ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

2 posters

Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Apr 09, 2017 7:38 am


இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் NWJ03bQcTmO7atDkXab8+Tamil_News_large_1747897_318_219
-
பங்குனி உத்திர நாளான இன்று,
இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி முருகப்பெருமானை
வழிபட்டால், எல்லா வளமும் பெறலாம்.
-
* குன்று தோறும் குடிகொண்ட முருகனே!
சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே!
வடிவேலனே!
கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த
கார்த்திகேயனே!
அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே!
உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
-
* ஆறுபடை வீட்டில் அமர்ந்துஇருக்கும் அண்ணலே!
திருத்தணி யில் வாழும் தணிகாசலனே!
பழநி தண்டாயுதபாணியே!
தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே!
சிக்கல் சிங்கார வேலவனே!
மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே!
உன் சன்னிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம்.
நீயே அருள்புரிய வேண்டும்.
-
------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Apr 09, 2017 7:41 am


இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் VNaovDJYRkmLKHTsL3j3+Tamil_News_large_1747897_318_219
-

பங்குனி உத்திரம் கொண்டாடுவது ஏன்

குழந்தைகளுக்குச் சோறுாட்டக் கூட சந்திரனைத் தான்
தாய்மார்கள் துணைக்கு அழைப்பர். அந்த சந்திரன்,
பவுர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி
தருவான். ஆனால், பங்குனி மாத பவுர்ணமியன்று,
மீனராசியில் பூமியிருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன்
சேர்ந்து ஏழாம் இடமான கன்னியில் நின்று
முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவார்.

இத்தகைய களங்கம் இல்லாத ஒளி உடலுக்கும் மனதிற்கும்
சுகத்தையும், நிம்மதியையும் தரும். பல நற்பலன்களைக்
கொடுக்கும். இதன் காரணமாகத்தான், சாஸ்தா கோயில்களில்
விடிய விடிய பக்தர்கள் வெட்டவெளியில் காத்திருந்து
தரிசனம் செய்வார்கள்.

சந்திரன் இந்த நாளில் மட்டும் ஏன் களங்கமற்று ஒளிர்கிறான்
என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் தான் நிகழ்ந்தது.
அது மட்டுமின்றி சந்திரன் 27 மனைவியரை இந்த நாளில்
அடைந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் களங்கமற்று
ஒளிர்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
-
---------------------------------


உலகைச் சுற்றிய மர்மம்:

ஒரு கனிக்காக விநாயகரும், முருகனும் சிவன் வைத்த
போட்டியில் கலந்து கொண்டதாக
பழநி தலபுராணம் கூறுகிறது. இதில் யாருக்கு வெற்றி,
யாருக்குத் தோல்வி என்பது கதை சுவைக்காக எழுதப்பட்டது
மட்டுமே.

இதற்குள் பெரும் ஆன்மிக மர்மம் புதைந்து கிடக்கிறது.
எந்தப் பொருளையும் முயன்று பெற்றால் தான் அதன்
அருமையை மக்கள் உணர முடியும் என்பது சிவன் நமக்குச்
சொன்ன பாடம். அதுமட்டுமல்ல, அம்மையப்பனாகிய
ஆண்டவன் நம் கண்ணுக்குத் தெரியாத எங்கோ ஒரு இடத்தில்,
அண்டங்களுக்கு அப்பால் இருப்பதாகக் கருதப்பட்டாலும்
உலகம் யாவும் அவனுக்குள் அடக்கம் என்பதை இறைவனைச்
சுற்றி வருவதன் மூலம் கணபதி காட்டுகிறார்.

பார்க்கும் இடம்தோறும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான்
என்பதை முருகப்பெருமான் உலகை வலம் வந்தது மூலம் ந
மக்கு எடுத்துரைக்கிறார்.
-
-----------------------------------------


Last edited by ayyasamy ram on Sun Apr 09, 2017 7:49 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Apr 09, 2017 7:47 am


* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே!
தேவசேனையின் அதிபதியே!
தெய்வானை மணவாளனே!
அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே!
ஆறுமுகனே!
பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே!
திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே!
குழந்தை தெய்வமே!
எங்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம்,
செல்வ வளத்தையும்
தந்தருள்வாயாக.

-
-----
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை

-
பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து
அவதரித்தாள்.
அதேநாளில், மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்தாள்.
-
சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் தான்
நிகழ்ந்தது.
-
ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன்,
பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத் துணைவியராக
ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்தததும்
இந்த நாளில் தான்.
-
முருகப்பெருமான் துணைவியான தெய்வானை இந்திரனுக்கு
வளர்ப்பு மகளான நாள் இன்று தான்.
இதே நாளில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம்
நிகழ்ந்தது.
-
பிரம்மா தன் மனைவி சரஸ்வதி நாக்கில் வைத்துக் கொள்ளும்
படியான வரத்தை இந்த நாளில் பெற்றார்.
-
தன் மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன்,
மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான்.
இதன் காரணமாக, இந்த நாளை 'தம்பதியர் தினம்' என்று கூட
சொல்லலாம்.
-
இந்த நாளில் தான் சிவனுக்கும் திருமாலின் அவதாரமான
மோகினிக்கும் சாஸ்தா அவதரித்தார்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Apr 09, 2017 7:47 am


சம்பந்தரும் பங்குனி உத்திரமும்

-
சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார்.
இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால்
அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க
எண்ணியிருந்தார்.

ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை,
பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச்
செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார்.

இந்த சம்பவம் அறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.
அப்போது சிவனுக்கு திருமண உற்ஸவம் நடந்து கொண்டிருந்தது.
சாம்பல் கலசத்தை கோயில்முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர்.

அப்போது, அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின்
திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில்
பாடல் ஒன்று அமைந்தது.

“பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள்,
ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய்,” என்ற வரிகள்
அதில் அமைந்தன. இதுபோல், கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும்
பலவிழாக்கள் இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டன.
இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Apr 09, 2017 7:48 am



பொதினிக்குப் போவோமா?

-
முருகப்பெருமானைத் தரிசிக்க 'பொதினி' என்னும் நகருக்கு
அநேகமாக எல்லா பக்தர்களும் சென்று வந்திருப்பார்கள்.
இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்பவர்கள்
இதைத் தொடர்ந்து வாசிக்கலாம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவர் பேகன். இவர் கொங்குநாட்டில்
அரசராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், பழத்திற்காக
கோபித்து குன்றின் மேல் நின்ற முருகப்பெருமான் அருளும்
பழநி திருத்தலத்திற்கு பொதினி என்றே பெயர் இருந்தது.

இதன்பிறகு, ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
ஆவி என்னும் வேளிர் தலைவன் ஆண்ட பகுதியில் இந்த ஊர்
இருந்ததால் ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டதாக
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இப்போதும் பழநி மலை அடிவாரத்திலுள்ள கோயிலை
'திருவாவினன்குடி' கோயில் என்றே கூறுகின்றனர்.

-
--------------------------------------

ஆணவத்தை அழிக்கும் தலம்

-
மனிதனுக்கு எவ்வளவு பெயரும் புகழும் பணமும் இருந்தாலும்,
ஆணவம் மட்டும் அவனோடு ஒட்டக் கூடாது. அந்த ஆணவத்தை
அழிக்கும் தலமாக பழநி முருகன்கோயில் விளங்குகிறது.

மகாலட்சுமி தன்னிடமுள்ள செல்வாக்கின் காரணமாக,
ஆணவம் அடைந்தாள்.
அவளை மகாவிஷ்ணு புறக்கணித்தார்.
இதுபோல, பூமாதேவியும் ஒரு சந்தர்ப்பத்தில் விஷ்ணுவால்
கைவிடப்பட்டாள்.

விஸ்வாமித்திர முனிவரின் படையை காமதேனு பசு வென்றது.
அதன் காரணமாக அகங்காரம் கொண்டது. தன்னால் தான் உலக
உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என சூரியபகவான் கர்வம்
கொண்டார்.

இறைவனைப் புறக்கணித்து நடந்த தட்சயாகத்தில் அக்னிதேவன்
கலந்து கொண்டான். இதன் காரணமாக அவன் ஒளியிழந்தான்.
இவர்கள் அனைவரும் தங்கள் ஆணவம் நீங்க பழநி முருகனை
வழிபட்டனர். இதனால் அவர்களது பெயர்களைக குறிப்பிடும்
வகையில் திரு(மகாலட்சுமி) ஆ(காமதேனு), இனன் (சூரியன்),
கு(பூமாதேவி), டி(அக்னி) இவ்வூர் 'திருஆவினன்குடி' என பெயர்
பெற்றது.
-
--------------------------------------------

* பார்வதி பெற்ற பாலகனே!
கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே!
செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு
கனி கொடுத்தவனே!
மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே!
சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த
தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி
வெற்றி தருவாயாக.
-
----------

* வேதம் போற்றும் வித்தகனே! குகனே!
வள்ளி மணவாளனே! பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே!
காங்கேயனே! கண் கண்டதெய்வமே! கலியுக வரதனே!
திருப்புகழ் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா
வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
-
------------------------------------------


நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:42 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம் Empty Re: இன்பமாய் வாழ வரம் தா! இன்று பங்குனி உத்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum