ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

மழையின் மனதிலே !  நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Dec 09, 2016 3:17 pm

மழையின் மனதிலே !

நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600 108. விலை : ரூ. 60.
*****
‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.

இந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார், சிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. பாராட்டுகள்.

இந்த நூலை கணித மேதை சீனிவாச ராமானுஜன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். 39 தலைப்புகளில் கவிதை எழுது உள்ளார். மகாகவி பாரதியார் போல, திருவள்ளுவர் போல புதிய சொல்லாட்சி அறிமுகம் செய்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன்.

‘SELFIE’ என்று சொல்லிற்கு சுயபடம் என்று தமிழாக்கம் செய்துள்ளார். முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுய படம்! (தன் படம் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்)

கொம்பு முளைத்த காலம்
உடல் பலமே பலம் என்றது !
அறிவே பலம் என்றது !
பிறிதொரு காலம்
தகவலே பலம் என்றது !
இன்றையக் காலம்!

இது தகவல் தொடர்பு சிறப்பான காலம் இது. கவலையை மறக்க உதவுவது கலை. அன்றும் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுவது கலை.

கலை!

துன்பம் என்பது கோடை
உன் கொடை அங்கே குடை
உன் பெயர் தான் கலை!

மணிவாசகர் பதிப்பகம் அட்டைப்பட வடிவமைப்பு நூலின் உள்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக செய்துள்ளனர் பாராட்டுகள்.

கவிதையில் காட்சிப்படுத்துதல் ஒரு கலை. அக்கலை நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு நன்கு கைவரப் பெற்றுள்ளார். பரபரப்பான இயந்திரமயமான இலண்டன் மாநகரில் வாழ்ந்தாலும் இயற்கையை ரசிக்கவும் நேரம் ஒதுக்கி ரசித்து வருகிறார் என்பதை மெய்ப்பிக்கும் கவிதை.

பனி!

ஒரு இலண்டன் காலை
என் சன்லைன் வெளியே
அரிதாரம் பூசிய வெள்ளம் தேவதைகள்
மொத்தம் பத்து
அத்தனையும் முத்து !

சூரியராமனின் கால்
பட்டதும் தான் தெரிந்தது
அவை அகலிகையர் அல்ல.
அழகிய பூக்கள் என்று !

மலர்களின் மீதிருந்த பனிகள் சூரியன் வருகையால் காணாமல் போவதை கவிதையால் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.

வானவில் ரசிப்பது சுகம். அவை ஆயுள் குறைவு என்றாலும் இருக்கும் நேரத்தில் பார்க்கும் பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

கவிதை மாதிரி வானவில்!

ஒரு கவிதை எழுதலாம் என சாளரம் திறந்தேன்

பளிச்சென வானவில்!
‘ஓவிய மாதிரி’ மாதிரி
எனக்காகத் தோன்றிய
‘கவிதை மாதிரி’
இது நிழல் இல்லா சூரியன் எடுத்த
தமிழ்ப்படம்.
மேகக் கண்ணாடி பந்தது
தேவதை ஒருத்தி
சட்டென தீட்டிய கன்னத் தீட்டல்
இந்த வண்ணக்கொட்டல்.

இக்கவிதை படித்து முடிக்கும் வாசகர் மனதில் வானவில் காட்சிக்கு வரும் என்பது உண்மை.

ஹைக்கூ, சென்றியூ, புதுக்கவிதை என பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

ஹைக்கூ !

கூரைக்கெல்லாம் கூரை
பொங்கி வழியாத நுரை
வானம்!

சென்றியு

விரல் நுனியில் உதயம்
வினாடியில் பிரசவம்
குறுஞ்செய்தி!

ஹைக்கூ – சென்றியூ கலப்பினம் வடிவில் 4 கவிதைகள் உள்ளன. சிந்தனை மின்னலை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்.

இரண்டு மின் அலைகள்
ஒரு மின்னல்
ஹைக்கூ!

மூன்றே துளிகள்
ஒரு கடல்
ஹைக்கூ !

ஹைக்கூ கவிதைக்கான விளக்கத்தை, இலக்கணத்தை ஹைக்கூவாக வடித்துள்ளார், பாராட்டுகள்.

வளர்பிறை என்ற சொல் அனைவரும் அறிந்த ஒன்று. நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் ‘வளர்பிறை’ என்று புதுச்சொல் அறிமுகம் செய்துள்ளார்.

வளர்பிழை!

முரண்புரிக்குச் சென்றிருக்கிறீர்களா?
அங்கே கணிப்பொறி மனிதனை இயக்குகிறது.
என் தேர்வுத்தாளைப் பார்த்தேன் ;
ஆசிரியர் மதிப்பெண்களைத் தரத்
தவறியிருந்தார்
என் மகனின் தேர்வுத்தாளைப் பார்த்தேன்
ஆசிரியரிடம் மதிப்பெண்கள் வாங்கத் தவறியிருந்தான்.

எது கவிதை என்ற கேள்வி எல்லோராலும் எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில் சொல்கின்றன. கவிதைக்கான முழுமையான விளக்கம் இன்னும் யாராலும் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இதோ! நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் மொழியில் கவிதைக்கான விளக்கம்.

உயிரில் விழும் விதை!

சலவை செய்த சொற்கள் அடுக்கி
கலவை செய்தல் கவிதை ஆகுமோ?

நிலவில் குளித்து எழுந்த்து போலே
நிலவும் இன்ப நினைவே கவிதை!

காதல் வரிகளில் ஏறி அமர்ந்து
காதலர் நெஞ்சில் நுழைந்திட வேண்டும்.

தீமையைக் கண்டால் தீ போல் எரித்து ஆமை மனங்களை உசுப்பிட வேண்டும். இப்படியே நீள்கிறது இக்கவிதை. இனிய கவிதை நந்தவனம் சென்று வந்த மன உணர்வைத் தருகின்றது பாராட்டுகள்.நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இயற்கை ரசிகர் .சமுதாய நேசர் வித்தியாசமான முறையில் கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum