ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

3 posters

Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by T.N.Balasubramanian Sun Apr 16, 2017 8:15 am

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?
பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

தமிழ் புத்தாண்டு, கிருஷ்ணபட்சம், திருதியை திதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. இந்த ஆண்டில், மழை குறைவாக பொழியும். எனினும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு மூலம் பெரும் உதவிகள் கிடைக்கும்;
காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப்படும். மாற்று பயிர் திட்டம் மூலம், விவசாய பாதிப்பு சற்று குறையும். வாகனம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், காகிதப் பொருட்கள் விலை கூடும்; பண மதிப்பு உயரும். அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, மக்கள் ஒற்றுமையால், அரசியல் தலைவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.
அரசியல் தலைவர்களில், பெரும்பாலா னோருக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுவ தால், குட்டையை குழப்பி, மீன் பிடிக்கும் வகையில், அரசியல் நடைபெறும்.அரசியல் தலைவர்களின் புத்தாண்டு பலன் விபரம்:

ஜோதிடர் சிவ அண்ணாமலை தேசிகன் - விழுப்புரம்:

பிரதமர் நரேந்திர மோடி: சந்திர திசை, 2024 வரை நடைபெறுவதால், அவரே தொடர்ந்து பிரதமராக வாய்ப்புண்டு. ராகு, கேது, சனி கிரகம் சாதகமற்ற நிலையில் செயல்படுவ தால், நவ., 28 வரை, பயணத்தில் எச்சரிக்கை தேவை.

ஸ்டாலின்: குரு திசையில், புதன் புத்தி நடைபெறுவதால், பாதக பலனை அளிக்கும். அதை சரி செய்ய, அனைவரையும் அரவணைத்து செல்வது நலம்.

விஜயகாந்த்: புதன் திசையில், செவ்வாய் புத்தி நடைபெறுவதால், உடல் ரீதியாக, அதிக பாதிப்பை சந்திப்பார். கூட்டணி கட்சிகள் அரவணைப்பில், கட்சியை ஓரளவு காப்பாற்ற முடியும்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: இவரும் தன் உடல்நிலையில், கவனம் கொள்வது நலம். ஜூலை, 16 முதல், அக்., 4 வரை, குரு எதிரிக்கு சாதகமாக உள்ளதால், எச்சரிக்கை தேவை.

முதல்வர் பழனிசாமி: இவரும் பன்னீர் செல்வத்தை போல், பதவி இழக்க நேரிடும். அ.தி.மு.க., பல துண்டுகளாக சிதறும் நிலை ஏற்படும். இவ்வாறு ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். -

நமது நிருபர் -தினமலர்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Apr 16, 2017 8:16 am; edited 1 time in total (Reason for editing : edited once)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty Re: தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by T.N.Balasubramanian Sun Apr 16, 2017 8:19 am

தொடர்ச்சி :

ஜோதிடர் பரணீதரன் - பாடி, சென்னை:

தி.மு.க., தலைவர் கருணாநிதி: ஆண்டின் துவக்கத்திலேயே, விரயாதிபதி, ஆயுள் காரகனை பார்ப்பதும், சுகஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், குரு வக்ரம் அடைந்திருப்பதும், உடல் ரீதியாக கடும் சங்கடங்களை உருவாக்கும். சிகிச்சை எடுத்தாலும், சுய நினைவிற்கு இது, சோதனைக் காலமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி: ஆண்டின் துவக்கத் தில், ராசியில் உள்ள சனி பகவானை, ராசிநாதன் பார்ப்பதும், நான்கில் கேது, பத்தில் ராகு என்ற பாப கிரகங்களின் சஞ்சாரமும், திடீர் நெருக்கடிகளை உருவாக்கும். சில பிரச்னை களை சமாளிக்க வேண்டி வரும். எதிர்க்கட்சி யினர் தொல்லை அதிகரிக்கும். உடல் ரீதியாகவும், இக்காலத்தில் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

காங்., துணைத் தலைவர் ராகுல்: செப்., 2ல் நடைபெற உள்ள, குருபெயர்ச்சிக்கு பின், கட்சி யிலும், அரசியல் வட்டாரத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்கட்சிகளை ஒன்று சேர்த்து, ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: செப்டம்பர், 2ல், குரு எட்டாம் இடம் செல்வதும், டிச., 19ல், சனி பகவான் பத்தாம் இடம் செல்வதும், இவருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும்.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: இந்த ஆண்டில், இவர் நினைப்பதற்கு, எதிர்மறை யான பலன்களே நடக்கும். திட்டமிட்டு செயல் படும் காரியங்களிலும், இவரின் அவசரத்தால் தோல்வி உண்டாகும். செப்., 2க்கு பின், அரசியலில் மாற்றம், செல்வாக்கு என்ற நிலை உருவாகும்.

முதல்வர் பழனிசாமி: பத்தில் உள்ள சனியை, செவ்வாய் பார்ப்பதால், மே, 26 வரை, பல வகையிலும் நெருக்கடிகளும், சங்கடங்களும் ஏற்படும். உடன் இருப்பவர்களும், மறைமுக எதிர்ப்பாளர்களாக இருப்பர். ஜூலை, 27க்கு பின், எதிரிகளை அடக்கி, நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். செப்., 2க்கு பின், அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். டிச., 19க்கு பின், இவருக்கு யோக காலமாகும்.

தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த்: லாபத் தில் உள்ள ராகு மட்டுமே, சாதகமாக இருக்கி றார். ஆயுள் ஸ்தானத்தை, ஆயுள் காரகனே பார்ப்ப தால், உடல் நிலையில் சங்கடங்கள் நீடிக்கும். ஏழாம் அதிபதி எட்டில் மறைவதும், நட்பு, கூட்டணி, உறவு என, எல்லாவற்றிலும் பிற்போக்கான நிலையே ,உண்டாகும். ஜூலை,
27க்கு பின், உடல்நிலை யில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செப்., 2க்கு பின், அரசியல் சூடுபிடிக்கும். டிச., 19க்கு பின், ஆற்றல் அதிகரிக்கும். புதிய வழியில் பயணம் மேற்கொண்டு, அரசியலில் முன்னேற்றம் காண்பார்.

பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி: ஆண்டின் துவக்கத்தில், கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், செப்., 2க்கு பின், செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு, இவரின் செயல்பாடு கள் இருக்கும். டிச., 19க்கு பின், முக்கிய அரசியல் சக்தியாக மாற்றம் பெறுவார்.

பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை: ஆண்டின் துவக்கத்தில், கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால், இவர் சார்ந்த அரசியல்தமிழகத்தில் எடுபடாமல் போகும். செப்., 2 முதல் புதிய திருப்பு முனை ஏற்படும். இதுவரை நிறைவேறாமல் போன முயற்சிகள், வெற்றி பெற ஆரம்பிக்கும்.

தொடரும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty Re: தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by T.N.Balasubramanian Sun Apr 16, 2017 8:27 am

ஜோதிடர் சிவகுரு ரவி - விழுப்புரம்:

பிரதமர் மோடி: இந்த ஆண்டு, குரு, 11ம் இடம் என்ற லாப ஸ்தானத்தில் அமர்ந்து, சிறப்பான செயல்பாட்டை உயர்த்துவதாக அமைகிறது. எந்த பிரதமருக்கும் கிடைக்காத வெற்றியை, கட்சிக்கு சமர்பிப் பார். தனக்கென்று ஒரு தனி முத்திரையை, அரசியலில் பதிப்பார்.

காங்., தலைவர் சோனியா: இவரது ராசியில், குரு 12க்கும், ஏழரை சனி வாக்கு ஸ்தானத்திலும், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, அதிச் சாரமாக பெயர்ச்சியாவது மாபெரும் சிறப்புக்குரிய தாகும். இவரின் கனவுகள் நனவாகும் வண்ணம் அமையும்; கட்சியை பலப்படுத்துவார். இவருக்கு ராஜயோகம் புரிய, இந்த ஹேவிளம்பி ஆண்டு பொன்னான ஆண்டாக அமையும்.

விஜயகாந்த்: இவரது ராசிக்கு, 12ம் இடத்தில், குரு அமர்வு, தற்போது ஏழரை சனியும் நடைமுறையில் உள்ளது. அரசியலில் திடீர் மாற்றம் நிகழும் வகையில், கட்சியை பலப்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். இவர் ராசிக்கு, சூரியன் பாதகாதிபதியாக அமைவதால், அரசியல் தலைவர்கள் குறுக்கீட்டால், பல குழப்பங்களை அடைவார்.

பன்னீர்செல்வம்: இவருக்கு கிரகங்கள் சாதக மாகவே அமைந்துள்ளன. சிம்மாசன யோகம் விரைவில் வரும். மக்கள் மத்தியில், பிரமாதமாக வும், பிரகாசமாகவும் ஜொலிப்பார்; குறை என்பது இருக்காது.

தினகரன்: ஏழரை சனி வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். 12ல், குரு மறைந்து அமர்ந்துள்ளார். தற்போதுள்ள ஏழரை சனியால், எழுந்து உட்கார வைக்கும், பழைய மகுடம் வருமா என்றால் சந்தேகம் தான். வீம்பு, வீராப்பு, வேகம் போன்ற வற்றை குறைத்துக் கொண்டால், தனி ஆவர்த்தனம் வாசிக்க சனி உதவுவார். எதிரி கள் அருகிலேயே இருப்பர்; எச்சரிக்கை அவசியம்.

அன்புமணி: குரு ஆறாம் இடம் என்ற, கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். அவ்வளவு தான் ஆட்டம் குளோஸ் என, நினைத்தவர்கள், பீனிக்ஸ் பறவை யாக எழுந்து நிற்கலாம். ஒரேயடியாக அள்ளி விடலாம் என நினைத்தவர்கள், அளவாகத்தான் அள்ள முடியும். இனி, இவருக்கு நல்லகாலம் தான் என்பது நிஜம். போராட்டமான வாழ்க்கை பாதை, இனி தேரோட்டமாக இருக்கும்.

தமிழிசை சவுந்தரராஜன்: இவர் ராசிக்கு, 10ம் இடத்தில், குரு அமர்ந்துள்ளதால், மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஏழரை சனியும், ஜென்ம சனியாக வர உள்ளார்; கவனம் தேவை.

வைகோ: தற்போது, சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் செல்வதால், உடலில் பிணிகள் தோன்றும். விரக்தியும், வேதனையும் தொடர்ந்த வண்ணமாக இருக்கும். மற்றவர்களிடம், மற்றவர் களைப் பற்றி பேசும் போது, எச்சரிக்கையோடு பேச வேண்டும். அஷ்டம சனியால், பல தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

ஸ்டாலின்: இவரது எண்ணங்கள் பலிதமாகும். இவரின் செயலுக்கேற்ப, தொண்டர்கள் இணக்க மாவர். அர்த்தாஷ்டம சனியாக, பல தடைகளை கொடுத்துக் கொண்டிருந்த, சனீஸ்வர பகவான், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்ற, ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். எண்ணற்ற
வலிமையான சாதனைகளை சந்திக்க உள்ளார்.

பொதுமக்கள் மத்தியில், சிறப்பான வலிமையைப் பெறுவார்.

முதல்வர் பழனிசாமி: ஜென்ம ராசியில் கேதுவும், ஏழில் ராகுவும், சஞ்சார நிலையில் உள்ளனர். ஆபத்தான ஒன்றாக, குருவும் எட்டில் மறைந்துள்ளார்.தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டு தான், இருக்கிறது. பகைவர்கள் பக்கத்திலேயே இருப்பர். ஜென்ம ராசிக்கு, அஷ்டமத்தில் குருவின் நிலை, வேதனைக்குரியதாக அமைகிறது. எச்சரிக்கை அவசியம்.

ஜோதிடர் ஆசேனா ஹம்ஸிகா சோமசேகரன், ஆற்காடு:

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இவருக்கு செப்டம்பருக்குப் பின், உடல்நிலை சீராகும். ஏழரை நாட்டு சனி ஆண்டின் கடைசி பகுதியில், அரசியலில் சற்று பிரகாசிக்கும் நேரம் வருகிறது. கூட்டாட்சி தேர்தல் அமைப்பது நல்லது.

ஸ்டாலின்: குருபெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி, மிக சாதகமாக உள்ளது. காரிய தடங்கல்களால் தாமதமானாலும், வெற்றிகள் நிச்சயம். கூட்டணி பலமாக அமையும்; மாற்று கட்சியினர் ஆதரவு பெருகும்.

அன்புமணி: செப்டம்பர் முதல் நேரம், காலம் நன்றாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், கணிச மான வெற்றிகளைப் பெறலாம். இடைத்தேர்த லில் போட்டியிடாமல் இருப்பது நல்லது. பொதுத்தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லது.இவருக்கு செப்டம்பர் வரை, நேரம் நன்றாக உள்ளது. தமிழகம் முழு வதும், சுற்றுப்பயணம் செய்து, தன் ஆதரவை பெருக்கிக் கொள்ள வேண்டும். செப்டம்பர் முதல், எதிராளிக்கும் பலம் அதிகமாகும் என்பதால், துரிதமாக செயல்பட வேண்டும்.

தமிழிசை: தற்போது நடக்கின்ற தசாபுத்திகள் சாதகமாக இல்லாததால், தகுந்த வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty Re: தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by M.Jagadeesan Sun Apr 16, 2017 12:06 pm

தினகரன் எல்லாம் ஒரு தலைவனா ?

அவனுடைய எதிர்காலம் எப்படியிருந்தால் நமக்கென்ன !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty Re: தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by krishnaamma Sun Apr 16, 2017 5:05 pm

T.N.Balasubramanian wrote:தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?
பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

தமிழ் புத்தாண்டு, கிருஷ்ணபட்சம், திருதியை திதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. இந்த ஆண்டில், மழை குறைவாக பொழியும். எனினும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு மூலம் பெரும் உதவிகள் கிடைக்கும்;
காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப்படும். மாற்று பயிர் திட்டம் மூலம், விவசாய பாதிப்பு சற்று குறையும். வாகனம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், காகிதப் பொருட்கள் விலை கூடும்; பண மதிப்பு உயரும். அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, மக்கள் ஒற்றுமையால், அரசியல் தலைவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.
அரசியல் தலைவர்களில், பெரும்பாலா னோருக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுவ தால், குட்டையை குழப்பி, மீன் பிடிக்கும் வகையில், அரசியல் நடைபெறும்.அரசியல் தலைவர்களின் புத்தாண்டு பலன் விபரம்:

ஜோதிடர் சிவ அண்ணாமலை தேசிகன் - விழுப்புரம்:

பிரதமர் நரேந்திர மோடி: சந்திர திசை, 2024 வரை நடைபெறுவதால், அவரே தொடர்ந்து பிரதமராக வாய்ப்புண்டு. ராகு, கேது, சனி கிரகம் சாதகமற்ற நிலையில் செயல்படுவ தால், நவ., 28 வரை, பயணத்தில் எச்சரிக்கை தேவை.

ஸ்டாலின்: குரு திசையில், புதன் புத்தி நடைபெறுவதால், பாதக பலனை அளிக்கும். அதை சரி செய்ய, அனைவரையும் அரவணைத்து செல்வது நலம்.

விஜயகாந்த்: புதன் திசையில், செவ்வாய் புத்தி நடைபெறுவதால், உடல் ரீதியாக, அதிக பாதிப்பை சந்திப்பார். கூட்டணி கட்சிகள் அரவணைப்பில், கட்சியை ஓரளவு காப்பாற்ற முடியும்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: இவரும் தன் உடல்நிலையில், கவனம் கொள்வது நலம். ஜூலை, 16 முதல், அக்., 4 வரை, குரு எதிரிக்கு சாதகமாக உள்ளதால், எச்சரிக்கை தேவை.

முதல்வர் பழனிசாமி: இவரும் பன்னீர் செல்வத்தை போல், பதவி இழக்க நேரிடும். அ.தி.மு.க., பல துண்டுகளாக சிதறும் நிலை ஏற்படும். இவ்வாறு ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். -

நமது நிருபர் -தினமலர்

ரமணியன்

ம்ம் ... முன்பு ஒருவர், "யாகவா முனிவர்' என்பவர் இருந்தார், ஒரு டிவி நிகழ்ச்சி இல் 1996 இல் சொன்னார், " ஜெயலலிதாவிற்குப் பின் அந்த கட்சி அழியும் " என்று.அப்போது எல்லோரும் அவரை திட்டினார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி?  பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Empty Re: தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum