ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

2 posters

Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by ayyasamy ram Mon Jan 02, 2017 6:29 am

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! FSrkX9fGRyxDRmTtR39w+NEW-YEARS-RESOLUTION2_18106
-
நாடு இருக்குற நிலைமையில, நாலா பக்கம் பிரச்னையிலயும்,
நம்மாளுங்க நியூ இயர் தீர்மானங்கள் எடுக்காம இருக்குறது
இல்ல. வழக்கமா புத்தாண்டுல என்ன மாதிரி சபதங்கள்
எடுப்பாங்க, அது எப்படி முடியும்-னு பாப்போமா.

1. பட்ஜெட் :

பொதுவா இந்த மாதிரி நியூ இயர் தீர்மானங்கள புது குடும்பஸ்தர்கள்
தான் எடுப்பாங்க. ‘மச்சான், இன்னையிலேர்ந்து, நான் செலவு பண்ற
ஒவ்வொரு ரூபாயும் கணக்குல வெச்சிருக்க போறேன். 50 பைசாவுக்கு
பாக்கு வாங்குனா கூட என்னோட கணக்கு நோட்டுல அத எழுதி
வைக்கப் போறேன்’னு இன்னைக்கு பாக்கு 15 பாக்கெட்,
15*0.50 = 7.50 ரூபாய்ன்னு கணக்கு எழுத ஆரம்பிச்சிருப்பாங்க.

அப்படியே பொங்கல் லீவுக்கு ஊருக்கு போயிட்டு வர்றப்ப தாத்தா பாட்டி
கிட்ட வாங்குன காச கணக்குல கொண்டு வர மாட்டாங்க….
இப்படியே வரவு எழுதுறதுல கோட்ட விடுவாங்க. அடுத்து 50 பைசா தேன்
மிட்டாய், பாக்கு எல்லாம் எழுதுறதுல பிரச்னையா இருக்கு.
இனிமே 5 ரூபாய்க்கு மேல செய்யுற செலவு எழுதுனா போதும்னு
ஆரம்பிச்சு பட்ஜெட் நோட், ஒரு மாசத்துல எங்க இருக்குன்னு எழுதுவனுக்கே
தெரியாது. என்னோட பட்ஜெட் நோட் எங்கடான்னு நம்மகிட்டயே வந்து
கேட்டு சீன் வேற போடுவாங்க பாருங்க.
-
------------------------------

2. தம்முக்கு தம் கட்டு :


இப்படி ஒரு நியூ இயர் தீர்மானம் இல்லாத, நியூ இயரே
கிடையாதுதானே? இனிமே ஒரு நாளைக்கு 3 சிகரெட்டுக்கு மேல
பிடிக்க மாட்டேன்-னு சபதம். கேட்டா ஜாஸ்தி செலவாகுதுடான்னு
வருத்தம். சரி இப்ப ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறேன்னு
கேட்டா ஒரு பாக்கெட்ம்பாங்க. இந்த மூணு சிகரெட்ட எப்ப எல்லாம்
பிடிக்கணும்னு ஒரு நோட்டு போட்டு, நாலு மணி நேர டீம் டிஸ்கஷன்
வேற நடக்கும்.

மூணாவது நாளே நாலாவது சிகரெட்டுக்கு போய் இருப்பான். கேட்டா,
அது என் காசுல இல்ல மச்சின்னு தன்னிலை விளக்கம் வேற வரும்.
அதோட அகில உலக குழப்பமும் வரும். நாம நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு
சபதம் எடுத்தோமா இல்ல, ஒரு நாளக்கு 3 சிகரெட்டுன்னு எடுத்தோமான்னு
யோசிப்பாங்க.

சரி இன்னையிலேர்ந்து நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு கணக்கு
வெச்சிப்பானுங்க. ஆனா ஒவ்வொரு குரூப்லயும், தம்ம மட்டும் பாக்கெட்
பாக்கெட்டா சப்ளை பண்றதுக்குன்னே ஒருத்தன் பொறந்து வருவான்.
அவனுக்கு சோப் வாங்கிக் குடுக்குறதுல ஆரம்பிச்சு, துணி துவச்சு
கொடுக்குறது வரைக்கும், இவன் செய்வான்.

இதுவும் ஒரு வாரத்துக்கு தான். அப்புறம் போடா என்னோட சபதத்தை
அடுத்த வருஷத்துக்கு தள்ளி வைக்கறேன்னு ஒரு மறு அறிக்கை வெளியாகும்.
இல்ல வழக்கம் போல 42 பல்லையும் காட்டுவான்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty Re: நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by ayyasamy ram Mon Jan 02, 2017 6:32 am

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Rr6KzoaLTEuXyferHF2W+03COOKING-KNIFESKILLS1-superJumbo_18465
-
3. நானே சமைச்சி சாப்டு காச மிச்சப்படுத்துறேன்:


தமிழ்நாட்டுல அப்பா, அம்மாவ விட்டு தனியா வாழ்க்கை நடத்துற
பெரும்பாலான பேச்சுலர் அழகிகள் மற்றும் அழகன்களின் ஆஸ்தான பிரச்னை
“நல்ல சோறு”. இனிமே இந்த பாய்கடையில வேக வெச்ச முட்டைய 10 ரூபாய்க்கு
ஒண்ணு வாங்காம , நானே சமைச்சு சாப்பிடப் போறேன்னு ஒரு சபதம் எடுப்பானுங்க
பாருங்க. அப்ப ஆம்பள கண்ணகியவே நேர்ல பாக்குற மாதிரி இருக்கும்.

சட்டசபையக் கூட்டி, தீர்மானம் போட்டு, ஆளுக்கு ஆயிரக் கணக்குல இன்வெஸ்ட்
எல்லாம் பண்ணி, அடுப்ப பத்த வெச்சதுக்கப்பறம்தான் தெரியும்.. சமைக்கத்
தெரியும்னு சவடால் விட்டவனுக்கு, சாம்பார் கூட வெக்கத் தெரியாதுன்னு.

பசங்க தான் இந்த கதின்னா, பொண்ணுங்க அதுக்கும் மேல. என்னடி சாம்பார்ல,
சாத்துக்குடி எல்லாம் பிழியறன்னு கத்துற சத்தம் எல்லாம் கேட்கும்.
இந்த லட்சணத்துல சமைச்சு.. சாப்டு.. காச மிச்சப்படுத்தி….
-
-------------------------------------------

4. நானும் ஜிம்முக்கு போறேன் ஜிம்முக்குப் போறேன்..:


யாரோ ஒருத்தன் “என்னடா உடம்ப இப்படி வெச்சிருக்கே. உனக்கு என்ன வயசாகுது..
உன் வயசுல என்னோட ஃபோட்டோவ பாரு’ன்னு அவன் அஞ்சரைப் பேக்ல இருக்கற
ஒரு ஃபோட்டோவை காட்டுவான். பார்த்துவிட்டு, பொங்கி எழு மனோகரா கணக்காக

“நானும் 19 கிலோ வெயிட்டை கொறச்சி, ஃபிட்டாக போறேன்’னு இவன் ஜிம்முக்கு
போவான். அங்க போனா, மாத கட்டணம் ரூ.1,000, வருட கட்டணம் ரூ.10,500 மட்டுமேன்னு
போர்ட் இருக்கும். எப்படியாச்சும் காச மொத்தமா கட்டுனாலாவது டெய்லி ஜிம்முக்கு
போவோம்னு, வீட்டு வாடகை கூட கொடுக்காம மொத்தத்தையும் கட்டிடுவாங்க.

அதுக்கு அப்புறம் தான கூத்தே இருக்கு. அடுத்த மாசம் ஆஃபீஸ்ல, கரெக்ட்டா நைட்
ஷிப்ட் போடுவாங்க. ஒரு மாசம் பூரா போச்சா. அதுக்கு அடுத்த மாசம் நமக்கே பழகிடும்.
இதுக்கு எல்லாம் நடுவுல அவன் ஜிம்முக்கு போக, கம்பெனிக்கு ஒரு அடிமைய பிடிப்பான்,
அவனையும் ஜிம் ஃபீஸ் எல்லாம் கட்டவெப்பான். அந்த அடிமை “என்னடா 10,500 ரூபாய்
கட்டி வீணாக்கிட்டியே’ன்னு கேட்டா…,

‘அடிக்கடி ஜிம்முக்கு போனா என்னாகும் தெரியுமா?’னு அவன் காதுல ரகசியம் சொல்லி
அவனையே பயமுறுத்துவான். இந்த மேட்டர்ல ஜிம்முக்கு பதிலா ஸ்போக்கன்
இங்கிலீஷ் / ஹிந்தி / டாலி / சைக்கிளிங் / மராத்தான் /கீபோர்ட் க்ளாஸ்னு எதை வேணா
போட்டுக்கோங்க!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty Re: நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by ayyasamy ram Mon Jan 02, 2017 6:34 am

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! ZCgTRAxSKmBLiLdfqtzH+p01y4jn9_18347
-
5. நான் வெஜ் :

இந்த வருஷத்தோட, இந்த அசைவத்த விடப் போறேன்னு ஜனவரி 01-ம் தேதி
இதுக்குன்னே சபரிமலைக்கு மால போடுவாய்ங்க. ஏன்டா, விடுறேன்னு கேட்டா,
வழக்கம் போல காசு, ரெண்டாவது ஹெல்த்-ன்னு க்ளிஷே டயலாக் வரும்.

சரி பய திருந்துறான்னு சீண்டாம இருப்போம். அவனும் மலைக்குப் போய்ட்டு
வந்து ஒரு ரெண்டு வாரம் சத்தம் காட்டாம, சரணம் ஐயப்பான்னுகிட்டு இருப்பான்.
ஒருநாள், ஒரு நல்ல ரெஸ்டாரண்டுல அசைவத்தை டேஸ்ட் பண்ண முடியாதுன்னு
நெனைக்கறப்பதான், சபதம் சலனத்துக்கு உள்ளாகும். சரி சாப்பிடுறதுன்னு முடிவு
பண்ணிட்டு ” அறிந்தும் அறியாமலும், தெரிந்தும்……” சொல்லிட்டு வேட்டிய மடிச்சி
கட்டிட்டு ராஜ்கிரண் தம்பியா மாறி வருவான் பாருங்க…..

அதுக்கப்புறம் என்ன, வழக்கம் போல டெய்லி ராத்திரி 11.30 மணிக்கு கூட சில்லி
பீஃப் ரெண்ட பார்சல் வாங்கி ரூமுக்கு வந்தாச்சும் சாப்டுட்டு தான் படுப்பாரு.
டெய்லி பில்லுல 120 ரூபாய் எகிறும்.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty Re: நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by ayyasamy ram Mon Jan 02, 2017 6:34 am

6. சரக்கு, உன் மேல கிறுக்கு :

‘யப்போவ்வ்வ்… இன்னையோட இந்தக் குடிய விட்டுடணும்’-ன்னு மாசத்துல ஒருநாளாவாது சொல்லாத குடிகாரனுகளே இருக்க முடியாது. அப்படி இருக்குற குடிகாரனுங்க, ஏதோ ஒரு வேகத்துல இனி குடிக்க மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு, டிசம்பர் 31-ம் தேதி ராத்திரிய கடக்குற அழக பாக்கணுமே. என்ன படம் பாக்குறோம்ன்னே தெரியாம டிவி முன்னாடி உட்கார்ந்திருப்பாய்ங்க. என்ன சாப்பிடுறோம்னு தெரியாம, கெடைக்கிறத எல்லாம் உள்ள தள்ளுவாய்ங்க.

இப்டி பல கட்ட மனப் போராட்டத்துக்கு அப்புறம், ஒருத்தன் மச்சி ” ஃபுல்லோட உனக்காக வெயிட் பண்றோம் வாடான்னு ஒரு வாட்ஸ் அப், உடனே நெட்டை ஆஃப் பண்ணிடுவான். அடுத்தவன் ஃபோனே பண்ணிடுவான். என்ன பிராண்ட் சரக்கு, என்ன சைட் டிஷ் இருக்கு, எத்தன பேருன்னு டீட்டெயில் வாசிப்பான். டேய் நான் குடிக்கிறத விட்றேன்டான்னு நியூ இயர் தீர்மானங்கள்-னு சொல்லுவோம்.

அப்ப தான் அந்த லா பாயிண்ட நம்ம ஃப்ரெண்ட் சொல்லுவான். “டேய் இன்னக்கி டிசம்பர் 31, அடுத்த வருஷத்துல இருந்துதானேடா நீ குடிக்க மாட்ட. இப்ப வா, உன் வாழ்கையோட லாஸ்ட் குடியா இது இருக்கட்டும் “-னு ஒரு பொறி தட்டுவான். என்ன கருமமோ இந்தக் குடிகாரனுங்க வாழ்க்கைல அந்த லாஸ்ட் குடிய மட்டும், யாராலயும் நிர்ணயிக்க முடியல.

7. எடுடா டைரிய எழுதுடா கதைய!

இந்த வருஷத்துல இருந்து ஒழுங்கா டைரி எழுதணும்.
பின்னால நாம படிச்சுப் பார்க்கறப்ப நல்லா இருக்கும்னு தோணும்.
ஒரு நல்ல டிசைன் டைரி, பார்த்து பார்த்து ஒரு புது பேனா
வாங்கிட்டு வந்து வெப்பாங்க. டைரி மேல பேனாவை க்ராஸா
வெச்சு ஒரு ஃபோட்டோ எடுத்து ட்விட்டர்லயோ, இன்ஸ்டாலயோ
போட்டுக்குவாங்க. மொத நாள் எழுத்துல கொண்டாட்டம் இருக்கும்.

ரெண்டாவது நாள் கொஞ்சம் கம்மியாகி பாதிதான் எழுதுவோம்.
அப்பறமா ‘எல்லாத்தையும் எழுதணுமா? ப்ச்.. எதுக்கு?’னு தோணி,
‘Gone office. Hectic Day. Target Kills’ன்னு குட்டி
நோட்ஸோட முடியும் .பத்து நாள் ஒரு மாதிரி எழுதி அதுக்கப்பறம்
அக்கா பொண்ணோ, அண்ணன் பையனோ எடுத்து கிறுக்கத்தான்
அந்த டைரி யூஸ் ஆகும்! இதையெல்லாம் எப்பயோ சொல்லிட்டார்ல
நம்ம சுஜாதா!

சரி.. சரி.. வேற எதாவது நியூ இயர் ரெசல்யூஷன் – எடுக்கறத்துக்கு
முன்னாடி இதை படிச்சுடுங்க!

———————————————–
vikatan
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty Re: நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by krishnaamma Mon Jan 02, 2017 7:19 pm

ஹா..ஹா..ஹா.... எல்லா நியூ இயர் ரெசல்யூஷன்ந நும் நல்லா இருக்கு ! நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! 3838410834 நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! 3838410834 நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க! Empty Re: நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum