ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

5 posters

Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by M.Jagadeesan Sun Jan 29, 2017 3:56 pm

தோழி : என்ன இது ? பகல் நேரத்திலேயே வந்துவிட்டாயே !

தலைவன் : ஆமாம் ! என்னால் என் காதலியைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை ; அவளைப்
பார்க்காமல்  உணவும் செல்லவில்லை ; உறக்கமும் வரவில்லை ! அவளை சீக்கிரம் வரச்சொல் .

தோழி : நீ அவளைத் திருமணம் செய்துகொண்டால் , இப்படித் திருட்டுத்தனமாக வந்து சந்திக்கவேண்டிய அவசியம் வராது அல்லவா ?

தலைவன் : அதெல்லாம் காலாகாலத்தில் நடக்கும் ; நீ போய் அவளை அழைத்து வா !

தோழி : நான் அழைத்து வருகிறேன் ; ஆனால் இந்த இடத்தில் நீங்கள் இருவரும் பேசவேண்டாம் !

தலைவன் : ஏன் ?

தோழி : இங்கு அருகே அவளுடைய தங்கை இருக்கிறாள் ;அவளை அருகில் வைத்துக்கொண்டு யாராவது காதல் மொழிகளைப் பேசுவார்களா ?

தலைவன் : தங்கையா ? யாரது ? இதுவரையில் தனக்குத் தங்கை இருப்பதாக அவள் சொல்லவே இல்லையே ! அவள் எங்கே இருக்கிறாள் ?

தோழி : இதோ இந்தப் புன்னைமரம்தான் அவளுடைய தங்கை ! அதன் நிழலில்தான் நீ நின்று கொண்டிருக்கிறாய் !

தலைவன் : சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தோழி : ஏன் இப்படி சிரிக்கிறாய் ? உனக்கேதும் பைத்தியம் பிடித்துவிட்டதா ?

தலைவன் : பைத்தியம் எனக்கல்ல ; உனக்குத்தான் பிடித்துவிட்டது ; யாராவது மரத்தைப் போய் தங்கை உறவு கொண்டாடுவார்களா ?

தோழி : வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதைக் கேள் !ஒருநாள் நாங்கள் இருவரும் புன்னை விதைகளை வைத்துக்கொண்டு  வெண்மணலில் விளையாடிக்கொண்டு  இருந்தோம் . அப்போது அன்னை திடீரெனக் கூப்பிடவே புன்னை விதைகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து போய்விட்டோம் .பிறகு ஒருநாள் நல்ல மழை பெய்தது . அந்த மழையில் புன்னைவிதை முளைத்து  வெளிவந்தது . அது வளர வளர நாங்கள் அதற்குத் தேனும் பாலும் ஊற்றி வளர்த்தோம் . அன்னையும் புன்னையை  மிகவும்  நேசித்தாள் . நாங்கள் தவறு செய்யும்போது அவள் அடிக்கடி சொல்லுவாள் ;உம்மைவிட புன்னை சிறந்தது  ; அது உங்களுக்குத் தங்கை என்று . அதுமுதல்  புன்னை மரத்தை எங்கள் தங்கையாகவே  எண்ணி  வளர்த்து  வருகிறோம்  .

தலைவன் : அதுசரி  ; யாராவது செடிக்குப் பாலும்  தேனும் ஊற்றுவார்களா  ?

தோழி  : அன்பு மிகுதியானால்  அறிவு வேலை  செய்யாது !

தலைவன் : என்ன உளறுகிறாய் !

தோழி : உளறவில்லை ; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் . முல்லைக்குத் தேர் கொடுத்தானே பாரி ; அது என்ன அறிவுடைய செயலா ? முல்லைக் கொடியைத் தன் தேர்மீது படர விட்டுவிட்டு நடந்தே அரண்மனைக்குச் சென்றான் . அவன் மன்னன் ; அவன் காவலர்களை ஏவி , அந்த முல்லைக் கொடி படர ஒரு பந்தலை அமைத்திருக்கலாம் . ஏன் அவ்வாறு செய்யவில்லை . முல்லைக் கொடி படருவதற்குக் கொழு கொம்பில்லாமல் தவித்தது . அந்தத் துன்பம் மட்டுமே அவன் கண்ணுக்குத் தெரிந்தது . உடனடியாக அதற்கு உதவ விரும்பினான் . நேரம் கடத்த விரும்பவில்லை ; எனவேதான் தன் துன்பத்தையும் பொருட்படுத்தாது தன் தேர்மீது முல்லைக் கொடியைப் படரவிட்டான் . இங்கு பாரியின் உள்ளம்தான் வேலைசெய்ததே தவிர அறிவு வேலை செய்யவில்லை ; இதைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது . சான்றோர்கள் பாரியின் இச்செயலைக் " கொடைமடம் " என்று கூறுவார்கள் .

அதுபோலத்தான் புன்னைமரம் எங்கள் கண்ணுக்குத் தங்கையாகத் தெரிந்ததே தவிர மரமாகத் தெரியவில்லை ; அதனால்தான் நாங்கள் உண்ணும் தேனும் பாலும் ஊற்றி அதை வளர்த்தோம் . இப்போது புரிகிறதா ?

நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதற்கு வேறு நிழல்தரும் இடங்கள் உள்ளன ; அங்கு சென்று நீங்கள் இருவரும் பேசலாம் .

தலைவன் : நல்லது .    


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே .

நற்றிணை : நெய்தல் 172

சிறப்புக் கருத்து ;
===============
தங்கையை வீட்டில் வைத்துக்கொண்டு காதல் மொழிகளைப் பேசக்கூடாது என்ற வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது . ஒரு வீட்டில் வயதுக்கு வந்த அண்ணன் , தங்கை இருந்தால் முதலில் தங்கைக்கே திருமணம் செய்வர் .   பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் செய்வார்கள் .

குறிப்பு ;
=======
மேலே கண்ட தோழி , தலைவன் உரையாடலில் பாரியின் கதை சுவை கருதி சேர்க்கப்பட்டது . செய்யுளில் இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்கவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by T.N.Balasubramanian Sun Jan 29, 2017 7:38 pm

நன்று  அன்பு மலர்
காபி குடித்த சுவை போல் இருக்கிறது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 29, 2017 10:48 pm

அருமை
மிக அருமை
மிக்க நன்றி


[You must be registered and logged in to see this image.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by krishnaamma Mon Jan 30, 2017 12:38 am

அருமையான பகிர்வு ஐயா ! ............... தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by Dr.S.Soundarapandian Sun May 21, 2017 8:30 pm

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834

ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by M.Jagadeesan Sun May 21, 2017 9:08 pm

Dr.S.Soundarapandian wrote:தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834

ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

தங்கள் கேள்வி சரிதான் ! சங்க இலக்கியங்களில் நம்முடைய கற்பனையைக் கலக்கக்கூடாது .
தவறுக்கு வருந்துகிறேன் .இனி கவனமாக இருப்பேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by T.N.Balasubramanian Sun May 21, 2017 9:49 pm

M.Jagadeesan wrote:
Dr.S.Soundarapandian wrote:தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834 தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... 3838410834

ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

தங்கள் கேள்வி சரிதான் ! சங்க இலக்கியங்களில் நம்முடைய கற்பனையைக் கலக்கக்கூடாது .
தவறுக்கு வருந்துகிறேன் .இனி கவனமாக இருப்பேன் .
[You must be registered and logged in to see this link.]

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு ..... Empty Re: தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum