ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by ayyasamy ram Wed Sep 28, 2016 4:40 pm


 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? IQElZZ2uQqm9KJ5JwQKy+kanchi_2861159f

-
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம் தீர்த்தம் முதலிய
பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும்.

நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும்
பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களை
எல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம்
செய்து கரைத்திட வேண்டும்.
-
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்
படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை
என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
-
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட
வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம்
பரம லேசாகிவிடும்.
-
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன்
பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள்
ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும்
தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும்
என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும்,
இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம்
ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி
எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும்
அதோடு விட்டுவிடுவோம்.

ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
-
---------------------------------------
--காஞ்சிப்பெரியவர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by M.Jagadeesan Wed Sep 28, 2016 6:51 pm

துன்பத்தில் மட்டும் கடவுளை நினைக்கின்றான் !
...துன்பம் தீர்ந்திடவே யாகங்கள் செய்கின்றான் !
என்குடும்பம் என்மக்கள் என்மனைவி என்றே
...எப்போதும் தன்னலத்தைப் பேணி வளர்க்கின்றான் !
மன்பதை மாநிலத்தில் படுகின்ற துயரத்தை
...மறந்தும் ஒருநாளும் மனதில் நினைப்பதில்லை !
தின்பதும் உறங்குவதும் வாழ்வென்று நினைக்கின்றான்
...தினந்தோறும் பாவங்கள் செய்து மடிகின்றான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by T.N.Balasubramanian Wed Sep 28, 2016 7:05 pm

கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி
எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும்
அதோடு விட்டுவிடுவோம்.

மனித குணம் -மாறாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by M.Jagadeesan Wed Sep 28, 2016 7:13 pm

உண்மைதான் !

இன்பத்தில் யாரும் இறைவனை நினைப்பதில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by T.N.Balasubramanian Wed Sep 28, 2016 7:20 pm

ஆம் , இன்பமாக இருக்கும் போது , வேண்டாத தனி திமிரும் வந்து விடுகின்றது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by M.Jagadeesan Thu Sep 29, 2016 6:47 am

வசைபாடக் காளமேகம் என்று சொல்வார்கள் . மனிதர்களையே வசை பாடிக்கொண்டிருந்த காளமேகம் ,ஒருமுறை சிவன் ,திருமால் ,பிள்ளையார் என்று எல்லா கடவுளர்களையும் வசைபாடத் தொடங்கிவிட்டார் . என்ன கோபமோ தெரியவில்லை . ஆனாலும் அந்த வசைச் சொற்களைக் கேட்பதில்தான் எத்தனை இன்பம் !

தஞ்சைப் பகுதி புள்ளிருக்கு வேளூரில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் வழிபட்டவரின் நோய்களையெல்லாம் தீர்ப்பார் என்பது ஐதீகம். தனக்கும் தன் உறவினர்களுக்கும் இருக்கும் நோய்களையே தீர்த்துக்கொள்ளாத வைத்தியநாதர் நமது எந்தத் தீவினைகளைத் தீர்த்துவைப்பார் என்று வேடிக்கையாகப் புலவர் வினவும் பாடல் இது.


பாடல்

வாதக்காலாந் தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப்பெரு வயிறாம் புத்திரனுக்கு - ஓதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியான்  வேளூரான்
எந்தவினை தீர்த்தா  னிவன்.



•சிவனுக்கோ  வாதக்கால். ஆடும்போது ஒருகால் வரவில்லை.
•மைத்துனன் திருமாலுக்கு நீரிழிவு. பாற்கடல் நீரிலேயே கிடக்கிறார்.
•மகன் பிள்ளையாருக்குப் பொதுபொது என்று இருக்கும் பெரிய வயிறு.
•சொல்கிறேன் கேளுங்கள்.
•தமக்கும் தம்மவருக்கும் வந்த தீவினைகளைப் போக்கிக்கொள்ள முடியாத இவர் நமக்கு வந்திருக்கும் எந்த வினையைத் தீர்த்துவைப்பார்?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Ramalingam K Thu Sep 29, 2016 7:03 am

கவி காளமேகம் சிலேடை படச் செப்பி இருப்பினும், உண்மையையே உரைத்துள்ளார்

செய்த வினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம் – வையத்துள்
அரும்பாவம் என்றறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல் - நம் ஔவை

எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. - இதுவும் ஔவை

நடந்தது -நடப்பது -நடக்க இருப்பது யாதும் நன்மைக்கே - நம் விதியின் பதிவுகளின் அழிதல்தானே ஐயா.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by SRINIVASAN GOVINDASWAMY Thu Sep 29, 2016 11:56 am

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

நாம் செய்யும் கர்மதிற்கான (நல் வினை மற்றும் தீவினை ) பலன் சர்வ நிச்சயம்.
அதனாலேயே பகவான் கர்மத்தை  கர்மயோகமாக செயல்படுத்த வலியறுத்துகிறார்.

கர்மயோகத்தில் கர்மத்தின் பலா பலன்கள்  நம்மை பாதிப்பதில்லை.

கர்மயோகம்

பலனில் பற்றுவைக்காமல் , தர்மத்தில் நின்று  முழுமனதுடன் (மனம் , சொல் , செயல் ) , மகிழ்ச்சியாக  காரியங்களில்  ஈடுபடவேண்டும்.
மேலும் காரணம் அவன் கருவி நாம் என முழு நம்பிக்கையுடன் பகவானுக்கு  அர்ப்பணிக்கவேண்டும்.

கர்மயோகம் சரி ஆனால் எது தர்மம் என்று தெரியவில்லையா?

வேதகாலத்தில் தான் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பொதுவான  தர்மம் , தொழில் தர்மம் என வேறுப்பட்டன. இப்பொது அனைவரும் அனைத்து தொழில்களையும் செய்வதால் உலக தர்மத்தை கடை பிடித்து கர்மத்தை கர்மயோகமாக செய்யலாம்.

பாவம் செய்துவிட்டு  பரிகாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி என்பது முற்றும்  இல்லை. வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆகா வேண்டும்.  

கர்மபலனை நிர்ணயிப்பதே காலா தேவனின்  முதற்கடமை. அதனை நிறைவேற்றுவதே (தக்க காலத்தில் தக்க பலன்)  நவகிரகங்களின்  பணி.

பரிகாரங்கள்  செய்வதால்  ஏற்படும் நன்மைகள் :

1.பாவம் செய்வதை குறைத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கு ஏற்படும்.

2. கஷ்டத்தை தாங்க மன வலிமை கூடும்.

3. பரிகாரத்தின்  போது செய்யும் நல்ல கர்மத்தினால் , கஷ்டத்தின்  தாக்கம் குறையலாம்.

ஒவ்வொரு வினைக்கும்  அதற்கு இணையான பலன் என்பது சர்வ நிச்சயம். இதை பகவான் கூட மற்ற முடியாது.  

நன்றி

வாழ்க வளமுடன்

ஸ்ரீனி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Ramalingam K Thu Sep 29, 2016 1:50 pm

"அவரவர் இறையவர்   குறைவிலர்  இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே"

என்பது நம்மாழ்வார் திருமொழி .

விதி வழியே இறை நிற்கும்போது  பரிகாரம் என்பது மனமாயையே      தவிற பிற பலனளிப்பதாகுமோ என்பது நியாயமான சந்தேகமே அடியனுக்கு.

செய்தப் பாவம் பயனளிக்காமல் போகா. அதற்குப்  பரிகாரமாவது அப்பாவத்தை உணர்ந்து இனி வருங்காலங்களில் அத்தகைய பாவங்களைத் தவிர்த்தலாகத் தான் இருக்க முடியும்.

இன்னபிற பரிகாரம் எல்லாம் வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு வெல்லம் சாப்பிடக் கொடுப்பதே. முயற்சியும், பணவிரையமும், காலமும் தேவைப்படாமலேயே வீணடிப்பவை என்பது  அடியனின் கருத்து  ஆராய்ந்து  பார்த்தால்.

வேண்டுதல் வேண்டாமை இலானாகும் பரம்பொருளுக்குப்  பரிகாரம் வேண்டுவதில்லை.

கீதையில் பகவான் ஒரு இலையோ, பூவோ  அல்லது ஒரு  துளி நீரோ தனக்குத் தன் பக்தன் கொடுக்கலாம் என்பது வியாசரின் வேலையாகத் தான் இருக்க முடியும்.

பகவன் அருளாளன்- அவன் கொடுப்பதைத் தவிற கொள்வதில்லை எதனையும் இவ்வுலகத்தில்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by சிவனாசான் Thu Sep 29, 2016 3:00 pm

நல்ல கருத்துள் விளைந்துள்ள பகுதி.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum