ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

3 posters

Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by ayyasamy ram Sun Nov 06, 2016 1:39 pm

சென்னை:
என்.டி.டி.விக்கு தடை விதித்து மத்திய அரசு
கருத்துரிமையை நசுக்குகிறது என்று கருணாநிதி
கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக
தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட
அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப்
படைத் தளத்திற்குள், 2-1-2016ல் பயங்கரவாதிகள் திடீரென்று
புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல்
ஒளிபரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு,  
10 மாதங்கள் கழித்து, நவம்பர் 9ம் தேதி பிற்பகல் 1 மணி முதல்,
மறுநாள் பிற்பகல் 1 மணி வரை,  என்.டி.டி.வி. இந்தி சேனலின்
ஒளிபரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவையும் விதித்துள்ளது.  

இது பற்றி என்.டி.டி.வி தொலைக்காட்சி நிர்வாகம் கூறும் போது,
பதான்கோட் தாக்குதலை  எல்லா தொலைக் காட்சிகளும்
நேரலையாகவே ஒளிபரப்பின. அனைத்துப் பத்திரிகைகளும்
அது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டன.

ஆனால் என்.டி.டி.வி. மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது
அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், எங்கள் தொலைக்காட்சியின்
ஒளிபரப்பு பாரபட்சமற்ற வகையில் இருந்தது. நாட்டில் நெருக்கடி
நிலை அமலில் இருந்த இருண்ட காலக் கட்டத்தில் பத்திரிகைகள்
தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் பிறகு இப்போது என்.டி.டி.வி.க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கை அசாதாரணமானது என்று தெரிவித்துள்ளது.

மேலும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிடும் மத்திய பா.ஜ.க.
அரசின் கடுமையான இந்த நடவடிக் கைக்கு பல்வேறு அரசியல்
கட்சித் தலைவர்களும், ஊடகத் துறையினரும் தங்களது
கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி,
அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர்
உமர் அப்துல்லா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,
இந்திய செய்தி ஆசிரியர் கூட்டமைப்பினர், காட்சி ஊடக செய்தி
ஆசிரியர்கள் சங்கத்தினர், எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா
அமைப்பைச் சேர்ந்தோர் உட்பட பலரும் கண்டன அறிக்கைகள்
வெளியிட்டுள்ளனர்.

ஆங்கில நாளிதழ் ஒன்று எழுதியுள்ள தலையங்கத்தில், ஊடகச்
சுதந்திரத்தை முற்றிலும் மறுத்த கடுமையான செயல் என்று
மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்திருப்பதோடு,
உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியின் தலைமையில்
அமைக்கப்பட்டுள்ள தகவல் ஒளிபரப்பு தொடர்பான தர
நிர்ணய ஆணையத்தின் விசாரணைக்கும் முடிவுக்கும் இதை
ஒப்படைக்காமல், நேரடி யாக மத்திய அரசு அலுவலர்கள் கொண்ட
ஒரு குழு முடிவெடுத்திருப்பது நியாயம் ஆகாது என்றும் கருத்து
தெரிவித்திருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்
போது, நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஏடான முரசொலிக்கும்,
அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை
உத்தரவுதான் நினைவிற்கு வருகிறது.

மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை
மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத்
தொடருமானால், அது 2வது நெருக்கடி நிலைக்குத்தான் வழி
வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய
மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும்.

எனவே பிரதமர் இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு,
ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில்
இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை
வெளியிட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய பாஜக அரசு,
ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தையே நடை முறைப்
படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு,
உண்மை என்றாகி விடும்.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள்
ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும்,
தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும்
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்
ராகுல் காந்தி 2 நாட்களில், 3 முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்க ப்
பட்டுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல்
நாடகம் என்று வர்ணித்திருக்கிறார்.

இரங்கல் தெரிவிப்பதும், போராட்டத்தை ஆதரிப்பதும் தனிமனித
சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையின் பாற்பட்டவை. கைது
செய்வதன் மூலம் அதைத் தடுக்க நினைப்பது மனித உரிமை
மீறலாகும்.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும்
வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம். அந்த திட்டத்தை
குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்
படுத்துவது  பற்றியும், மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக நல்ல
முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று திமுக சார்பில்
வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
------------------------------------------------
தினகரன்


Last edited by ayyasamy ram on Tue Nov 08, 2016 8:15 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by ராஜா Mon Nov 07, 2016 8:06 pm

ayyasamy ram wrote:

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்
என்ன இது ?! அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 6:56 pm

நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியம் என்றால் ,தடை செய்வதில் தவறில்லை .

சிறிது நினைவு படுத்தி கொள்ளுங்கள் .
பம்பாயில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு.
சில TV கள் TRP கருதியோ  அல்லது முன்னோக்கிய பலாபலன்களை அறியாமல் நேரிடை ஒளிபரப்புகள் பண்ணினார்கள் . என்ன ஆயிற்று ? அதை பார்த்துக்கொண்டு இருந்த தீவிரவாத அமைப்பு , பாக்கில் இருந்து தீவிரவாதிகளுக்கு அட்வைஸ் பண்ணி ,நமக்கு கோடி கோடியாக  நஷ்டம்.
ஆகவே நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் . ஊடகத்தின் TRP முக்கியம் இல்லை .

கருணாநிதியின் கண்டனத்திற்கு தினமலரில் வந்துள்ள ஒரு கடிதம் ,இதோ !

புதுடில்லி: பதான்கோட் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக என்டி'டிவி'யின் இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இதை அனைத்து எதிர் கட்சிகளும் கண்டித்தன. குறிப்பாக காங்கிரசும், திமுக.,வும் கடுமையாகவே கண்டித்தன.

கருணாநிதியின் கரிசனம்:
திமுக., தலைவர் கருணாநிதி, ' கருத்துரிமையை நசுக்கும் பாஜ., அரசு ' என்று குறிப்பிட்டிருந்தார். ( இவருடைய ஆட்சியின் போது,' தினமலர்' நாளிதழ் மற்றும் இதர இதழ்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்தாரோ? 2009 அக்.,7ல், ஒரு செய்தி வெளியிட்டதற்காக, 'தினமலர்' நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய,' தினமலர்' அலுவலகத்திற்கு போலீசை அனுப்பியவர் கருணாநிதி. அவர் உண்மையிலேயே கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருந்தால், வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது என்று கருதியிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தற்போதைய ஜெயலலிதா அரசு செய்வதுபோல், சட்டப்படி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி, பின்னர் அதை கோர்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன செய்தார்? ரஜனிகாந்த் மற்றும் சில நடிக, நடிகையர் கேட்டுக் கொண்டதற்காக, பத்திரிகை அலுவலகத்திற்கு செய்தி ஆசிரியரைக் கைது செய்வதற்காக போலீசாரை, பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக அனுப்பியவர் கருணாநிதி)


தடை விதித்தது தவறுதான்:
கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் ஊடகங்கள் மீது எந்த அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. அதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. என்டி'டிவி' மீது பா.ஜ., அரசு எடுத்த நடவடிக்கை தவறானது தான். ' எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகை தணிக்கை கொண்டு வந்தது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு' என, எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலையை கொண்டு வந்த இந்திராவே பின்னர் வருந்தி இருக்கிறார்.இது போன்ற விஷயங்களில் பத்திரிகை கவுன்சில் அல்லது உச்ச நீதி மன்ற ஆலோசனையை அரசு பெற்றிருக்கலாம். அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் ஒலிபரப்பு தொடர்பான தர நிர்ணய ஆணையத்தின் விசாரணைக்கும், முடிவுக்கும் ஒப்படைத்திருக்கலாம். மாறாக நேரடியாக மத்திய அரசு அலுவலர்கள் கொண்ட ஒரு குழு முடிவெடுக்க அனுமதித்தது பாஜ., அரசுக்கு ஒரு களங்கம் தான். எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத வகையில் அரசு கவனமாக இருக்கும் என நம்புவோம்.

காங்.,- தி.மு.க.வுக்கு தகுதி இருக்கிறதா?

ஆனால் தற்போதைய மத்திய அரசைக் குறை கூற காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வுக்கு தகுதி இருக்கிறதா? மத்தியில் இவர்களுடைய கூட்டணி ஆட்சிக்காலத்தில், 2012 முதல் 2014 வரையான, மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் , 16 'டிவி' சேனல்களுக்கு ஒரு நாள் முதல், 30 நாள் வரை தடை விதித்துள்ளனர். இவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து பேசலாமா? இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட 'டிவி' சேனல்கள் குறித்த விவரம், 2015, ஜூலை, 31ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஒளிபரப்பு விதிகளை மீறியதாக, 2012 - 15 ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளின் பெயர்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட தேதியும், தடை செய்யப்பட்ட கால அளவும்:

காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட 'டிவி' சேனல்கள்

1. எஸ்.எஸ்.. 'டிவி' - 08/02/2012 - 7 நாட்கள்
2. என்டர் 10 'டிவி' - 08/01/2013 - ஒரு நாள்
3. ஜிங் 'டிவி' - 08/01/2013 - ஒரு நாள்
4. மனோரஞ்சன் 'டிவி' - 08/01/2013 - ஒருநாள்
5. எஸ்எஸ்., 'டிவி'- 08/01/2013 - ஒரு நாள்
6. எப். 'டிவி' - 28/03/2013 - 10 நாள் ( 2011ல் செய்யப்பட்ட ஒளிபரப்பிற்காக)
7. மாத்துவா 'டிவி' - 25/04/2013 - ஒரு நாள்
8. ஏ.எக்ஸ்.என்., 'டிவி' - 25/04/2013 - ஒரு நாள்
9. மூவீஸ் ஓகே 'டிவி' - 01/05/2013 - ஒரு நாள்
10. காமடி சென்ட்ரல் 'டிவி' - 17/05/2013 - 10 நாள்
11. ஜூம் 'டிவி' - 01/10/2013 - ஒரு நாள்
12. ஏ.பி.என்., ஆந்திர ஜோதி 'டிவி' - 01/10/2013 - 7 நாள்
13. மனோரஞ்சன் 'டிவி' - 17/05/201 3- 7 நாள்
14. பிக் சிபிஎஸ் லவ் 'டிவி' - 15/10/2013 - ஒரு நாள்
15. யு 'டிவி'- 06/11/2013 - 3 நாள்
16. டபிள்யூ.பி., 'டிவி' - 16/01/2014 - ஒருநாள்
17. என்'டிவி' - 19/01/2015 - 7 நாள்
18. சாட்லோன் 'டிவி' - 27/03/2015 - 30 நாள்
19. ஜெய் ஹிந்த் 'டிவி' - 07/04/2015- ஒரு நாள்
20. அல்ஜஸீரா 'டிவி' - 10/04/2015 - 5 நாள்
- ல. ஆதிமூலம்

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 8:16 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்
என்ன இது ?! அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1226356
-

செய்தியின் அடியில் விளம்பரமாக அந்த
செய்தித்தாளில் இருந்த வாசகம், தவறுதலாக
பதிவுடன் சேர்ந்து விட்டது...!
-
அவ்வாசகங்கள் நீக்கப்பட்டன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by ராஜா Wed Nov 09, 2016 11:14 am

ayyasamy ram wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்
என்ன இது ?! அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1226356
-

செய்தியின் அடியில்  விளம்பரமாக அந்த
செய்தித்தாளில் இருந்த வாசகம்,  தவறுதலாக
பதிவுடன் சேர்ந்து விட்டது...!
-
அவ்வாசகங்கள் நீக்கப்பட்டன்
அதன் பார்த்தேன் ,

அதை பார்த்துட்டு @மாணிக்கம் நடேசன் ஐயா ஒரே நச்சரிப்பு புன்னகை , எப்படி அதில் விளம்பரம் கொடுக்கணும்னு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by T.N.Balasubramanian Wed Nov 09, 2016 8:47 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்
என்ன இது ?! அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1226356
-

செய்தியின் அடியில்  விளம்பரமாக அந்த
செய்தித்தாளில் இருந்த வாசகம்,  தவறுதலாக
பதிவுடன் சேர்ந்து விட்டது...!
-
அவ்வாசகங்கள் நீக்கப்பட்டன்
அதன் பார்த்தேன் ,

அதை பார்த்துட்டு @மாணிக்கம் நடேசன் ஐயா ஒரே நச்சரிப்பு புன்னகை , எப்படி அதில் விளம்பரம் கொடுக்கணும்னு
மேற்கோள் செய்த பதிவு: 1226528

சிரிப்பு சிப்பு வருது பாவம் அவர்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
» ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum