ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by ayyasamy ram Thu Sep 29, 2016 6:08 am

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! JeIgLcJeSQqhz6bBQpst+E_1475058099
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் மட்டும்
கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா?

திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை தரிசிக்க
வேண்டுமா?
பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை
வழிபட வேண்டுமா?

தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக
வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க
வேண்டுமா?
திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும்
பெருமாளை ஆராதிக்கவேண்டுமா?

இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல
வேண்டிய புனிதத்தலம்,
காரைக்கால் நித்ய கல்யாண ரங்கநாதர் கோயில்!

பார்வதிதேவி தன் அண்ணாவான பெருமாளைக் குறித்துத்
தவமியற்றிய தலம் இது. பெருமாள் தங்கையின் தவத்தை
மெச்சி காட்சியளித்தார்.

‘என்ன வரம் வேண்டும் தங்கையே?’ என்ற பெருமாள் கேட்க,
‘சாகம்பரி’ என்ற பெயரில் அவதாரம் செய்திருந்த
பார்வதிதேவி கேட்ட வரம் தனக்கல்ல; வரம் தர வந்தவருக்கே
வரம் தந்த வரம்!

‘அண்ணா, சகோதரனான நீ திருமணம் செய்து கொண்டு
ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக எனக்கு காட்சி தரவேண்டும்.
உன் திருமணத்தை நான் காண வேண்டும்’ தாய் – தந்தை
ஸ்தானத்தில் தன் திருமணப் பேச்சையே வரமாகக் கேட்ட,
புத்திசாலித் தங்கையை பெருமாள் பாசமாய்ப் பார்த்தார்.

‘தந்தே வரம்!’ என்றார். தங்கைக்கு மட்டுமல்ல..
தன்யர்களாகிய நமக்கும் சேர்த்துத்தான் நித்ய கல்யாண
ரங்கநாதராக இன்றும் என்றும் அருள் வழங்கி வருகிறார்
பெருமாள்.

திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரிலேயே உள்ள
கைலாயநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty Re: ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by ayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am

ஆதிஅந்தமிலாத ஈசனே தமது திருவாக்கினால், ‘அம்மையே’
என்று அழைத்த காரைக்கால் அம்மையார் கோயில் பெருமாள்
கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

இம்மூன்று கோயில்களுக்கும் பொதுவானது, சந்திர புஷ்கரணி
தீர்த்தக்குளம். இதில் நீராடி, பகவானை தரிசித்தால் சந்திர
தோஷமும் திருமணத் தடையும் நீங்குகிறதாம்!

108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றான திருக்கண்ணபுரத்தின்
அபிமான தலமாக இது விளங்குகிறது.

தாயார், ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார்,
ஆழ்வார் சன்னதிகள் என நியமப்படி எல்லா சன்னதிகளும்
உள்ளன. அபிஷேக, ஆராதனைகளும், விழாக்களும்
பிரம்மோற்சவமும் திவ்ய தேசங்கள் போலவே வெகு சிறப்பு
இங்கே.

ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு ஸ்ரீரங்கம் போலவே சிவப்பு
ரத்னாங்கி சேவை, மூலவருக்கு வஜ்ராங்கி எனப்படும்
விலையுயர்ந்த கற்களாலான வஸ்திர அலங்காரம்.
இக்கோயில் பாண்டிச்சேரி அரசின் அறநிலைத்துறையால்
நிர்வாகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் மாசி மாதம்
நிகழ்கிறது.

கருட பஞ்சமி அன்று இத்தலத்தில் 7 கோயில பெருமாள்கள்
கருட வாகனத்தில் கூடுகின்றனர். ஒரு கருடவாகனரைப்
பார்த்தாலே பரமபதம் கிட்டும் எனில் ஏழு பேரை ஒரே இடத்தில்
சேவிப்பது மகாபாக்கியம்.

நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப்
பெருமாள், தென்னங்குடி வரதராஜப்பெருமாள், கோயில் பத்து
கோதண்டராமப் பெருமாள், திருமலைப்பட்டினம் இரு
பெருமாள்கள், காரைக்கால் பெருமாள் என அந்த எழுவர் தான்
இங்கு அன்று எழுவர்!

புண்டரிக மகரிஷியும், பராசர மகரிஷியும் இப்பிரதேசத்தில்
தவம் இயற்றியவர்கள். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டு மக்கள்
பரிதவிக்க, இவர்கள் இருவரும் பெருமாளைக் குறித்து தவம்
செய்து நீர்வளம் கேட்டனர்.

பெருமாள் ரங்கநாதராக காட்சி தந்து, அரிசில் ஆறு எனப்படும்
காவிரியின் கிளை நதியை இப்பிரதேசத்தில் பாயவிட்டார்.
ஹரி தந்தால் ஹரி சொல் ஆறு. அதுவே தற்போது அரிசிலாறு…
அரிசிலாறு!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty Re: ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by ayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am


இத்தலத்தில் மூலவரான ரங்கநாதர் இங்கு வந்து சேர்ந்ததற்கும்
ஒரு வரலாறு உண்டு. அது பெருமாளே இங்கு விரும்பி வந்து
சேர்ந்ததை விளக்கும்.

சிறுபுலியூர் என்றொரு பெருமாள் தலம் அருகில் உள்ளது.
அங்குள்ள மூலவருக்கு தயாநிதிப் பெருமாள் என்னும் திருநாமம்.
அக்கோயிலுக்காகச் செய்யப்பட்டவர்தான் இந்தப் பெருமாள்.
ஆற்று வழியாக படகில் இருந்தத் திருமேனியைக் கொண்டு
வருகையில் சிறுபுலியூரில் கரையேறாமல், ஆற்று வௌ்ளத்தில்
இங்கே வந்து நிலை கொண்டார் பெருமாள்.

இப்போது காரை மக்களின் பக்தி வௌ்ளத்தில் அருள் ஆட்சி
செய்து வருகிறார்.

நித்ய கல்யாண ரங்கநாதரை தரிசிப்போருக்கு அனைத்து
நலமும் வளமும் நிச்சயம்!

எங்கே இருக்கு: காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து
500 மீட்டர் தூரம். நடந்தே போகலாம்.

தரிசன நேரம்: காலை 7-12; மாலை 5-9.

———————————

– சிங்காரவேலன்
குமுதம் பக்தி செய்திகள்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty Re: ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum