ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

2 posters

Go down

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Empty உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Post by Guest Sat Oct 01, 2016 6:03 pm

ஒரு விடயம் (விஷயம்-விடயம் என்ற சொல்லுக்கு பற்றியம் என்பது தான் சரியான தமிழ் சொல் என கணினி மொழிமாற்றி அகராதி சொல்கிறது) உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. ஆங்கிலத்தில் belief எனலாம்.இதற்கு எதிர் மூடநம்பிகை (Superstitious Belief/fetish) என சொல்லலாமா, அவநம்பிக்கை எனலாமா (disbelief/distrust ) தெரியவில்லை.

மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது.

சோதிடம்,மதம்,கடவுள்,சொர்க்கம்-நரகம்,மறுவாழ்வு,இலுமினாட்டி என பல நிரூபிக்கப்படாத வேறுபட்ட நம்பிக்கைகள். இவை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.தங்கள் நம்பிக்கைகள் சரியானது நியாயமானது உண்மையானது என நிரூபிக்க பல சாட்சியங்களை, ஆதாரங்களை அவர்கள் வைக்கவே செய்கிறார்கள்.

நாளை மீது வைக்கும் நம்பிக்கை இன்றைய வாழ்க்கையை தொடர வைக்கிறது. மருத்துவர் மீது வைக்கும் நம்பிக்கை நோயை குணமாக்குகிறது. இப்படி தொடரலாம்.......

அறிவியலிலுள்ள எடுத்துக்காட்டுகளெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். அறிவியலாளர்களும் பலவற்றை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் அவர்கள் தரவுகளை நிறுவுகிறார்கள்.பூமி எப்படி உண்டாயிற்று? சூரியன் கிரகமா நட்சத்திரமா? இப்படிப் பல கேள்விகள். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு ஒரு விடை தரப்படுகிறது. அது நம்பிக்கை. முற்றான ஆதாரங்கள் உண்டா? தெரியவில்லை.கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய், இப்படி தீர விசாரித்து அறிவது எல்லாம் மெய்யாகுமா? சந்தேகம் தான்.தீர விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கு கூறப்பட்ட வழக்குகளில் பல தப்பாகிப் போயிருக்கின்றன.

நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட விடயம் என்பது என் கருத்து. அதில் தலையிடுவது முறையற்றது. சோதிடத்தில் கடவுளில் இப்படி பல, அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம். அதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மூட நம்பிக்கை எனக் கேலி செய்வது சரியாக இருக்காது.

வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதுதான் சம்பவம்.............

எல்-சல்வடோர் என்ற நாட்டில் 69 வயதுடைய சந்தியாகோ சஞ்சை, 18 வருடங்களுக்கு முன்னர் கடவுள் தனக்கு கூறியதாக சொல்லி, நிலத்தில் கீழ் சுரங்கப்பாதையை தோண்ட ஆரம்பித்தார்.தினமும் அதிகாலை மூன்று மணியளவில் வேலையை தொடங்குகிறார். இறை உத்தரவை ஏற்று செய்வதாக சொல்லும் அவரை, முட்டாள் எனக் கிண்டலடித்தும்,தங்கம் தேடி செல்வதாகவும் கூறியும் கூட ,அவர் தனது வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.

கடவுள் நிறுத்தச் சொல்லும் வரை தோண்டிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிய அவர்,முடிவில் கடவுளிடம் இருந்து பரிசு கிடைக்கும் என்றும் நம்பினார்.
அவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த விரும்பவைல்லை.



இப்படியான பல நம்பிக்கைகள் நம் நாட்டிலும், உலகெங்கிலும் இருக்கவே செய்கிறது.

இதே போல் எல் பாசோவில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள செம்பு மலை ஊடாக -copper mountain- 32 வருடங்களாக வில்லியம் ஹென்றி பரோ என்பவர் 2087 அடி வரை சுரங்கப்பாதையை தோண்டிய நிலையில் தனது வேலையை முடிக்காமலேயே 1938 இல் அங்கிருந்து வெளியேறி விட்டார்.



ஒரு பெண்ணின் பின்னால் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் அவள் கடைக்கண் பார்வை கிட்டும் என நம்புகிறான். இதுவும் ஒரு நம்பிக்கைதான். அவள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் ஒருவன் கொலைகாரனாகிறான்,இன்னொருவன் திராவகம் வீசுகிறான்,இன்னொருவன் விலகிச் சென்று விடுகிறான். இது இன்றைய உலகம்.

இன்னொன்று இருக்கிறது,அது தன்னம்பிக்கை.

ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Empty Re: உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Post by T.N.Balasubramanian Sat Oct 01, 2016 6:31 pm

murthy wrote:வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

எனது இளமை பருவத்தில் , ஒரு மூதாட்டி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முருகன் மேல் பாடல்கள் பாடி ,பிக்ஷை வாங்கி செல்வார் . எதுவும் பேசமாட்டார் . பாடிக்கொண்டே இருப்பர் . பிக்ஷை போட்டவுடன் , அடுத்த வீட்டிற்கு செல்வார் .
அவருக்கு சண்டே ஸ்டாண்டர்ட் என்று புனைப் பெயர் வைத்தோம் அந்த காலத்தில் .
அதே போல் உங்களை
"வீக்-எண்டு ஃபீஸ்ட்"  ,"வீக் எண்டு ட்ரீட் "  என்று கூறலாமே .
சுவையாகவும்  சூடாகவும் தருகிறீர்களே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Empty Re: உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Post by Dr.S.Soundarapandian Tue May 16, 2017 10:47 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Empty Re: உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum