ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty காவிய கவிஞர் கம்பர்

Post by ayyasamy ram Thu Jun 01, 2017 5:01 am

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Ni2PTeMrQbKK67CGHNIH+E_1456046546
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…

-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி

சிறப்புப் பெயர்கள்

கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்

படைப்புகள்

கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)

கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்

கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்

கம்ப ராமாயணம் நூல் அமைப்பு


6 காண்டங்கள்

113 – படலங்கள்

10569 – பாடல்கள்

முதல் படலம் – ஆற்றுப்படலம்

இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்

6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்

பொதுவான குறிப்புகள்:

-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:48 pm


   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) 1xKpAq79REyMNh8JSYCz+download(1)

வழக்கு!

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன்
வழக்கறிஞராக இருந்தபோது, ஒருநாள் பணக்காரர் ஒருவர்
லிங்கனிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர்
கடன் கொடுக்க வேண்டியிருந்தது.

பணக்காரர் விவரத்தைச் சொல்லி, வழக்குப் போட
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

""வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப்
போகிறீர்கள்?'' என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச்
சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை.

""சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக
நீங்கள் தர வேண்டும்'' என்று லிங்கன் கேட்டார்.

பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம்
கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட லிங்கன் அந்த ஏழையை
அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் கடனை
அடைக்கச் சொன்னார்.

பணக்காரரும் கடன் கிடைத்த மகிழ்ச்சியில் தமது
இல்லம் திரும்பினார்.
-
-------------------------------
-இராதை இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்.
dinamani


Last edited by ayyasamy ram on Sat Jun 03, 2017 4:14 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:48 pm


   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Blvs3MgRZjKXudjGHBgz+unnamed

பஞ்சம்!

பெர்னார்ட்ஷாவும் செஸ்டர்டனும் இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமகால எழுத்தாளர்கள். ஷா மிகவும் மெல்லிய
உடல்வாகு உடையவர். செஸ்டர்டனோ பருமனாக இருப்பார்.

செஸ்டர்டனும் பெர்னார்ட்ஷாவும் ஒருநாள் சந்தித்துக்
கொண்டனர். அப்போது செஸ்டர்டன் ஷாவைப் பார்த்து,
"உன்னைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது
போலத் தெரிகிறதே!'' என்று கிண்டலடித்தார்.

பெர்னார்ட்ஷாவிடமிருந்து தயக்கமின்றி பளிச்சென்று
பதில் வந்தது.

""உன்னைப் பார்த்தால் அந்தப் பஞ்சத்துக்குக் காரணம்
என்ன என்பது புரிகிறது.''

இதைக் கேட்டதும் செஸ்டர்டனுக்கு சிரிப்பு வர,
இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani


Last edited by ayyasamy ram on Sat Jun 03, 2017 4:16 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:48 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) NoYMASJwTeWu7oGT7isu+churchil_2372625f


உரிமை!

இங்கிலாந்து பார்லிமெண்டில் சர்ச்சிலின் நண்பர்
வில்லியம் ஹிக்ஸ் என்பவர் பேசும்போது,
அக்கருத்து தனக்கு உடன்பாடில்லை என்பதைக்
காட்டுவதற்காக, சர்ச்சில் மறுப்பது போலத்
தலையை ஆட்டினார்.

அதைப் பார்த்து வில்லியம் கிண்டலடித்துவிட்டு,
""என் நண்பர் தனது தலையை அசைப்பதைப்
பார்க்கிறேன். ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
என் கருத்தைக் கூற எனக்கு எப்போதும் உரிமை
உண்டு'' என்றார் கேலியாக.
-
உடனே சர்ச்சில் எழுந்து, ""என்னுடைய சொந்தத்
தலையை அசைப்பதற்கு எனக்கு எப்போதும்
உரிமை உண்டு'' என்றார். நண்பர் தலை
கவிழ்ந்தார்.
-
------------------------------

-அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani


Last edited by ayyasamy ram on Sat Jun 03, 2017 4:22 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:49 pm


   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) CQf9MJHTe6ST01u14MEb+C_Rajagopalachari


தரிசனம்!


ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது கோயில்
தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்.

அந்தக் கோயில் நிர்வாகத்தினர், மற்ற பக்தர்களைக்
கவனியாது, ராஜாஜியை கோயிலுக்குள்ளேயும்
கவர்னர் ஜெனரலாகவே மதித்து சிறப்பு
மரியாதைகளோடு வரவேற்க ஆரம்பித்தார்களாம்.

இந்த ஏற்பாடுகளைக் கவனித்த ராஜாஜிக்குக் கோபம்
வந்தது.

""எல்லாவற்றையும் நிறுத்துங்கள். நான் வாசலில்
எனது செருப்பைக் கழற்றி வைத்தபோதே என்னுடைய
கவர்னர் பதவியையும் கழற்றி வைத்துவிட்டேன்.

வெளியே போகும்போது இரண்டையும் மாட்டிக்
கொள்வேன். ஆண்டவன் சந்நதியில் அனைவரும் சமம்.
எல்லோரையும் போலவே என்னையும் நடத்துங்கள்''
என்றாராம்.
-
தனுஜா


Last edited by ayyasamy ram on Sat Jun 03, 2017 4:21 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:49 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) NJkSfPGMTCCgRILr3cms+vivekanandar


வெற்றி!


கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கின்றது
விவேகானந்தர் பாறை.

விவேகானந்தர், அந்தப் பாறைக்குச் செல்வதற்கு முன்பு
மொட்டைப் பாறை, வழுக்குப் பாறை என்ற பெயர்களில்
அதை அழைத்து வந்தார்கள்.

எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும் அப்பாறைக்குச்
சென்று தியானம் செய்ய விரும்பினார் விவேகானந்தர்.
எப்படிச் செல்வது?

படகுக்காரர்களிடம் தன்னைக் கொண்டுபோய் விடும்படி
கேட்டுக் கொண்டார்.

விவேகானந்தரிடம் காசு இல்லையென்பதால் அவரைப்
படகில் ஏற்ற மறுத்துவிட்டனர்.

படகுக்காரரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க விரும்பவில்லை
விவேகானந்தர்.

சரேலெனக் கடலில் குதித்தார். நீச்சல் அடிக்க ஆரம்பித்தார்.
பாறைக்கு நீந்தியே சென்று பாறை மீது ஏறி கம்பீரமாக
நின்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.

-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani


Last edited by ayyasamy ram on Sat Jun 03, 2017 4:23 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 12:50 pm


உணர்வு!


ஜோசப் டோக் என்ற ஆங்கிலேயர், காந்தியடிகளைச் சந்தித்து
உரையாடியபோது, ""சத்தியாகிரகம் என்ற தத்துவ உணர்வு
உங்களுக்குத் தோன்ற அடிப்படையாக இருந்தது எது?''
என்று கேட்டார்.

காந்தியடிகள், ""நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த
போது பாடத்தில் வந்த ஒரு குஜராத்திப் பாடல்தான்
சத்யாகிரக உணர்வை எனக்குத் தந்தது.

தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதன் மூலம்,
அவனுக்குத் தீமையை உணரச் செய்ய வேண்டுமென அந்தப்
பாடல் அறிவுறுத்தியது.

பின்னர் இயேசுநாதரின் மலைச் சொற்பொழிவை பைபிளில்
படித்த போது அந்த குஜராத்திப் பாடலின் உண்மையான
பொருள் என்னவென்று எனக்கு நன்றாகப் புரிய வந்தது.

மீண்டும் இயேசுநாதரின் மலைப் பொழிவை படித்துப் படித்து
அதன் ஆழ்ந்த கருத்துகளை மனதில் நன்கு வாங்கிக் கொண்டேன்.
இப்படித்தான் சத்யாகிரக உணர்வு எனக்குள் தோன்றியது''
என்றார்.


-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty மகனுக்கும் சலுகை கிடையாது...!!

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 1:02 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Irf9TtzcRkKgrLlCnkJy+morarji-desai-2
-
மொரார்ஜி தேசாய் -
----------------------------------

முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தந்தை
ஆசிரியராக வேலை பார்த்தவர்.

அவர் வீட்டிலிருக்கும்போது ஒருமுறை கூட மொரார்ஜிக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்தது கிடையாது.

""உனக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால், மற்ற
மாணவர்களைவிட உன்னை அதிகமாகக் கவனிக்கிறேன்
என்று அர்த்தமாகும். என்னுடைய மாணவர்களுக்கிடையே
பேதம் கற்பிக்கவோ ஒருவனுக்கு மட்டும் அதிக சலுகை
காட்டவோ நான் தயாராக இல்லை.

அதனால் வீட்டில் என்னிடம் பாட சம்பந்தமாக எந்த
சந்தேகமும் கேட்க வேண்டாம்'' என்று தனது மகனிடம்
கூறிவிட்டார்.

ஆசிரியர்கள் நெறிமுறையோடும் சேவை
மனப்பான்மையோடும் வாழவேண்டும் என்பதற்கு
மொரார்ஜியின் தந்தை உதாரணமாகத் திகழ்ந்தார்.
-
---------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty ஆலயம் செல்!

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 1:08 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) NBUmxWD8SHSM6F2VkEFX+Booker_T_Washington_1940_Issue-10c


புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும்
எழுத்தாளராக இருந்தவர்.

இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச்
சென்றார்.

அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் விட
மறுத்தனர்.

"நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை.
நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுள்
எனக்குச் சொல்வார்...'' என்று கூறிவிட்டுத் திரும்பினார்.

ஆண்டுகள் பல கடந்தன... புக்கர் டி.வாஷிங்டன்
புகழ்மிக்க எழுத்தாளரானார்.

மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.

அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள்,
"என்ன கடவுள் உங்களிடம் ஏதாவது சொன்னாரா?''
என்று ஏளனமாகக் கேட்டனர்.

உடனே வாஷிங்டன், "இப்போது நான் உங்களைப்
பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை.
ஏனென்றால் கடவுள் என்னிடம், "நானே அந்த
ஆலயத்துக்குச் செல்வதில்லை... நீ ஏன் செல்கிறாய்?'
என்று கேட்டார்'' எனப் பதிலடி கொடுத்தார்.
-
----------------------------
-என்.இராஜப்பா, மன்னார்குடி.
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty நாணயம்!

Post by ayyasamy ram Sat Jun 03, 2017 1:09 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) BhhoS58nQcmMAPnBu0Fq+thiruvika


தமிழ்ப் பெரியார் திரு.வி.க. "தேசபக்தன்' என்னும் தின
தழை நடத்தி வந்தார். அந்தச் சமயத்தில் திரு.வி.க.வும்
பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தனர்.

தேசபக்தன் இதழுக்கு நிதி உதவியாக, தம்முடைய பங்காக
ரூபாய் ஆயிரம் அனுப்பியிருந்தார் பெரியார்.

இச்செய்தியை ""பெரியார் இராமசாமி நாயக்கர் ஆயிரம்
ரூபாய் அளித்தார்'' என்று தேசபக்தனில் வெளியிட்டார்
திரு.வி.க.

அதைப் படித்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அதில்-

""நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே ஒரு
திருத்தம் போடுங்கள். இராமசாமி நாயக்கர் மூலமாக
வந்த தொகை ஆயிரம் ரூபாய் என்று செய்தி போடுங்கள்.''

இதற்குக் காரணம், அவர் மற்றவர்களிடமிருந்தும்
வசூலித்துச் சேர்த்த பணத்தோடு தனது பணத்தையும்
போட்டுத்தான் அனுப்பியிருந்தார்.

எத்தகைய நேர்மை!
-
---------------------
-எல்.நஞ்சன், முக்கிமலை.
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum