ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னமா !

5 posters

Go down

சின்னமா ! Empty சின்னமா !

Post by M.Jagadeesan Sun Jan 08, 2017 3:00 pm

அது ஓர் அடர்ந்த காடு .  அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் .

வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .

ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .

மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .

சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .

அப்போது திடீரென்று  , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .

சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .

ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .

அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார்  ! முயலை வேட்டையாடிக்  கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .

தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .

மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .

சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .

ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .

" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "

பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .

அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .

இந்தக் காட்சியைக்கண்ட  தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?

சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும்  நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும்  அந்தத் துணிவும் , வீரமும்  எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !  

உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு  மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும்  சின்ன மாக்களை  வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.

" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல்  ஏந்தல் இனிது .

என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சின்னமா ! Empty Re: சின்னமா !

Post by T.N.Balasubramanian Sun Jan 08, 2017 6:29 pm

சின்னமாக்களை வேட்டையாட வேண்டாம் என்கிறீர் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்னமா ! Empty Re: சின்னமா !

Post by krishnaamma Sun Jan 08, 2017 7:11 pm

நல்ல கதை ஐயா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்னமா ! Empty Re: சின்னமா !

Post by ayyasamy ram Fri Jan 13, 2017 6:10 pm

சின்னமா ! 103459460 சின்னமா ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்னமா ! Empty Re: சின்னமா !

Post by சிவனாசான் Sat Jan 14, 2017 6:07 pm

பிடித்து வைத்தால்தான் பிள்ளையாரு. வீசி எரிந்தால் சாணிங்க>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சின்னமா ! Empty Re: சின்னமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum