Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
Page 1 of 1
கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
-
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து
கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. கோவா அரசியலில்
திடீர் திருப்பமாக ஆளுநரை சந்தித்து பாஜக ஆட்சியமைக்க
உரிமை கோரியது.
அதை ஏற்றுக் கொண்டு மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக
அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா ஞாயிற்றுக்கிழமை
நியமித்தார்.
மேலும், 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு
ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள
40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆளும் பாஜக 13 இடங்களில் வென்றது. பாஜகவின் முன்னாள்
கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3),
கோவா ஃபார்வர்டு கட்சி (3) ஆகியவை 6 தொகுதிகளில் வெற்றி
பெற்றன.
சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். தேசியவாத காங்கிரஸ்
கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. 3 சுயேச்சைகளில் ஒருவர்
பாஜக ஆதரவாளர் ஆவார்.
கோவா தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி
பெற்றபோதும், மாநிலத்தில் ஆட்சியமைக்கத் தேவையான
21 இடங்கள் அக்கட்சியிடம் இல்லை. எனினும், பிற கட்சிகளின்
ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது.
இந்நிலையில், 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி
கோமந்தக் கட்சி (எம்ஜிபி), முன்னாள் முதல்வர்
மனோகர் பாரிக்கரை முதல்வர் பதவிக்கு பாஜக முன்மொழிந்தால்
அக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக
அறிவித்தது.
Re: கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
இதேபோல், கோவா ஃபார்வர்டு கட்சியும் பாஜகவுடன் திடீர்
பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில், பாஜக, காங்கிரஸ் ஆகிய
2 கட்சிகளும் தங்களது கட்சியுடன் கூட்டணியமைப்பது தொடர்பாக
மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சி
தெரிவித்தது.
எனினும், பாஜக தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை
அக்கட்சி அதிகாரப்பூர்வமானபேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை
அக்கட்சி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம், பனாஜியில் உள்ள
பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், கோவா சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக
மனோகர் பாரிக்கரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா
நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருடன் சந்திப்பு: இந்நிலையில், பனாஜியில் மனோகர் பாரிக்கர்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் எம்எல்ஏக்களுடன்
ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து ஆளுநர் மிருதுளா சின்ஹாவை மனோகர் பாரிக்கர்
தலைமையில் பாஜக தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர்.
அப்போது கோவாவில் பாஜக எம்எல்ஏக்கள் 13 பேருடன் சேர்த்து
22 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும்,
எனவே மாநிலத்தில் ஆட்சியமைக்க தங்கள் கட்சிக்கு அழைப்பு
விடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். ம
காராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3), கோவா
ஃபார்வர்டு கட்சி (3), தேசியவாத காங்கிரஸ் (1) சுயேச்சைகள் (2)
ஆகியோரது ஆதரவு கடிதத்தையும் அளித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறார் பாரிக்கர்:
கோவா முதல்வராக பதவியேற்க வசதியாக பாதுகாப்புத் துறை
அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் விரைவில் ராஜிநாமா
செய்யவுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்தபோது, கோவா முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு
பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பாரிக்கர் ராஜிநாமா செய்வார்
என்றார்.
Re: கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
கோவா ஃபார்வர்டு கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய்
செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவாவில் நிலையான ஆட்சி
அமைய வேண்டும் என்பதற்காகவே பாஜகவுக்கு ஆதரவு
அளித்துள்ளோம்; நிலையற்ற தன்மையால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு
பாதிப்பு ஏற்படுவதை எங்கள் கட்சி விரும்பவில்லை' என்றார்.
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சித் தலைவர் சுதின் தவாலிகர்
செய்தியாளர்களிடம் பேசுகையில், "மனோகர் பாரிக்கருக்காகவே
பாஜகவிடம் ஆதரவு கடிதத்தை எங்களது கட்சி அளித்துள்ளது;
அவர் இல்லையெனில், பாஜக அடுத்து ஆட்சியமைக்க எங்களது
கட்சி ஆதரவு கடிதம் அளித்திருக்காது' என்றார்.
வாழ்க்கை வரலாறு:
61 வயதாகும் மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக இதற்கு
முன்பு 3 முறை பதவி வகித்துள்ளார். முதல்முறையாக கடந்த
2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2002-ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் வரை முதல்வராக இருந்தார்.
2-ஆவது முறையாக கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்
2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் கோவா முதல்வராக
பதவி வகித்தார்.
இதனிடையே, கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத்
தேர்தலில் பாரிக்கர் தலைமையில் போட்டியிட்ட பாஜக கூட்டணி
24 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியமைத்தது.
-
எனினும், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி
பெற்று மத்தியில் ஆட்சியமைக்கவே, பிரதமர் நரேந்திர
மோடியின் அழைப்பை ஏற்று மத்திய அரசியலுக்கு பாரிக்கர்
சென்றார்.
அவருக்கு மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சகம்
அளிக்கப்பட்டது.
-
-
-----------------------------------------
தினமணி
Similar topics
» ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!
» மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று சென்னை வருகை
» கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
» கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
» திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக
» மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று சென்னை வருகை
» கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
» கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
» திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|