ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by Guest Sun Mar 26, 2017 11:19 pm

காதல் சோடிகளின் கதை சுருக்கமாக சில வரிகள் மட்டும்.
வில்லியம் ஷேக்ஸ்பியரினால் தரப்பட்ட,முன்னர் இத்தாலியில் நடந்த கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ரோமியோ- ஜூலியத்(Romeo and Juliet)  நாடகத்தில் நீண்ட நாட்களாக பிரிந்து பிளவுபட்டிருந்த இரண்டு குடும்பங்களை ஒன்று சேர்க்க நடத்தப்பட்ட நாடகம், இறுதியில் ரோமியோ-ஜூலியத் காதலர்களை தற்கொலையில் விழ வைத்தது.

ஜூலியட்டைக் கண்ட ரோமியோ, மாடியில் காத்திருந்து முதல் காதலை கண்ணால் சொன்னான். காதல் மலர்ந்தது,வளர்ந்தது. நன்றாக மலர்ந்த காதல் அவர்களின் அவசர புத்தியால் தற்கொலைக்கு போயிற்று.நாடகம் போட்டவன் உண்மையை சொல்ல வரு முன்னரே வாழ்க்கை நாடகம் முடிந்தது.

மார்க் குவீன் அந்தோணி- கிளியோபாத்ரா,ஏழாம் கிளியோபாட்ரா,(Anthony and Cleopadra).

கிளியோபத்ராவின் வாழ்க்கை இரண்டு பகுதியாக சென்றது. முதல் பகுதி ஜூலியஸ் சீசருடன்  தொடங்கி சிசேரியன் அல்லது லிட்டில் சீசர் என அழைக்கப்பட்ட குழந்தைக்கு தாயாகி வாழ்ந்த நிலையில் சீசர் கொலைசெய்யப்பட்ட பின், இரண்டாவது வாழ்க்கை தொடங்குகிறது.ஆனாலும் சீசர் கிளியோபத்ராவின் முதல் மனைவி  அல்ல. கிளியோபத்ரா ஏற்கனவே தனது தம்பிகளான இரண்டு தொலமியையும் (Ptolemy ) மணம் செய்திருந்தார். சீசர் எகிப்துக்கு வந்த போது தொலமியின் மீதான வெறுப்பினால் கிளியோபத்ராவை இராணி ஆக்கினார்.கிளியோபத்ராவிற்கு மொத்தமாக நான்கு கணவன்மார்கள் இருந்தனர்.

இரண்டாவது பகுதி,அந்தோனி-கிளியோபத்ரா  காதல் வாழ்க்கையாகும்.
கிளியோபாத்ராவை மார்க் அந்தோணி (சீசரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதியாக இருந்தவன்) காதலித்து பின் அந்தக் காதல் பரிதாபமாக தற்கொலையில் முடிந்தது.கிளியோபாத்ராவை அரசிக்கு அரசியாக அந்தோணி அறிவித்து இராணி ஆக்கினாலும்,அந்தோணிக்கு எதிராக சீசரின் உறவினன் போர் தொடுக்கவே, காலன் வந்து விட்டான்.கிளியாபத்ரா இறந்து விட்டதாக பொய்யான செய்தியை பரப்பியதும், போர்,வஞ்சகம் என்று சூழவே தன்னைத் தானே வாளால் குத்தி தற்கொலை செய்து கொண்டான்.அதை தொடர்ந்து கிளியோபாத்ராவும் விசத்தினால் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

ரோமியோ-ஜூலியத் காதல் அவசர முடிவால் தற்கொலையில் முடிய,அவர்கள் இறப்பின் பின் இரண்டு பெரும் குடும்பங்கள் ஒன்றிணைந்தது.ஆனால் கிளியோபாத்ரா-அந்தோணி காதலோ இரண்டு அரசுகளின் பகையுடன் சோகமாக முடிந்தது.

நெப்போலியன் - ஜோசபின் (Napolion Bonaparte and Josephine) காதலும் கண்டவுடன் தான் ஒரு விருந்தில் ஏற்பட்டது. திருமணமான ஜோசபின் காதல் அவளின் திருமண முறிவின் பின்னரே  கை கூடியது. ஆனாலும் இந்தக் காதல் சிறப்பாக இருக்கவில்லை.நெப்போலியன் போனபாட்டின் வாழ்வில் பல காதலிகள் குறுக்கே வந்தனர். இன்றும் நெப்போலியன், ஜோசப்பினுக்கும் மற்ற காதலிகளுக்கும் எழுதிய காதல் கடிதங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன.

லைலா - மஜ்னு (Laila and Majnu) அராபிய காதலர்கள்.இவர்கள் காதல் நிறைவேறாமலேயே முடிந்தது.இப்படியான திருமணமாகாது முடியும் காதலை Virgin love என்கிறார்கள்.பணக்கார பெண் லைலா காதலுக்கு கண் இல்லை என்பதற்கேற்ப ஒரு ஏழைக் கவிஞனை காதலிக்கிறாள். ஆனால் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மஜ்னு ஒரு பணக்காரனை மணந்தது அறிந்த இந்தக் காதலின் நாயகன்,லைலா நோய்வாய்ப்பட்டு இறந்ததால், லைலாவின் கல்லறையிலேயே காதல் பைத்தியமாக பரிதாபமாக இறந்தான்.

சலிம் - அனார்கலி(Salim and Anarkali), அனைவரும் தெரிந்த காதலர்கள். அக்பரின் மகனான சலிம் அரசகுமாரனும் நாட்டிய ராணி அனார்கலியும் காதலித்து பின் அவர்களின் காதல் கண்ணீர் கதையாக மாறியது.அக்பரால் அனார்கலி என்று அழைக்கப்பட்ட, நதீரா என்ற இந்த அழகியை ஒரு நடன நிகழ்ச்சியில் கண்ட சலீம் காதல் வசப்பட்டான். சலீமை காப்பாற்ற அக்பரின் தண்டனையை ஏற்று,ஒரு நாள் இரவு சலீமுடன் தங்க அனுமதி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன், உயிருடன் கல்லறையில் சாவை தழுவிக் கொள்ள சம்மதித்தாள் அனார்கலி.சலீமுடனான காதலுக்காக தனது உயிரையே கொடுக்க முன் வந்தாள் அனார்கலி.

ஆனாலும் பின்னர் வந்த செய்திகளில்,சுரங்க வழியாக நாட்டை விட்டு வெளியேற அக்பர் சம்மதித்து வெளியேற்றியதாகவும்,இல்லை அது தவறு, கல்லறையிலேயே உயிரை துறந்தாள் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

ஷாஜகான் - அர்ஜுமண்ட் பானு, (Shah Jahan and Mumtaz Mahal) காதலுக்காக உருவானது தாஜ்மகால்.தனது மூன்றாவது மனைவிக்காக ஆக்ரா நகரில் யமுனா நதிக் கரை ஓரம் உருவான இந்த தாஜ்மகால், காதலின் சின்னம்,உலகின் அதிசயம் என்கிறார்கள்.மனைவி மேல் கொண்ட காதலுக்காக மாளிகையை கட்டிய ஷாஜகான் இறுதியில் தன் மகனால் சிறை வைக்கப்பட்டு பரிதாபமாக இறந்தான். ஆனாலும் தாஜ்மஹால், ஷாஜகான் மனைவி மேல் கொண்ட காதலுக்காக கட்டியதா இல்லை மனைவியின் வேண்டுகோளுக்காக கட்டப்பட்டதா தெரியவில்லை.

மும்தாஸ் தனது பதின்நான்காவது குழந்தையை பெற்ற போது, இறக்கும் தருணத்தில் இருந்த அவள் கேட்ட நான்கு கோரிக்கைகளில் ஒன்றான நினைவு சின்னமே இந்த மாளிகை என்பதை விட, வேறொரு செய்தியும் இருக்கவே செய்கிறது. பலம் வாய்ந்த ஷாஜகானின் முகலாய அரசு, ஜெய்சிங் என்ற இந்து மன்னனிடமிருந்து பெற்ற மாளிகையை, பேர்சிய கட்டிட கலைஞர்களை வைத்து மறுசீரமைக்கப்பட்டதே இந்த தாஜ்மஹால் என்ற மாளிகை என்ற வாதம் சரித்திர ஆய்வாளர்களிடமும் இன்றும் உள்ளது என்பதையும் நாம் மறக்க முடியாது.

இது பற்றி பி.என்.ஒக் தனது ஆராய்ச்சி நூலில் தாஜ்மகால் கி.பி.1155 ளில் கட்டப்பட்ட இந்துக் கோயிலின் மறு வடிவமே என்கிறார்.இதை ஏற்றுக் கொண்ட Dr.V.S.கொட்போல், ராஜா மான்ஸிங்கிற்கு சொந்தமாக இருந்த மாளிகையை அவரின் பேரனான ராஜ்சிங்க் கிடமிருந்து கைப்பற்றியே தாஜ்மகால் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்கிறார்.

மாடம் மேரியும் - பியரே குயுரியும்(Marie Curi and Pierre Curie) காதலித்து மணம் செய்து திருமண வாழ்க்கை நடத்தி சாதனை செய்த காதல் ஜோடியாவர்.இவர்களின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம்.போலந்து நாட்டில் பிறந்த மரியா குளோடோவ்ஸ்கா
என்ற மேரி, பியரே குயுரியை திருமணம் செய்து பௌதீக துறையில் இருவரும் இணைந்து செயலாற்றிய ஜோடிகளாவர்.இவர்களின் காதல் வெற்றி.

பாரிஸ் - ஹெலேனா(Paris and Helene) ஜோடி(iliyad by Homer),  பாரிஸ், கிரேக்க அழகி இராணி ஹெலேனாவை கடத்தி சென்று விட்டார். ஹெலேனாவை மீட்டெடுக்க போர் தொடுத்தான் அரசன். டொர்ஜான்(Trojan war) போர் எனப்படும் போரில் பாரிஸ் கொலை செய்யப்படவே இராணி ஹெலேனா கட்டாயத்தின் பேரில் அரசனுடன் நாடு திரும்பினாள். பாரிஸ் கொல்லப்பட்டது தெரிந்தும் ஒரு நாள் வருவான் என காத்திருந்தாள், காத்திருந்தாள், காத்திருந்தாள்.......................

ஓடிசாஸ் - பெனிலோப்(Odysseus and Penelope), மேலே சொன்ன ரோஜான் யுத்தத்தில் பெரும் பங்காற்றிய வீரன் ஓடிசஸ்(ஹோமரின் ஓடிசி காவியம்) மனைவி பெனிலோப், திருமணத்தின் பின் கணவனுக்கு துரோகம் இழைக்காது பத்தினியாக வாழ வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவள்,இருபது வருடங்களாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்.இந்த திரோஜன் யுத்தத்தில் தான்,மிகப் பெரிய போர் தந்திரமாக திரோஜன் குதிரையை களம் இறக்கி வெற்றி கொண்டார்கள்.

ஒர்பயுஸ் - யுரிடிஸ்(Orpheus and Eurydice) கிரேக்க பாடகனும் அவன் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை, சாவித்திரி சத்தியவான் கதையை நினைவூட்டுகிறது. சத்தியவான் உயிருக்காக, சாவித்திரி இயமனுடன் போராடியதாக சொல்வது போல்,பாம்பு தீண்டி மரணமடைந்த தன் மனைவி யுரிடிஸ் உயிரை திரும்பிப் பெற, ஒபயூஸ் பாதாள உலகம் வரை சென்று, பாதாள உலகக் கடவுள் புளூட்டோ-அவர் மனைவி பேர்சபோன் முன்னால் பாடி,தன் பாட்டால் அங்குள்ளவர்களைக் கனிய வைத்தான்.அந்த பாட்டால் கவரப்பட்டு, மீண்டும் உலகுக்கு செல்லும் வரை பின்னால் வரும் மனைவியை திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற புளூட்டோவின் நிபந்தனையுடன், உயிர் கொடுக்கப்பட்ட போது,உலகை வந்தடையும் போது சந்தேகம் கொண்டு பார்த்ததனால், அவளை மீண்டும் அடைய முடியாமல் போய் விட்டது.

அபர்லாத் - ஹேலோய்ஸ் (Aberlard and Heloise) பிரான்ஸ் நாட்டில் மத போதகரான அபர்லார்ட் மதக்கல்வி போதிக்கச் சென்று,தனது மாணவியான ஹேலோய்ஸ் ஐ காதலித்தது,அவளின் வளர்த்த மாமனுக்கு தெரிய வரவே,  காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு துரத்தப்பட்டார்.காதலி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட கட்டாயமாக பெண் துறவியாக்கப்பட்டார் (nun).காதலர்கள் பிரிக்கப்பட்டாலும் உணர்வு மறையவில்லை.அவர்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் இன்றும் உன்னதமாக பேசப்படுகிறது.இருவரும் கடைசி வரை துறவியாகவும்,பெண் துறவியாகவும்(Monk and Nun) வாழ்ந்தார்கள்.அவர்களின் காதல் உணர்வு மட்டும் மறையவே இல்லை.

காதரின் -கிரிகோரி (Catherine the great and Grigory Potemkin) ரூசிய சார் மன்னனின் மனைவியான காதரின், தனக்கு காவலாக இருந்த போர் வீரன் மேல் காதல் கொண்டு,அவன் துணையுடன் புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்ததும்,தன் கணவனான சார் மன்னனை விஷம் வைத்து கொலை செய்ய வைத்ததும், காதலுக்காகவா இல்லை ஆட்சி அதிகாரத்திற்காகவா என்ற கேள்வி இருந்தாலும்,கிறிகோரிக்கு பெரிய பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவன் இறந்த போது அவன் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலிருந்து அவள் கடைசி வரை மீள முடியவில்லை.

கேட்ரூட் - அலிஸ் (Getrude Stein and Alice Babette Toklas ) இரண்டு பெண்களின் காதல் கதை இது.அமெரிக்காவில் பிறந்து தன் கல்வியை தொடர முடியாமல் போகவே, சகோதரனுடன் பிரான்ஸ் ற்கு வந்த பிரபலமான எழுத்தாளரும், பிக்காசோவின் நண்பருமான ஜேர்மன்-யூத இன பெண்ணான கேட்ரூட்,தனது உதவியாளராக, டைபிஸ்ட்டாக,சமையல்காரியாக இருந்த அமெரிக்க யூத இன அலிஸ்சை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார்.  

இவர்கள் காதல், பாரிஸ்ஸில் மலர்ந்து அமெரிக்காவில் வளர்ந்து மீண்டும் பாரிஸ்ஸில் விருட்சமாகியது. கேற்றூட்டின் நிழலாக வாழ்ந்த அலிஸ் கடைசி வரை ஜோடியாகவே வாழ்ந்தார். ஓரின சேர்க்கையின் (Lesbian) ஜோடியாக உலகை வலம் வந்த இவர்கள் இறுதி வரை பிரியாமல் வாழ்ந்தது அதிசயம் தான்.

பிரின்ஸ் எட்வர்ட் - வோலிஸ் சிம்ஸ்சன்(Prince Edward and Wallis Simpson). பெரிய பிரித்தானியா,வட ஐயர்லாந்தின் அரசராக பத்து மாதங்களே ஆட்சி புரிந்த எட்வாட், இரண்டு முறை திருமணம் புரிந்து விவாகரத்து செய்த, அமெரிக்க பெண்ணான வோலிஸ் சிம்ஸனை காதலித்து மணம் செய்து, முடி துறந்தார். தன் காதலுக்காக முடி துறந்த இவரின் மனைவி வோலிஸ், வேறு சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக இன்றும் பல சர்ச்சைகள்  உள்ளன.

போகொகோண்டாஸ்- சிமித்(Pocahontas and Smith), அமெரிக்க செவ்-இந்திய பெண்ணான போகொகோண்டாசும் அங்கு குடியேற வந்த சிமித் என்ற ஆங்கிலேயனுக்கும் இடையில் மலர்ந்த நட்பு அதிக பலனைத் தரவில்லை. போகொகோண்டாஸ் இரண்டு முறை சிமித்தின் உயிரைக் காப்பாற்றினாள்.தொடர்ந்து வந்த ஆங்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டதும், சிமித் இறந்து விட்டான் என்று பொய் உரைக்கப்பட்டதும் அதனால் அவர்கள் நட்பு காணாமல் போக, பின்னர் அவள் ரெபேக்க என்ற பெயருடன் மதம் மாறி ஜோன் ரோல்ப் என்பவனை மணந்து கொண்டாள். பின்னர் அவள் பிரிட்டனுக்கு சென்ற போது இறந்ததாக கூறப்பட்ட சிமித்தை கண்டு அதிர்ச்சியுற்று கல்ங்கினாள்.அதன் முடிவு ஆறாத் துயருடன் வாழ்வை முடிக்க நேர்ந்தது.

Dr,சிவாஸ்கோ-லாரா (Dr.Zhivago and Lara), நோபல் பரிசு பெற்ற இந்த நாவலில் வரும் சிவாஸ்கோ வளர்ப்பு சகோதரியை மணம் முடிக்கிறார். லாரா தன் தாயின் காதலனுடனும் தொடர்பு கொள்கிறாள்..இதை அறிந்த தாய் அமெலியா, தற்கொலை முயற்சிக்கு சென்று காப்பாற்றப்படுகிறாள். இந்த காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டு வர,லாரா தன் பள்ளித் தோழன் அண்டிபோவை மணம் முடிக்கிறாள்.பின் சிவாஸ்கோவும் லாராவும் மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிய வரும் போது, காதல் வசப்படுகிறார்கள்.அப்போது லாராவின் கணவன் அண்டிபோவ் திரும்புகிறான். சிவாஸ்கோவுடன் பேசியும்,பிரச்சனை முடிவுக்கு வராதென்ற நிலையில் அன்று இரவே லாராவின் கணவன் அண்டிபோவ் தற்கொலை செய்கிறான். லாராவின் தாயின் காதலன் மீண்டும் குறுக்கிடுகிறான்.ஐயையோ தலையை சுற்றுகிறது. வேண்டுமானால் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பல காதல்கள் தோல்வியில் முடிந்தது,சில வெற்றியில் முடிந்தது.

இதை விட துஷ்யந்தான் சகுந்தலையும்,நளன் தமயந்தியும்,கோவலன் மாதவியும், மணிமேகலை மீது ஒருதலைக் காதல் கொண்ட உதயகுமாரனும் நாம் அறிந்த இங்குள்ள காதலர் கதைகளாகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by krishnaamma Mon Mar 27, 2017 12:38 am

நாளை வந்து படிக்கிறேன் மூர்த்தி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by krishnaamma Mon Mar 27, 2017 11:02 am

//கிளியோபத்ராவின் வாழ்க்கை இரண்டு பகுதியாக சென்றது. முதல் பகுதி ஜூலியஸ் சீசருடன் தொடங்கி சிசேரியன் அல்லது லிட்டில் சீசர் என அழைக்கப்பட்ட குழந்தைக்கு தாயாகி வாழ்ந்த நிலையில் சீசர் கொலைசெய்யப்பட்ட பின், இரண்டாவது வாழ்க்கை தொடங்குகிறது.ஆனாலும் சீசர் கிளியோபத்ராவின் முதல் மனைவி அல்ல. கிளியோபத்ரா ஏற்கனவே தனது தம்பிகளான இரண்டு தொலமியையும் (Ptolemy ) மணம் செய்திருந்தார். சீசர் எகிப்துக்கு வந்த போது தொலமியின் மீதான வெறுப்பினால் கிளியோபத்ராவை இராணி ஆக்கினார்.கிளியோபத்ராவிற்கு மொத்தமாக நான்கு கணவன்மார்கள் இருந்தனர்.//

மூர்த்தி , அந்த இடத்தில், முதல்மனைவி என்பதற்கு பதில் முதல்கணவர் என்று இருக்கவேண்டும் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by krishnaamma Mon Mar 27, 2017 11:07 am

லைலா - மஜ்னு (Laila and Majnu) அராபிய காதலர்கள்.இவர்கள் காதல் நிறைவேறாமலேயே முடிந்தது.இப்படியான திருமணமாகாது முடியும் காதலை Virgin love என்கிறார்கள்.பணக்கார பெண் லைலா காதலுக்கு கண் இல்லை என்பதற்கேற்ப ஒரு ஏழைக் கவிஞனை காதலிக்கிறாள். ஆனால் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மஜ்னு ஒரு பணக்காரனை மணந்தது அறிந்த இந்தக் காதலின் நாயகன்,லைலா நோய்வாய்ப்பட்டு இறந்ததால், லைலாவின் கல்லறையிலேயே காதல் பைத்தியமாக பரிதாபமாக இறந்தான்.

இதிலும் பிழை இருக்கு பாருங்கள் மூர்த்தி, படித்துப் பார்த்துவிட்டு பிறகு பதிவு செய்யுங்கள் !..............மணம் முடித்தது லைலாதானே?...........ஆனால் நான் சிவப்பில் குறிப்பிட்டுள்ளதை பாருங்கள், மஜ்னு என்று தவறாக போட்டுள்ளது..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by krishnaamma Mon Mar 27, 2017 11:22 am

ம்...நிறைய தெரியாத கதைகளை பகிர்ந்துளீர்கள்.............. வரலாற்றுக் காதல் ஜோடிகள்  103459460
.
.
.துஷ்யந்தன் சகுந்தலையும்,நளன் தமயந்தியும்,கோவலன் மாதவியும், மணிமேகலை மீது ஒருதலைக் காதல் கொண்ட உதயகுமாரனும் நாம் அறிந்த இங்குள்ள காதலர் கதைகளாகும்.

அம்பிகாபதி அமராவதியை விட்டு விட்டீர்களே மூர்த்தி புன்னகை.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by Guest Mon Mar 27, 2017 1:34 pm

ஆம்,நினைவூட்டியதற்கு நன்றி. தவறுகளை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. இனிமேல் தவறுகள் வராமல் இருக்க பார்த்துக் கொள்கிறேன்.படித்துப் பார்த்துப் போடும்படி,அய்யாவும் சொன்னார். தமிழ் பாவிக்கும் சந்தர்ப்பம் இல்லாததால் இப்படி நடந்து விட்ட்து.

அம்பிகாபதி-அமராவதி கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்து தோல்வியில் முடிந்த காதல். இந்தக் காதல் கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே பெரு விரிசலை ஏற்படுத்தியது.
avatar
Guest
Guest


Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by krishnaamma Tue Mar 28, 2017 12:29 am

மூர்த்தி wrote:ஆம்,நினைவூட்டியதற்கு நன்றி. தவறுகளை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. இனிமேல் தவறுகள் வராமல் இருக்க பார்த்துக் கொள்கிறேன்.படித்துப் பார்த்துப் போடும்படி,அய்யாவும் சொன்னார். தமிழ் பாவிக்கும் சந்தர்ப்பம் இல்லாததால் இப்படி நடந்து விட்ட்து.

அம்பிகாபதி-அமராவதி கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்து தோல்வியில் முடிந்த காதல். இந்தக் காதல் கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே பெரு விரிசலை ஏற்படுத்தியது.
மேற்கோள் செய்த பதிவு: 1236955

சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி மூர்த்தி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றுக் காதல் ஜோடிகள்  Empty Re: வரலாற்றுக் காதல் ஜோடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum