ஸ் வரப் போறாங்க.
-
இசை, அஷ்வமித்ரா. ‘காஞ்சனா 2’வில் ‘மொட… மொட…’
பாடல் பண்ணினவர்.
-
நான் இயக்கிய விளம்பரப் படங்களுக்கு இசையமைச்சிருக்கார்.
பாடல்களை அறிவுமதி, யுகபாரதி, கபிலன் வைரமுத்து, ரவி
எழுதியிருக்காங்க. ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ்,
எடிட்டர் ராஜா சேதுபதினு டெக்னீஷியன்ஸ் எல்லாருமே முதல்
பாகத்துல ஒர்க் பண்ணினவங்கதான். மனோபாலா சார்
இயக்குநராக இருந்து தயாரிப்பாளரானவர்.
-
அதனால ஒரு தயாரிப்பாளராக படத்திற்கான விஷயங்களை
சரியா பண்ணியிருக்கார்.
-
அரவிந்த்சாமி, த்ரிஷா கூட்டணி எப்படி?

-
அசத்தலா இருக்கும். ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும்
பிரமாதமா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. பெரிய இயக்குநர்களோட
ஒர்க் பண்ணினவர் அரவிந்த்சாமி சார். அவரைப் பொறுத்தவரை
நான் புது இயக்குநர். ஆனாலும் ஃப்ரெண்ட்லியா பழகினார்.
நாளைக்கு சன்ரைஸ் சீன் இருக்குதுனுசொன்னா,
அதிகாலையிலேயே ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்.

போட்டோ ஷூட் அன்னிக்கே கேரக்டரை புரிஞ்சுக்கிட்டார்.
த்ரிஷா, இதுல ராதாரவி பொண்ணா நடிச்சிருக்காங்க. மரத்தை
சுத்தி டூயட் பாடிட்டு, சும்மா வந்துட்டு போற கேரக்டர்
கிடையாது. அதே மாதிரி நாசர் சார். நாம எதிர்பார்க்கறதை
பிரமாதமா பண்ணினார்.

பிரகாஷ்ராஜ் சார் பத்தியும் சொல்லியாகணும்.
அவர் டைமுக்கு ஷூட்டிங்க்கு வரமாட்டார்னு சிலர் சொன்னாங்க.
ஆனா, அப்படியில்லை. எட்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார்.
ஆனா, ஆறே நாள்ல தன்னோட போர்ஷனை முடிச்சுக் கொடுத்தார்.

ஒரு நாள் அவர் ஆறேழு காஸ்ட்யூம் மாத்தி நடிக்கணும்.
ஸ்பாட்டுலேயே பட்பட்னு மாத்தி, ஒரே நாள்ல முழுவதும் நடிச்சு
அசத்தினார். படத்துல ஆறேழு இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க.
அத்தனை பேரையும் இயக்கினது நல்ல அனுபவம்.
--


Last edited by ayyasamy ram on Fri Jul 07, 2017 3:51 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Empty Re: ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Post by ayyasamy ram Fri Jul 07, 2017 3:49 pm

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Gbra8wzSxGFrZu0WVXIW+28c
-
ஒரு பர்சனல் கேள்வி.
தோத்தாத்ரி… நிர்மல்குமார் ஆனது எப்படி?

-
முதலாளி விஜய் ஆண்டனிதான் காரணம்.
‘சலீம்’ படத்துக்கு முன்னாடி என் நண்பர் மூலம் அவரைச்
சந்திச்சு அந்தக் கதையைச் சொன்னேன். அப்ப அவர்
என்னைப் பார்த்ததும் ஷாக் ஆனார்.
-
‘நீங்க சினிமாவுல இருபது வருஷமா இருக்கீங்கனு
சொன்னாங்க. உங்க பெயர் தோத்தாத்ரினு உங்க நண்பர்
சொன்னதும் ரொம்ப பழைய ஆளு… நமக்கு செட்
ஆகமாட்டார்’னு நினைச்சிருந்தேன்.
-
ஆனா, மாடர்னா யோசிச்சு வச்சிருக்கீங்க. உங்க பெயரை
மாத்துங்க’ன்னார். அப்படித்தான் நான் நிர்மல் குமார்
ஆனேன். ‘சதுரங்க வேட்டை 2’க்குப் பிறகு இன்னொரு
பெரிய ஹீரோ படம் பண்ணப் போறேன்.
-
விஜய் சார் நடிச்ச  ‘பிரியமானவளே’, அஜித் சார் நடிச்ச
‘வீரம்’ படங்களுக்கு கதை எழுதின பூபதி ராஜாவோட
சேர்ந்து அந்தக் கதையை எழுதியிருக்கேன்.
-
என்ன சொல்றாங்க உங்க குருநாதர்கள் எஸ்.ஏ.சி.யும்,
பாரதிராஜாவும்..?

-
எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட ‘ரசிகன்’ல இருந்து மூணு
படங்கள் ஒர்க் பண்ணினேன். அவரோட வீட்லயே ‘சலீம்’
ஷூட்டிங் நடந்தது பர்சனலா எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

பாரதிராஜா சார் சமீபத்தில் இதோட மோஷன் போஸ்டரைப்
பார்த்துட்டு ஆச்சரியப்பட்டார். ‘ஐயம் ப்ரவ்டு ஆஃப் யூடா’னு
சொல்லிட்டு ‘நீ சூதானமா பண்ணு. காம்ப்ரமைஸ் ஆகாத.
எதையும் விஷுவலாவே கொடுக்க முயற்சி பண்ணு’னு
ஆசீர்வதிச்சார்!
-
----------------------------------------

-மை.பாரதிராஜா

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி! Empty Re: ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum