ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகசக்தி அதிகரிக்க!

2 posters

Go down

ஞாபகசக்தி அதிகரிக்க! Empty ஞாபகசக்தி அதிகரிக்க!

Post by தாமு Tue Dec 01, 2009 4:21 pm

ஞாபக சக்தி அதிகரிக்கவும், சிந்திக்கும் சக்தி அதகரிக்கவும் பாதாம் பருப்பே துணை. இதில் பத்து எடுத்து அவற்றை இரவில் ஊறவைத்து காலையில் மேலே உள்ள தோலை உரித்துவிட்டு அரைக்கவும். இந்தக் கலவையில் வெண்ணெய் கலந்தோ அல்லது கலக்காமலோ சாப்பிடலாம். வாரத்திற்கு மூன்றுமுறை இப்படி சாப்பிட்டால் நல்லது. தவிடு நீக்காத சம்பா கோதுமை, ரவை, முளைவிட்டக் கொண்டைக்கடலை, சூரியகாந்தி அல்லது சோயா எண்ணெய் முதலியன மூளை வளர்ச்சிக்கும் உதவும். இவற்றில் உள்ள வைட்டமின் ஈ மிகுந்த சக்தியுடன் செயலாற்றி மூளைக்கு வலுவைத் தருகின்றன.
மஞ்சள் காமாலை விரைந்து குணமாக!
மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். தாது உப்புக்களும் வைட்டமின் ஏயும் கல்லீரலைக் குணமாக்கும். இதனால் மஞ்சள் காமாலை நோய் விரைந்து குணமாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு வேறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் போதும் மாதுளம் பழங்களும், இளநீரும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை விரைந்து குணமாகும்.
மீன் சாப்பிடலாம்!
ஜப்பானிய மக்கள் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் டன் எடையுள்ள மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிடுகின்றனர். கடல் உணவு வகைகள் சாப்பிடுவதில் இன்று ஜப்பானியர் தான் முதலிடத்தில் உள்ளனர். கடல் உணவுகளில் உள்ள துத்தநாக உப்பால் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கூடி இரத்தத்தில் கொலாஸ்டிரல் உயர்வு குறைக்கப்படுகிறது. மீன் அதிகம் சாப்பிட்டாலும் இரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இதயத்திற்கு இதமாக மீன் உணவு இருக்க அன்றைய தினம் பசலைக்கீரை, அவரைக்காய், காலிஃபிளவர் போன்றவற்றில் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் சோயா மொச்சையையும் மீன் உணவுடன் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால், மீனிலிருந்து போதுமான அளவே துத்தநாக உப்பு உடலில் உறிஞ்சப்படுகிறது. மீதி வெளியேற்றப்படுகிறது. ஆக, மீன் உணவையும் சத்தாகப் பயன்படுத்திக் கொள்ள காய்கறி ஒன்றும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
உடல் பருமனா?
இருபது வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயது ஆண், பெண்களும் உடல் பருமனாகாமலும் அதே நேரத்தில் ஸ்டிரோக் அபாயம் ஏற்படாமலும், வாழ, கோதுமை உப்புமா, கொண்டைக்கடலை, பால், தயிர் ஆகியவற்றை தினமும் சேர்த்து வரவேண்டும். இதிலிருந்து கிடைக்கும் கால்சியமும் ஈ வைட்டமின்னும் நார்ச் சத்தும் ஸ்டிரோக், நீரிழிவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கும்.
மதிய உணவில் முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, காரட், தேன், எலுமிச்சம் பழச்சாறு முதலியவற்றைத் தவறாமல் சேர்க்க வேண்டும். இதில் கிடைக்கும் ‘பி’ வைட்டமின்களும், முட்டைக்கோஸில் உள்ள அமிலமும் உடலைப் பருமனாகாமல் பார்த்துக் கொள்கிறது. சோயமாவு, ராகி மாவு முதலியவற்றை வாரம் 5 நாள் காலை உணவாகக் சேர்க்க வேண்டும். அரிசி, கோதுகை மாவு போன்றவை வாரம் ஒரு நாள் போதும்.
உடல் பலவீனமாக இருந்தால் காலையில் பழங்கள் மட்டும் சாப்பிடவும். மதியம் மொச்சையும், இரவில் பேரீச்சம்பழமும் மற்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் போதும். சூரியகாந்தி எண்ணெயில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
தினமும் சாக்லேட் சாப்பிடுங்கள்!
தினமும் 41 கிராம் அளவு அதாவது ஒரு சின்ன பார் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் நீங்கள் 95 வயதுக்கு மேலும் நலமாக வாழ்வது உறுதி. இரண்டு நிபந்தனைகள் 1. இந்த அளவு (41 கிராம்) கூடவோ, குறையவோ கூடாது. 2. விட்டுவிட்டுச் சாப்பிடக்கூடாது. தினமும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் சாக்லேட்டில் மட்டுமே உள்ள பெனோல் என்ற நச்சு முறிவு மருந்து இதயம் தொடர்பாக எந்த ஒரு திடீர் பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாப்பதால் வாழ்நாள் நீடிக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஹார்டுவார்டு பல்கலைக்கழகம் 65 வயது வரை உள்ள 7,841 ஆண்களிடம் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் பற்றி ஆராய்ந்தது. தினசரி ஒரு பார் சாப்பிட்டவர்க்ள 95 வயதையும் தாண்டி வாழ்ந்துள்ளார்கள். 5 ஆண்டுகள் கழித்து ஆராய்ந்தபோது தினசரி சாக்லேட் சாப்பிடாத பலர் இறந்து போயிருந்தார்கள். இறந்தவர்களில் பலர் வாரம் மூன்று நாள் சாக்லேட் சாப்பிட்டவர்கள். சிலர் மாதம் ஒரு முறை சாக்லேட் சாப்பிட்டவர்கள். 1916ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை பிறந்துள்ள ஆண்களின் இனிப்புப் பழக்கத்தை ஆராய்ந்து 1998 இல் இந்த உண்மைகளை வெளியிட்டது. ஹார்வார்டு பப்ளிக் ஸ்கூல் ஆப் ஹெல்த், எல்லா இனிப்புகளுக்கும் இந்த வாழ்நாள் நீடிக்கும் சக்தி இல்லையாம். சாக்லேட்டில் மட்டுமே பெனோல் என்ற இந்த நச்சு முறிவு மருந்து இருக்கிறதாம்.
குடல் கோளாறுகளா? முடி கொட்டுகிறதா?
குடல் சம்பந்தமான எல்லா வகையான கோளாறுகளையும் வேர்க்கடலை, சோயா, ஓட்ஸ் மாவு, பீன்ஸ், கோதுமை மாவு, முந்திரிப்பருப்பு, கைக்குத்தல் அரிசி முதலியன விரைந்து குணமாக்கும். ஆட்டு ஈரல் நன்கு குணமாக்கும். இந்த உணவுப் பொருள்களில் உள்ள பாந்தோனிக் அமிலம் குடல் சம்பந்தமான கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. காய்கறிகளில் காளான், காலிபிளவர், முட்டைக்கோஸ் ஆகியவற்றில் மட்டுமே இந்த வைட்டமின் இருக்கிறது. எனவே, இவற்றை பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றுடன் சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண்கள் வேகமாகக் குணமாகும். திடீரென்று முடிகொட்டுவது, எப்போதும் சோர்வான மனநிலை, நீண்ட நேரம் படுக்கையில் தூங்க விருப்பம் முதலியவை இந்த வைட்டமின்னின் குறைபாடே. இவர்களும் மேற்கண்ட உணவு வகைகளைச் சேர்ந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகச் சுருக்கத்தை தவிர்க்கும் பப்பாளி!
நமது தோல் எப்போதும் சுருக்கம் விழாமல் பளபளப்பாக உறுதியாக இருக்க வேண்டும். இதற்காகப் பப்பாளி சாப்பிட்டு வரவேண்டும். இதில் உள்ள பாப்பைன் என்ற செரிமானப் பொருள் தோலின் மேற்பகுதியில் படிந்துள்ள இறந்துபோன செல்களை எந்தவிதமான கெடுதியும் இல்லாமல் உரித்து எடுத்து வெளியேற்றி விடுகிறது. பப்பாளியால் ஜீரணமும் ஒழுங்காக நடைபெறும். இளமைத் தோற்றமும் நீடிக்கும்.
சோரியாசிஸ் அகலும்!
சோரியாசிஸ் என்ற யானைச் சொறி நோயை குறைந்த செலவில் மிக எளிதாகக் குணப்படுத்த இயலும். ஓட்ஸை (Oats) மாவாக மாற்றி படை உள இடத்தில் நன்கு அழுத்தி தேய்த்துக் குளித்து வரவேண்டும். உடல் முழுவதும் ஓட்ஸ் மாவு தேய்த்துக் குளித்து வந்தால் வறண்ட தோல் பளபளப்பாக மாறும்.
நன்றாகத் தூங்கினால் மாரடைப்பு வராது!
மனக்கவலை, நம்பிக்கையின்மை, இவற்றால் தூக்கம் வருவதில்லை. இந்த மன இறுக்கத்தால் இரத்தக் குழாய்களில் அடைப்பு, ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படுகிறது. வயதாகும்போது தாம்பத்ய உறவை மனைவி தவிர்ப்பதால் கணவன் டென்ஷன் ஆகிறார். 1999ஆம் ஆண்டு 730 டானிஷ் மற்றும் 942 ஃபின்னிஷ் நாட்டு ஆண்களை ஆராய்ந்ததில் இந்த விபரம் கிடைத்தது. இவர்கள் எல்லாம் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இப்போது மன இறுக்கத்தால் மாரடைப்பு ஏற்படுவது கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 84% மன இறுக்கமே மாரடைப்பை உண்டாக்குமாம். எனவே, கவலைப் படாமல் வாழுங்கள். அளவான உடற்பயிற்சி, இடைவிடாத வாக்கிங், சரியான சாப்பாடு, கோபம் இல்லாமல் வாழ்வது என்று ஒழுங்குபடுத்தி வாழ்ந்து வந்தால் இரவில் நன்கு தூக்கம் வரும். வாழ்நாளும் நீடிக்கும். நல்ல வார்த்தைகளை மட்டுமே தொடர்ந்து பேசுங்கள். நல்லதையே சிந்தியுங்கள். இதனால் இதயம் தொந்தரவு இன்றி சீராக இயங்கும் என்கிறார்கள்.
உணவைக் குறைப்பது நல்லதுதான்!
உணவைக் குறைப்பதுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால் தான் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழமுடியும். உடற்பயிற்சி செய்யும்போது ஆகிஸிஜன் எடுத்துச் செல்லும் ஹீமோ குளோபின் மற்றும் அதனைப் பயன்படுத்தும் திசுக்களும் விரிவடைகின்றன. இரத்த சீரத்தில் லிப்போ புரதங்கள் உருவாவதால், இதயநோய் முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, டென்னிஸ், நீச்சல், இந்த நான்கில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வந்தால் போதும். இவற்றுள் எதைச் செய்தாலும் என்டார்பின் என்ற பொருள் இரத்தத்தில் கலந்து உடல் வலியைப் போக்கி நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.
காலையில் கேழ்வரகும் உருளைக் கிழங்கும் நல்லது!
அரிசியும் கோதுமையும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு. ஆனால் இந்த இரண்டிலும் உள்ளது போல கார்போஹைடிரேட்டுடன், நார்ச்சத்துடன் சில ஊட்டச் சத்துக்கள் கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு முதலியவற்றில் உள்ளன. அது, சுண்ணாம்புச் சத்துதான், இந்த சுண்ணாம்புச் சத்து அரிசியிலும் கோதுமையிலும் இல்லை. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி யும், வள்ளிக்கிழங்கில் கரோட்டினும் தாது உப்புகளை உடல் தக்க அளவில் பயன்படுத்திக் கொள்ள பைட்டேட்ஸ், டானின்ஸ் என்ற இரு கூட்டுப் பொருட்களும் உள்ளன. எனவே, இட்லி, சப்பாத்தி என்று இல்லாமல் ராகி, தினை, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு என்று விதவிதமாகக் காலை உணவில் சேருங்கள்.
திடீரென்று உடல் மெலிகிறதா?
தினமும் தேங்காய் சாப்பிடுவது, வெற்றிலை போடுவது ஆகியவற்றைப் பின்பற்றி வந்தால் பசியைக் கட்டுப்படுத்தும் லெப்டின் என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து சக்தியை அதிகம் செலவு செய்யவும் தூண்டும். இதனால் கொழுத்த சரீரம் கொண்டவர்கள் ஒல்லியாக வாய்ப்பு உண்டு. முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றிலும் துத்தநாக உப்பு இருக்கிறது. இந்தத் தாது உப்பை மாத்திரை வடிவில் டாக்டர் ஆலோசனைப்படி சாப்பிடுவதும் நல்லது. சாப்பாட்டிலும் உடற்பயிற்சியிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் போதும். உடல் பருமன் அது பாட்டுக்கு மெல்ல மெல்லக் குறையும்.
[b]கே.எஸ்.சுப்ரமணியின்[/b]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஞாபகசக்தி அதிகரிக்க! Empty Re: ஞாபகசக்தி அதிகரிக்க!

Post by VIJAY Tue Dec 01, 2009 4:26 pm

நல்ல பயனுள்ள தகவல் தாமு.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஞாபகசக்தி அதிகரிக்க! Empty Re: ஞாபகசக்தி அதிகரிக்க!

Post by தாமு Tue Dec 01, 2009 4:33 pm

நன்றி விஜய்... ஞாபகசக்தி அதிகரிக்க! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஞாபகசக்தி அதிகரிக்க! Empty Re: ஞாபகசக்தி அதிகரிக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum