ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...

2 posters

Go down

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Empty மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...

Post by muthupandian82 Mon Oct 17, 2016 11:41 pm

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
அதிகம் பேசாதவர் அதிகம் செயல்படுவார்
என்று சொல்வதுண்டு..வாயினால் பேசாமல் இருந்தால் போதுமா..மனதினாலும் பேசாமல் இருக்கவேண்டும்..அதெப்படி வாயினால் ஒருவரை திட்டமுடியாது, ஆனால் மனதிலாவது திட்டிக்கொள்ளலாமே என்றுதானே சொல்கின்றீர்கள்..வாயினால் கூட ஒருவரை நேருக்கு நேர் பேசிவிடலாம், மனதால் ஒருவரை அவமதிப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனென்றால், மனதின் எண்ணங்கள் அவ்வளவு வலுவானவை..

மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்? மனம் எதையாவது சிந்தித்தவண்ணம் உள்ளதே.. அப்படியானால் மனம் எதையும் சிந்திக்காமல் வெற்றிடமாக இருப்பதற்கு பெயர்தான் அமைதியா..இல்லை மனதை எப்படி வைத்துக் கொண்டால் அமைதி பெறும்..சரி..இப்படி சிந்தித்து பார்ப்போம்.. போர்க்களத்தில்  பலர் இறந்து கிடக்கும் சூழலில் கூச்சலும், குழப்பமும் இருக்கும் இடத்தில் நாம் நின்று கொண்டு இருந்தால் நம் மனம் அமைதி பெறுமா..சரி,இப்போது நீரோடை நிறைந்த அருவியின் அருகில் மலர்கள் நிறைந்த தோட்டத்தில் அமர்ந்துள்ளீர்கள்..

இப்பொழுது மனதின் நிலை என்ன?எந்த சூழலில் இருக்கின்றிர்களோ அந்த சூழலின் பிரபாவம்
மனதின் மீது படுகின்றது..அது மனதை பிரபாவத்திற்கு உள்ளாக்குகின்றது.. இப்பொழுது அந்த போர்க்களத்தின் நடுவே நீங்கள் இருந்தாலும் அழகிய நந்தவனத்தை நோக்கி உங்கள் புத்தியை செலுத்துங்கள், அப்பொழுது மனதின் பிரபாவம் மாறுபடுவதை காணலாம்..நந்தவனத்திலிருந்து போர்க் களத்தின் துன்பத்தை யாரும் நினைக்க மாட்டார்கள்..

இதுதான் இறைவன் சொல்லும் வழியும் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் மனதை இந்த பாவ உலகத்திலிருந்து நீக்கி ஜோதியான என்னை நினைவு செய்யுங்கள்,
ஏனென்றால் இந்த உலகம் பாவங்களின் கூடாரமாக உள்ளது..மனதை சக்திசாலியான
ஒரு இடத்தில் செலுத்தும்பொழுது அது இயற்கையாகவே சக்தி நிரம்பியது ஆகி விடுகின்றது..எப்படி சூப்பர்மேன் பறப்பார், எதிரிகளின் சூழ்ச்சியால் தனது சக்தியை இழந்ததிற்கு பின்னால் ஒரு உயரமான மலை மீது கஷ்டப்பட்டு  ஏறி.. பிறகு, சக்தியை அடைந்து பறப்பார்.நமக்குவேண்டிய சக்திகள் அனைத்தும் ஒரு இறைவனிடம் உள்ளது, வார்த்தையைகவனியுங்கள் ஒருஇறைவனிடம் அந்த ஒரு இறைவனை நினைப்பதற்க்கே சக்தி தேவைப்படுமானால், முதலில் வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த வேண்டும்..

வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த என்ன செய்யவேண்டும்.. உங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதோ, சிந்திப்பதோ, கேட்பதோ கூடாது.. பல நாள் செய்த பாவத்தின் பலன்தான் மனமுடைந்து போவது..உடைந்த காலை ஒட்ட வைக்க ஒருமாதம் கட்டுப்போட வேண்டுமென்றால்..உடைந்த மனதை ஒற்றுமை படுத்த நல்ல எண்ணங்களால் கட்டிப்போட வேண்டும்..மனம் உடைத்தவர் செய்யும் பெரிய தவறு மீண்டும்..மீண்டும்.. பலஹீனமானதை சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகும்.. நல்லது நடக்கும் வரை நல்லதை சிந்திக்க வேண்டும்..பிறகு அதே பழக்கம் ஆகிவிடும்..

மனம் வெறுத்து துன்பப் பட்டு இருக்கின்றேன் இந்த நேரத்தில் எனக்கு நல்லதை சிந்திக்க கூட என்னிடம் சக்தி இல்லை என்கின்றீர்களா, கண்டிப்பாக உங்களுக்கு இந்த துன்பம் போகவேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு பரிகாரம்தான் உங்கள் மீது நீங்கள் செலுத்தும் நல்ல எண்ணங்கள், ஹனுமான் தனது பலத்தை மறந்து கடலைகடக்க தயங்கி நின்ற வேளையில் அவரை கடலைகடக்க வைத்தது சக்திசாலியான எண்ணங்கள்தான்..

எப்படி ஒரு முனிவரும், விபச்சாரம் செய்யும் பெண்ணும் எதிரெதிர் வீட்டில் வசித்தனர்.. முனிவரின் வீட்டில் கேட்ட நாம கீர்த்தனைகள், உபதேசங்கள் அந்த பெண்ணிற்கு கேட்டுக் கொண்டே இருந்தது,கடவுளேஅந்தமுனிவரைப் போல சதாசர்வகாலமும் உங்களைநினைக்கும் பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டே இருந்தாள்..முனிவரோ,பஜனைகள் பாடினாலும், உபன்யாசம் செய்தாலும் எதிர் வீட்டில் இருப்பவள் எவ்வளவு மோசமான பெண் இவ்வளவு ஆண்கள் அங்கே செல்கின்றார்கள் மகாபாவி என்று வருவோரிடமும், போவோரிடமும் தூற்றிக் கொண்டே இருந்தார் மரணத்தின் சமயம் வந்தது..

முனிவர் நல்லடக்கம் செய்யப்பட்டார், ஆனால், எதிர்வீட்டு பெண்ணோ நல்லடக்கம் செய்ய ஆளில்லாமல் அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்டாள்,நற்பிறப்பு கிடைத்தும் பாவம் செய்பவர்களையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் முனிவர் நரகம் அனுப்பப்பட்டார், இழி தொழிலை செய்தாலும் மனதால் அது பிடிக்காமல் சர்வகாலமும் இறைவனை நினைத்தபடியால் அந்த பெண் ஸ்வர்க்கம் சென்றாள்..இது நாம் கேட்டு வந்திருக்கும் கதை..இது ஒரு மனிதனின் எண்ணம் அவனை எங்கே கொண்டு போய் சேர்க்கின்றது என்பதற்கான உதாரணம், ஆனால், உண்மை நிலை யாதென்றால் இறைவன் என்னை காப்பார் என்ற பரிபூரணமான நம்பிக்கை உள்ளவர் பாவத்தின் தொழிலை முதலில் கை விடுவார்,

இறைவன் கொடுக்கும் செல்வத்தை உலகில் யாராலும் வழங்கமுடியாது.சூழ்நிலை வந்தால் பாவம் செய்வது,பிறகு பாவத்தின் தண்டனை கிடைக்கும்பொழுது இறைவா இனி இதை செய்யமாட்டேன் என்பது..இதுவே வாழ்க்கை
ஆகிவிடும், தொடர்ந்து பாவம் செய்தால் அங்கே இறைவனும் தனது உதவியை நிறுத்தி விடுவார். எந்தவிஷயத்தில் நீங்கள் பாவத்தில் பலவீனமாக இருப்பீர்களோ அதில் பாஸாவதற்கு இறுதிவரை சோதனை வரவே செய்யும், அதனால் நேர்மையாக இருப்பதற்கு பழகவேண்டும்..எந்த ஒரு சோதனையாலும் நீங்கள் துன்பப்பட்டால் அது பாவத்திற்கு கிடைத்த தண்டனை..

எந்த ஒரு சோதனையையும் நீங்கள் சிரித்துக்கொண்டே கடந்துவிட்டால் நீங்கள் சத்தியமாக வாழ்ந்து கொண்டுள்ளீர்கள் என அர்த்தம்.எனவே, மனதை அமைதியாக வைக்க அமைதிக் கடலான ஜோதியான தந்தை சிவபெருமானிடம் மனதை செலுத்துவதே நிரந்தர தீர்வு..அப்பொழுதே மனம் அமைதி பெற்று இன்புறும்..வாழ்த்துக்கள்

Muga nool


இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Empty Re: மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...

Post by Ramalingam K Tue Oct 18, 2016 5:33 am

muthupandian82 wrote:மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
Muga nool
மேற்கோள் செய்த பதிவு: 1224723

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
இந்நான்கும் இழுக்கு என இயலுதலே மனத்தூய்மை.
அதில் கொஞ்சம் அன்பை வித்திட்டால்  போதும் .
மனவலிமை தானாகவே வந்துவிடும்.

சிவபெருமானுக்குச் சிரமம் தரவேண்டாம் அன்பு நண்பர் முத்துபாண்டியன் அவர்களே !
நம்மாலேயே நமக்கும் பிறருக்கும் நன்மை செய்ய முடியும் போது பிறரது தயவும் துணையும் ஏன்!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum