ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

2 posters

Go down

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Empty எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

Post by ayyasamy ram Sun Jun 18, 2017 6:18 am

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) XCwc0J6xToKCs4ld1IAp+E_1497433245
-
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பது தான், கூர்ம அவதார தத்துவம்.

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா
கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி
இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,
பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.

இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,
சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’
என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி
என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்
கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,
தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.

பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை
தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,
வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;

அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.
‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி
விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்
கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,
கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,
சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,
அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு
உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே
பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,
வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்
கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார
சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்
அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை
மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக
வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Empty Re: எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

Post by SARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:27 pm

அருமை !!


அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum