ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

2 posters

Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Oct 31, 2016 8:09 am

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது;
இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்
-

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இந்த வருடம் வானிலை ஆய்வு மையம் கூறியபடி அக்டோபர் 30–ந்தேதி (நேற்று) வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

இன்று அநேக இடங்களில் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும். அல்லது அதை விட 10 சதவீதம் குறைவாக பெய்யும்.

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் 67 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம்.

இந்த ஆண்டு 39 செ.மீ. முதல் 44 செ.மீ. மழை வரை பெய்யும் என்று நீண்ட கால வானிலை கணித்துள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

காற்றழுத்த தாழ்வுநிலை
இதற்கிடையே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் ஆந்திர கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாகவும், இது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் தமிழ்நாட்டையொட்டியுள்ள பகுதிவரை இருப்பதாகவும் ஐதராபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

திருவையாறு 7 செ.மீ.
திருவையாறு 7 செ.மீ., தொழுதூர், வலங்கைமான், பெரம்பலூர் தலா 6 செ.மீ., முசிறி 5 செ.மீ., வேதாரண்யம், கந்தர்வகோட்டை, வெம்பாவூர், பெருங்கலூர், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம், ஜெயங்கொண்டம், மாயனூர் தலா 4 செ.மீ., மணமேல்குடி, பாபநாசம், நன்னிலம், குடவாசல், சிதம்பரம், பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், புள்ளம்பாடி, லால்குடி, வாடிப்பட்டி, அதிராம்பட்டினம் தலா 3 செ.மீ., திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், பரமக்குடி, கும்பகோணம், திருச்சி, திருவிடை மருதூர் தலா 2 செ.மீ., மேலும் கடலூர் உள்பட 20 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Oct 31, 2016 8:17 am

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) SJGTiOlLR9y3k46z1dUd+201610310545471921_Mamallapuram-Sea-furious_SECVPF
-

மாமல்லபுரம்

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக
திகழ்கிறது மாமல்லபுரம். இங்கு வரும் வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில்
பொழுதை போக்குவர்.

கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.
நேற்று மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் எழும்பி வந்தன.

அலையின் சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சிக்கி
படகுகள் தூக்கி வீசப்பட்டன. அப்போது மிதமான மழை
பெய்து கொண்டிருந்தது. கடல் நீர் கரைப்பகுதி வரை
உட்புகுந்து குளம் போல தேங்கி நின்றது.
-
-------------------------------
தினத்தந்தி








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Nov 01, 2016 7:28 am

நவம்பர் 1
-
சென்னை :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவ.,1)
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


24 மணி நேரத்தில்..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, நேற்று முன்தினம்
துவங்கியது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில்
மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 'வரும், 24 மணி நேரத்தில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி,
நிலத்திற்குள் நகர்ந்து, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா
சந்திக்கும் எல்லைப் பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.
அதனால், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில்
மழை பெய்யும்.

கேரளா, கர்நாடகாவிலும்...

மேலும் கர்நாடகாவில், மைசூரு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும்;
கேரளாவில், பாலக்காடு, அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழைக்கு
வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 7:56 am

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) NM0h5S7GTTa8k6W4Oez5+map(1)
-
தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில்
சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, புதுக்கோட்டை,
தஞ்சாவூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தலமலை,
கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில், கடந்த
2 நாள்களாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து
வருவதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில்
நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில்
8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி,
ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும்,
கரூர், சிவகிரி, காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ.
மழையும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல், அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்று,
காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்காக
நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்
தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்.

———————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by M.Jagadeesan Wed Nov 02, 2016 8:19 am

வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது
...வசந்தங்கள் வாழ்விலே மலர விட்டது !
அடமானம் வைத்த நகைநட்டுகள் எல்லாம்
...அதிவிரைவில் மீட்டெடுக்கும் காலம் வந்தது .
முடமான விவசாயி முகங்கள் தன்னிலே
...முழுமதிபோல் ஒளிவீசும் சிரிப்பு வந்தது !
குடகுமலை பெய்கின்ற மழையின் வரவால்
...காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரட்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 8:48 am

M.Jagadeesan wrote:வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது
...வசந்தங்கள் வாழ்விலே மலர விட்டது !
அடமானம் வைத்த நகைநட்டுகள் எல்லாம்
...அதிவிரைவில் மீட்டெடுக்கும் காலம் வந்தது .
முடமான விவசாயி முகங்கள் தன்னிலே
...முழுமதிபோல் ஒளிவீசும் சிரிப்பு வந்தது !
குடகுமலை பெய்கின்ற மழையின் வரவால்
...காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரட்டும் !
மேற்கோள் செய்த பதிவு: 1225927
-
நல்லதே நடக்கும் என நம்புவோம்...

-
குறுவை சாகுபடிக்கு காவிரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை,
சம்பா ஆகிய இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.
-
இரு போகத்திலும் சேர்த்து 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி
நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்
போல ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டுமானால்
அணையில் குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும்.
-
அணைக்கு நீர்வரத்தும் கணிசமான அளவு
இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு குறுவைக்கு
மேட்டூர் அணை திறக்கப்படும்
-
கடந்த 2011ம் ஆண்டு மேட்டூர் அணையில் அதிக அளவு
தண்ணீர் இருந்ததால் 6 நாள் முன்னதாக அதாவது,
ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது.
-
அந்த வருடம் குறுவை, சம்பா இரு போகமும் சாகுபடி
நடைபெற்றது.
-
அதன்பிறகு கடந்த 5 வருடங்களாக குறுவைக்கு தண்ணீர்
திறக்கப்படவில்லை.

-

-------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  (தொடர் பதிவு) Empty Re: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum