ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்!

3 posters

Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:30 am



ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக
இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில்
உள்ள பெரும்பான்மையான மக்களையும்சென்றடைந்துள்ளது.
-
அதுவும் கடந்த6 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியைநடத்தினார்.
அவர் சிந்தனையில் உதித்தசில அரிய திட்டங்களை திரும்பி
பார்ப்போம்.
-
மழை நீர் சேகரிப்பு திட்டம்

-
நிலத்தடி நீரை பெருக்கும்விதமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை
உருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார்
அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்
என அறிவிக்கப்பட்டது. இதனால்
தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுத்தார்.
-
மகளிர் போலீஸ் ஸ்டேஷன்

-
தமிழகத்தில் முதன் முறையாக முழுவதும் பெண்களால் இயங்கும்
போலீஸ் ஸ்டேஷன்களை அமைத்தார். மேலும் காவல்துறையில்
30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்.
-
பெண் கமாண்டோ படை

-
2003ல் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக முதன்முறையாக,
தமிழகத்தில் பெண்கள் கமாண்டோ படையை ஏற்படுத்தினார்.
-
--------------------------------------

புதிய வீராணம் திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:32 am


சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்
முக்கிய பங்கு வகிக்கும் புதிய வீரணாம் குடிநீர் திட்டத்தை
செயல்படுத்தினார்.

லாட்டரி ஒழிப்பு

ஏழை எளிய மக்களின் வருமானத்தை சுரண்டிய, லாட்டரி சீட்
கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக, அதனை முற்றிலுமாக
தடை செய்து வெற்றி கண்டார்.

வீரப்பன் சுட்டுக்கொலை

சந்தன மர கடத்தல் வீரப்பனை பிடிக்க பல ஆண்டுகளாக
கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் முயற்சி செய்தன.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வீரப்பன் தமிழக போலீசாரால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
--

வீடியோ கான்பரன்ஸ்


கைதிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் ஏற்படும்
சிரமங்களை போக்கும் விதமாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம்
ஆஜர்படுத்தும் திட்டத்தை உருவாக்கினார்.

சுய உதவிக்குழு

பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் விதமாக சுய உதவிக்
குழுதிட்டத்தை கொண்டு வந்தார்.
-
-----------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:34 am


இலவச சைக்கிள்

அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்
வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார்.

னவாகிய அரசு வேலை

முடங்கிக் கிடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தைசீரமைத்து நேர்மையாகவும், துரிதமாகவும்
செயல்படும் தேர்வாணையமாக மாற்றிக்காட்டினார்.

இதன் மூலம் தேர்வாளர்களின் நன்மதிப்பை பெற்றார்.
2011 முதல் 2016 வரை சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள்
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட்டது. அதே போல, காவல்
துறையில் 20 ஆயிரம் இடங்கள், டி.இ.டி., தேர்வு மூலம்
25 ஆயிரம்ஆசிரியர் பணியிடங்கள் என போட்டித் தேர்வுகளின்
மூலம் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை
கிடைக்க வழிகாட்டியாக திகழ்ந்தார்.

அம்மா உணவகம்

'தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப,
ஏழை மக்களின் பசித்துயர் நீக்கும் வகையில் 'அம்மா உணவகம்'
என்ற திட்டத்தை 2013 பிப்., 19ம் தேதி சென்னை மாநகராட்சியில்
15 இடங்களில் தொடங்கப்பட்டது.

இங்கு இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை,
கறிவேப்பிலை, தயிர் சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது.
பின் இது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும்
விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற
மாநகராட்சி மற்றும்
முக்கிய நகரப் பகுதிகளிலும் திறக்கப்பட்டன.

அம்மா குடிநீர்

பயணம் செய்யும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில்
10 ரூபாய்க்கு 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கும்
திட்டத்தை 2013 செப்., 15ல் தொடங்கினார். தமிழ்நாடு போக்குவரத்து
கழகம் இதனை செயல்படுத்துகிறது. தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர்
சுத்திகரிக்கப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:37 am



தாலிக்கு தங்கம்


இதன்மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இல்வாழ்க்கை
அமைய காரணமானார். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு
25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. மேலும் டிகிரி
படித்த பெண்களுக்கு 50 ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

இலவச லேப்டாப்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர்
திறனைமேம்படுத்தும் விதமாக,இலவச லேப்டாப் வழங்கும்
திட்டத்தை செயல்படுத்தினார்.

அம்மா முகாம்

மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டத்தை
தொடங்கினார். மக்கள் அதிகாரிகளை தேடி போவதால் காலவிரயம்
ஏற்படுகிறது.இதை தடுக்கும் விதமாக அதிகாரிகளே மக்களை தேடி
சென்று அவர்களின் மனுக்களை பெற்று, தகுதியான நபர்களுக்கு
ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்குவதே இதன் நோக்கம்.
இத்திட்டத்தில் குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி
மாற்றம் செய்தல், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்
சான்றிதழ் போன்றசான்றிதழ்கள், பட்டா மாறுதல்போன்றவை
வழங்கப்படுகிறது.

கோயில்களில்அன்னதானம்

பழநி, ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே போல தமிழகம் முழுவதும்
106 முக்கிய கோயில்களில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்
படுகிறது.

பென்னிகுவிக் மரியாதை

தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் முல்லைப் பெரியாறு
அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக
அவருக்கு, தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் சிலை மற்றும் மணி
மண்டபம் அமைக்கப்பட்டது.

மின்சார சலுகை


இந்த முறை 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு
கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:39 am


அரசு கேபிள் டிவி


தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்த கேபிள் 'டிவி'யை
அரசே ஏற்று நடத்தும் என அறிவித்து, அரசு கேபிள் 'டிவி'
நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் மாதத்துக்கு 70 ரூபாய்
கட்டணத்தில் மக்களுக்கு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டன.

இந்தியாவுக்கு இந்திரா தமிழகத்திற்கு ஜெ.,

-
15வது வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் தொடங்கி
ஒரு மாநிலத்தையே ஆளும் ஆளுமையாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா
மட்டுமே.

பிரிட்டனுக்கு ஒரு மார்கரெட் தாட்சர்;இந்தியாவுக்கு ஒரு இந்திரா;
அதுபோல தமிழகத்துக்கு ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த
உலகில் தனது தைரியத்தால் சாதித்தவர். ஆளுமைக் குணம் உயர்ந்து
நிற்கும் போது அது தனக்கென ஒரு பாதையில்பயணிக்கும் என்பது
உலகம் கண்ட உண்மை.

சென்னையில் ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில்
பேசிய ஜெயலலிதா “யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு
வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும்,
கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்
கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று
சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்”
என்று குறிப்பிட்டார்.

விமர்சனங்களை கண்டு பயப்படாமல் அதனை வெற்றிப்படிகளாக்கியவர்.
ஜெயலலிதாவிடம் கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட அவரதுதுணிச்சல்,
தளராத முயற்சி, தொடர் போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் மறுக்க
மாட்டார்கள். இதுதான் ஜெயலலிதாவின் வெற்றியின் ரகசியம்.

சட்டரீதியான வெற்றி
-
ஜெயலலிதா 1991 முதல் 96வரை தமிழக முதல்வராக இருந்தார்.
இந்த காலகட்டத்தில்
அவர் மீது பல்வேறு வழக்குகள் தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்டது.
வண்ண தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசன்ட்டே
ஓட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ - ஸ்பிக் நிறுவன
பங்குகள் வழக்கு, ஐதராபாத் திராட்சை தோட்ட வழக்கு, பிறந்தநாள்
பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு
போன்ற வழக்குகள் போடப்பட்டன. இவை அனைத்தையும்
சட்ட ரீதியாக அணுகி, குற்றமற்றவர் என வென்று காட்டினார்.
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:41 am


தொட்டில் குழந்தை திட்டம்

-
1991ல் தமிழக முதல்வராக முதன்முறையாக ஜெயலலிதாக
பதவியேற்றார். அப்போது சிலபகுதிகளில் பெண் சிசுக்கொலை
எனும் கொடுமை இருந்தது. இதை தடுக்கும் விதமாக 1992ல்
ஆதரவற்ற பெண் குழந்தைகளை அரசே வளர்க்கும் என அறிவித்து,
'தொட்டில் குழந்தை'திட்டத்தை தொடங்கினார்.
இந்தியாவிலேய மகத்தான திட்டமாக இது உருவெடுத்தது.
-
முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில்இத்திட்டம் தொடங்கப்பட்டது.
2001ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா இத்திட்டத்தை மதுரை,
தேனி, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தினார்.

இதனால் தமிழகத்தில் 2001ல் 1000 குழந்தைகளுக்கு 942 பெண்
குழந்தைகள் என்ற நிலை மாறி, 2011ல் 946 ஆக அதிகரித்தது.

2011ல் 3வது முறையாக பதவியேற்றஜெயலலிதா, கடலுார், அரியலுார்,
பெரம்பலுார், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய
மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தினார்.
-
-------------------

ஆடு தந்த 'அம்மா'

-
* விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்,
* விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்,
* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்,
* விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம்,
* விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம்,
* விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்,
* விலையில்லா 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டம்,
* மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள்,
புத்தகப்பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித
உபகரணங்கள், புவியியல் வரைபட புத்தகங்கள் வழங்கும் திட்டம்,
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம்,

பசுமை வீடுகள் திட்டம்,
* அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை,
அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
* அம்மா உப்பு
* அம்மா சிமென்ட்
* அம்மா மருந்தகம்
* அம்மா காய்கறி
-
-----------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by ayyasamy ram Tue Dec 06, 2016 7:54 am



உலக தமிழ் மாநாடு


உலகத் தமிழ் மாநாடு 1966ல் முதன்முறையாக நடந்தது.
இதன் பின் ஏழு உலக தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக
பதவியேற்ற பின், 1995 ஜன., 1 முதல் ஜன., 5 வரை தஞ்சையில்
நடத்தப்பட்டது.
இதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் ஐந்தாவது மாநாடு
மதுரையில் 1981ல் நடந்தது.

முல்லை பெரியாறு


முல்லை பெரியாறு அணையில் நீர்தேக்கும் உயரத்தை
136 அடியில் இருந்து 142 அடி உயரமாக அதிகரித்து விவசாயிகளின்
துயரத்தை போக்கினார். இதற்காக நீண்டதொரு சட்டப்
போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். இதற்கு நன்றி செலுத்தும்
விதமாக 2014 ஆக., 22ல் மதுரையில் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள்
பாராட்டு விழா நடத்தினர்.

காவிரி தாய்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு
205 டி.எம்.சி.,(1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும்
என 1991ல் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை மத்திய
அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா தொடர்ந்து
போராடி வந்தார்.

இறுதியில் 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி
ஏற்படுத்தினார்.
-
-------------------------------------------
நன்றி- தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by சிவனாசான் Tue Dec 06, 2016 8:50 am

அம்மா கால்சென்டர் என்ற ஓர் குறை அறி தீர்வு மையத்தையும்
உருவாக்கினார்கள். இலவச அழைப்பு 1100 மூலம் >>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by Aathira Tue Dec 06, 2016 9:53 am

அம்மா மருந்தகம்


மக்களால் நான்! மக்களுக்காக நான்! Aமக்களால் நான்! மக்களுக்காக நான்! Aமக்களால் நான்! மக்களுக்காக நான்! Tமக்களால் நான்! மக்களுக்காக நான்! Hமக்களால் நான்! மக்களுக்காக நான்! Iமக்களால் நான்! மக்களுக்காக நான்! Rமக்களால் நான்! மக்களுக்காக நான்! Aமக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum