ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!

Go down

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!  Empty அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!

Post by T.N.Balasubramanian Thu Jun 29, 2017 1:24 am

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!

ராபர்ட் வில்லியம் பிளேர் (அ) பாப் பிளேர்.  ஜூன் 23 - இவருக்கு 85-வது பிறந்தநாள். இவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர். 
வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரர். அதாவது, டெஸ்ட் மேட்ச்களில் அரைசதம்
அடித்தவர்களிலேயே மிகக் குறைவான பேட்டிங் ஆவரேஜ் இவருடையதுதான். 33 முறை பேட்டிங் செய்த பிளேர், இரண்டே இரண்டு
முறைதான் இரட்டை இலக்கங்களையே தொட்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் அந்த அரை சதம். ஆனால், நம்முடைய கட்டுரையோ,
அவரது புகழ்பெற்ற ஒரு ஒற்றை இலக்க இன்னிங்ஸைப் பற்றித்தான். 

1953, டிசம்பர் 24. எல்லிஸ் பார்க், ஜொஹன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அதுவரையில் மொத்தம் 27 டெஸ்ட் மேட்ச் போட்டிகள் ஆடி இருந்தது. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.
ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதுவும் முதல் டெஸ்ட் முடிந்தவுடன்
நடந்த பயிற்சி ஆட்டத்தில் டிரான்ஸ்வால் அணியைத் தோற்கடித்த உடன் அவர்களது தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்டிருந்தது.
அதே உத்வேகத்துடன் அவர்கள் இரண்டாவது டெஸ்ட் மேட்ச் போட்டியை எதிர்கொண்டனர். அப்போதெல்லாம் டெஸ்ட் மேட்ச் போட்டிகளில்
ஓவருக்கு எட்டு பந்துகள் வீசுவார்கள். இந்த டெஸ்ட் மேட்ச் போட்டி நான்கு நாள்களுக்கானது. 
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில், இரண்டாவது டெஸ்ட் மேட்ச் துவங்கியது.. துவக்க பந்துவீச்சாளரான பாப் பிளேர், முதல் விக்கெட்டை
வீழ்த்தி சரிவைத் துவக்கி வைத்தார். முதல் நாள் முடிவில் பலம் பொருந்திய தென்னாப்பிரிக்க அணியை 259 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்
என்று கட்டுப்படுத்தினார்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால், அன்று ஓய்வுநாளாக
அறிவிக்கப்பட்டு இருந்தது. வீரர்கள் அனைவரும் அவரவர் அறையில் ஓய்வெடுத்து, மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் காலை
(பாக்சிங் டே) அன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கும்போதுதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது.
டான்ஜிவாய் பயங்கரம்:

நியூசிலாந்தில் இருக்கும் டான்ஜிவாய் என்ற இடத்தில் இருக்கும் வாங்கஹேகு ஆற்றின் மீதிருந்த பாலம் சிதைவுற்றதால், ஒரு ரயில் கவிழ்ந்து, 
ஆறு பெட்டிகள் ஆற்றில் முழுகி, 151 பேர் இறந்தார்கள். அப்போதைக்கு, நியூசிலாந்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய துன்பியல் நிகழ்வு அதுதான்.
அறிமுகமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆன 21 வயதான பிளேர், தன்னுடைய முதல் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இந்தத் தகவல்
வந்தடைந்ததும் மனமுடைந்து விட்டார். பிளேர்,  இதற்கு மேல் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று நியூசிலாந்தின் கிரிக்கெட்
மேனேஜர் அறிவித்துவிட்டார்.  காரணம்?
டான்ஜிவாய் விபத்தில் இறந்த 151 பேரில் பிளேரின் மனைவியாக வேண்டியவரான நெரிஸ்ஸா லவ்-வும் இருந்தார். இருவரும் காதலித்து,
தங்களது திருமணத்தைப் பற்றிய கனவுக் கோட்டைகளைக் கட்டி வந்த நேரமது. தான் கரம்பிடிக்க இருந்த ஆருயிர்க் காதலி மரணமடைந்த
செய்தி கேட்டு, அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். ஒட்டுமொத்த அணியுமே பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
கனத்த இதயத்துடனும், பயத்துடனும் மற்ற வீரர்கள் அனைவரும் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர மைதானத்துக்குச் செல்ல, பிளேர்
மட்டும் ஹோட்டல் அறையிலேயே தங்கிவிட்டார். மைதானத்திலும் - அந்த பெரிய விபத்தின்காரணம் - துக்கம் செலுத்தும்விதமாக இரு நாட்டுக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.
நீ(ய்)ல் அட்காக்கின் அட்டகாசம்:
ஆலன் டொனால்ட் வருவதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பெயர் எடுத்திருந்த நீ(ய்)ல் அட்காக்
அந்தப் போட்டியின் திசையையே மாற்றிவிட்டார். 24 ரன்களிலேயே முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அவரது அனல் பறக்கும்
பந்துகளால் நியூசிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன சட்க்ளிஃப் மற்றும் லாரி வில்லியம்ஸ் ஆகிய இருவரையும் காயமடைய வைத்து சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் அட்காக். சொல்லப்போனால், 24 ரன்களுக்கு 5 பேட்ஸ்மேன் அவுட் என்ற நிலைமையில் தடுமாறிக்
கொண்டு இருந்தது நியூசிலாந்து. வேகப்பந்து வீச்சாளர் அயர்ன்ஸைடும் விக்கெட்டுகளைக் குவிக்க, ஒரு கட்டத்தில் 81 ரன்களுக்கு 6 விக்கெட்
என்று தள்ளாடிக்கொண்டு இருந்தது, நியூசிலாந்து. இரண்டு பேட்ஸ்மேன்கள் மருத்துவமனையில், ஒருவர் மேட்ச்சில் தொடர்ந்து பங்கேற்காமல்
வீட்டிற்குத் திரும்பும் சூழலில் இருக்க, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் துவக்கிய நியூசிலாந்து கொஞ்சம் கொஞ்சமாக
துவள ஆரம்பித்தது.
அட்காக் வீசிய பௌன்சரால் தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தலையில் பெரிய கட்டுடன் மைதானத்திற்குத்
திரும்பினார், சட்க்ளிஃப். நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், துணிச்சலுடன் (தலையில் கட்டுடன்)
விளையாட வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. திரும்ப வந்து, மூன்றாவது பந்தையே சிக்ஸருக்கு அடித்து அதிரடியைத் துவக்கினார்,
சட்க்ளிஃப். 
 ஃபாலோ-ஆன்:
சட்க்ளிஃப்பின் அதிரடியால், ஃபாலோ-ஆனைத் தவிர்த்தது நியூசிலாந்து. ஆனாலும் ஏகப்பட்ட ரன் வித்தியாசம் இருந்ததால், ஒவ்வொரு ரன்னுமே
மிக அவசியம் என்ற சூழலில் சிக்ஸர் மழையாகப் பொழிந்தார், சட்க்ளிஃப். 154 ரன்னில் அணியின் ஒன்பதாவது விக்கெட் விழுந்தபோது, பிளேர்
விளையாட வரமாட்டார் என்றெண்ணிய சட்க்ளிஃப், பெவிலியனுக்குத் திரும்ப வர ஆரம்பித்தார். ஆனால், திடீரென்று மைதானத்தில் ஒரு அமைதி.
நிமிர்ந்து என்னவென்று பார்க்கிறார், சட்க்ளிஃப்.

மைதானத்தில் இருக்கும் 20, 000 பார்வையாளர்களும் எழுந்து நின்று, பெவிலியனில் இருந்து வரும் ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
ஆமாம், பாப் பிளேர் பேட்டிங் செய்ய வந்துக்கொண்டிருந்தார். அறையில் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், தனது அணியினர் மிக
மோசமான நிலையில் இருப்பதைக் கேட்டு, மைதானத்திற்கு வந்திருக்கிறார்.

சட்க்ளிஃப்பை நெருங்கிய பிளேர் “என்னால் உதவ முடியுமென்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அவரது தோள்மீது தனது கரங்களை
ஆதரவுடன் வைத்தவாறே பிட்ச்சை நோக்கி நடக்க ஆரம்பித்தார், சட்க்ளிஃப். பெவிலியனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்கள் அழுதுகொண்டிருக்க, மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் கடந்து ஒரு மனிதனுக்கும் அவனது உணர்ச்சிகளுக்கு இடையேயான போராட்டம்
துவங்கியது. 
போராட்டம்:
பேட்டிங் செய்ய வந்து, முதல் பந்தை சந்திக்க தயாரானார், பிளேர். வேகப்பந்து வீச்சாளர் அயர்ன்சைட் பந்து வீச ஆயத்தமானார். அப்போது, தனது
கையில் இருந்த பேட்டிங் கிளவுசைக் கழற்றி, தனது கண்களை  பிளேர்  துடைக்க,  தென்னாப்பிரிக்க வீரர்களே ஒருகணம் நிலைதடுமாறினார்கள்.
 இதைப்பார்த்து இன்னமும் அதிக முனைப்போடு ஆட ஆரம்பித்தார், சட்க்ளிஃப். தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான
ஹ்யூ டேபீல்ட்டின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். 
தலையில் கட்டுடன் மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஒருவரும், வாழ்வின் மிகத்துயரமான வலியை சுமந்து வரும் இன்னொருவரும் இணைந்து
33 ரன்களைக் குவித்தனர். பிளேர் அந்த இன்னிங்க்ஸ்சில் ஒரே ஒரு ஸ்கோரிங் ஷாட்தான் அடித்தார். அது ஒரு சிக்ஸர். அதற்கடுத்த ஓவரிலேயே
அவர் அவுட் ஆனார். 4 பவுண்டரிகள், 7 சிக்ஸருடன் 105 பந்துகளில் 80 ரன்களைக் குவித்த சட்க்ளிஃப், பெவிலியனுக்குத் திரும்பும் முன், நின்று
பிளேருக்கு வழிவிட்டார். இருவரும் நியூசிலாந்து அணியின் தங்கும் அறையை நோக்கி, அந்த இருள் சூழந்த வழியில் நடக்க ஆரம்பித்தனர்.
அன்று அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையை நோக்கிய பயணமாகவே அமைந்தது. 
வழக்கமாக, கதைகளில் இதுபோன்ற சூழலில் நியூசிலாந்து அணி அந்த டெஸ்ட் மேட்ச்சை ஜெயித்திருக்கும். ஆனால், இது கதையல்ல.
நிஜ வாழ்க்கை. இங்கே நிஜங்களும் நியாயங்களும் போராட வேண்டிய சூழலில்தான் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அந்த டெஸ்ட் மேட்சை
ஜெயித்தார்கள். ஆனால், ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க மக்களின் மனதை ஜெயித்தது என்னவோ, பிளேரும், சட்க்ளிஃப்பும் மற்ற நியூசிலாந்து
வீரர்களும்தான்.
அடுத்தடுத்து நடந்த போட்டிகளில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவந்தது நியூசிலாந்து அணி. இயற்கை செய்த நியாயமோ என்னமோ,
தென்னாப்பிரிக்காவில் காயமுற்ற லாரி வில்லியம்ஸ்சின் திறமையான பேட்டிங் காரணமாக. 1955ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுடனான
டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் வெற்றியை சுவைத்தனர்.
காதலி மரணம். ஆட்டத்தில் இல்லை என்று கிட்டத்தட்ட அறிவித்தாகிவிட்டது. ஆனால் 21 வயதான பிளேருக்கு, தன்னுடைய முதல் சுற்றுப்
பயணத்திலேயே ஒரு மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை கற்றுக் கொடுத்துவிட்டது அந்த நொடி, அந்த ஒரு நொடி மட்டுமே நிரந்தரம்.
வேறொன்றுமே வாழ்க்கையில் நிரந்தரமல்ல. ஆகவே, என்ன நடந்தாலும், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கடமையைச் செய்யுங்கள்.
முடிவுகள் உங்கள் கைகளில் இல்லை. 
இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்ட பிளேர், அதற்கடுத்து பத்து ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். தனது கடைசி டெஸ்ட்
மேட்ச் போட்டியிலும்கூட 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துவிட்டு, இப்போது இங்கிலாந்தில்
வசித்து வருகிறார். பிளேரின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஒரு நாடகம், ஒரு புத்தகம் மற்றும் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது. 
நியூசிலாந்து வரும்போதெல்லாம் பிளேர் தவறாமல் நெரிஸ்ஸாவின் நினைவிடத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 330 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்திய பிளேரிடம் அந்த குறிப்பிட்ட நாளைப் பற்றிக் கேட்டபோது,
அவர் சொன்ன பதில் மறக்க முடியாத ஒன்று.
”அந்த நாளை என்னால் மறக்கவே இயலாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும் எனக்கு அந்தச் சம்பவம் மட்டும்தான் நினைவுக்கு வருகிறது.
என் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துமஸ் என்ற உடனே நினைவுக்கு வரும் சம்பவம் அது ஒன்றுதான். ஆனால், அந்தச் சம்பவம் எனக்கான
உத்வேகத்தைக் கொடுத்தது. எனக்குள் இருந்த நெருப்பை மற்றவர்களிடம் கடத்த அந்தச் சம்பவம் உதவியது. உண்மையைச் சொல்வதாயின்,
என்னை உருவாக்கியது அந்தத் துன்பியல் நிகழ்வுதான்”. 
கடமையைச் செய். கடமையை எந்தச் சூழலிலும் செய்.


நன்றி விகடன்
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 29, 2017 1:25 am; edited 1 time in total (Reason for editing : corrected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!  Empty Re: அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!

Post by T.N.Balasubramanian Thu Jun 29, 2017 1:30 am

மனதை உருக்கிவிட்டது உண்மையிலேயே .

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!  G65oEfRSNKNHi3qigJUg+bob_plair_02135

உருக்கியவர் இவரே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum